சூரிய கிரகணம், சந்திர கிரகணம் இதெல்லாம் ஓகே.. இது என்ன புதுசா ‘வாட்ஸ் அப்’ கிரகணம்?
சூரிய கிரகணத்தையும், வாட்ஸ் அப் முடங்கியதையும் சேர்த்து மீம்ஸ்களாகப் பகிர்ந்து வருகின்றனர் குறும்புக்கார மீமர்கள்.
சென்னை: காக்காய் உட்கார பனம்பழம் விழுந்த கதையாக, சூரிய கிரகண நாளன்று, வாட்ஸ் அப் சில மணி நேரம் முடங்கிப் போக, 'கூட்டிக் கழிச்சுப் பாருங்க கணக்கு சரியா வரும்' என இரண்டையும் கோர்த்து மீம்ஸ் கண்டெண்ட் ஆக்கி விட்டார்கள் நெட்டிசன்கள்.

இந்தியாவில் மட்டுமின்றி உலகின் பல்வேறு பகுதிகளில் நேற்று மாலை சூரியகிரகணம் காணப்பட்டது. சூரிய கிரகணத்தில் சாப்பிடக்கூடாது, வெறும் கண்ணில் சூரியனைப் பார்க்கக் கூடாது என பல கூடாதுகளை வீட்டில் உள்ளவர்கள் குடும்பத்தினருக்கு அறிவுறுத்திக் கொண்டிருந்தனர்.

இது ஒருபுறம் என்றால், நேற்று மதியம் திடீரென வாட்ஸ் அப் சில மணி நேரங்கள் முடங்கியது. இதுவும் சூரியகிரகணத்தைப் போலவே பல நாடுகளில் ஏற்பட்டது. 'என்னதான் ஆச்சு இந்த வாட்ஸ் அப்புக்கு?' என மக்கள் விளம்பரப் பட வாய்ஸில் டிவிட்டர், பேஸ்புக் என மற்ற சமூகவலைதளப் பக்கங்களில் ஒருவரை ஒருவர் விசாரித்துக் கொண்டனர்.

இப்படியாக இரு வெவ்வேறு நிகழ்வுகளை ஒன்று சேர்த்து, தங்கள் மீம்ஸுக்கு கண்டெண்ட் ஆக்கி விட்டனர் குறும்புக்கார மீமர்கள். சூரிய கிரகணத்தால்தான் வாட்ஸ் அப் செயலிழந்தது என சைடு கேப்பில் பற்ற வைத்து விட்டனர். பல பாமரர்களும் மற்ற மூடநம்பிக்கைகளைப் போலவே இதையும் உண்மையென நம்ப, பிறகென்ன, 'கண்ணா இன்னொரு லட்டு சாப்பிட ஆசையா? என அதையும் ஒரு கண்டெண்ட் ஆக்கி விட்டனர்.

நேற்றில் ஆரம்பித்து, இன்றும் சூரிய கிரகணத்தால்தான் வாட்ஸ் அப் செயல் இழந்தது என ஜாலியாக நகைச்சுவையான மீம்ஸ்களை இணையத்தில் பகிர்ந்து வருகின்றனர். இதோ நம் கண்ணில் பட்ட சில நகைச்சுவையான மீம்ஸ்கள் உங்களுக்காக..

-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications