தக்காளி சாதம் சாப்பிடுற அளவுக்கெல்லாம் பணக்காரங்க இல்லங்க.. சிக்கன் பிரியாணி மட்டும் கொடுங்க போதும்!
சென்னை: இந்தத் தக்காளிதான் விலை குறையாமல் நம்மை பாடாய்படுத்துகிறது என்றால், அதை மறக்க விடாமல் மீமர்களும் திரும்பத் திரும்ப தக்காளி பற்றிய மீம்ஸ்களாகவே பகிர்ந்து, தக்காளிச் சட்னியையும், தக்காளிச் சோறையும் ஞாபகப்படுத்தி, நம் வெந்த புண்ணில் வேலை பாய்ச்சி வருகின்றனர்.
தக்காளிக்கு சரியான விலை கிடைக்கவில்லை என விவசாயிகள் அதனை சாலையில் கொட்டிய காலம் போய், தக்காளி வாங்குவதற்கே சம்பளத்தில் தனி பட்ஜெட் போடும் அளவிற்கு தாறுமாறாய் விலை உயர்ந்து கிடக்கிறது தக்காளி விலை. தக்காளி நம் சாப்பாட்டில் தவிர்க்க முடியாத முக்கியமான பொருள் என்பதால், தக்காளியை அதிக விலை கொடுத்து வாங்கவும் முடியாமல், சமையலில் தக்காளியைத் தவிர்க்கவும் முடியாமல் இருதலைக் கொள்ளி எறும்புகளாய் தவித்து வருகின்றனர் நடுத்தர வர்க்கத்தினர்.

இப்படி தக்காளி நம்மை ஒரு பக்கம் வைத்து செய்து வரும் நிலையில், அதற்கு பழி வாங்கும் விதமாக மீமர்களும், தக்காளியை வைத்து விதவிதமான மீம்ஸ்களாகப் பகிர்ந்து வருகின்றனர். விற்கிற விலைக்கு கொஞ்ச நாளைக்கு தக்காளி பக்கமே தலைவைத்துப் படுக்காமல் இருக்கலாம் என்றால், இந்த மீம்ஸ்கள் நம்மை விடுவதாய் இல்லை. எந்தப் பக்கம் திரும்பினாலும் தக்காளி மீம்ஸ்தான்.
இதோ அப்படியாக சமூகவலைதளப் பக்கங்களில் நம் கண்ணில் பட்ட நகைச்சுவையான தக்காளி பற்றிய சில மீம்ஸ்களின் தொகுப்பு உங்களுக்காக...





-
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
வெயில் கொடுமை! உடல் சூட்டை தணிக்கும் 5 அற்புத உணவுகள்! இளநீர் குடிக்கும் போது அந்த தவறை செய்யாதீங்க! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன்












Click it and Unblock the Notifications