கடந்த காலத்துக்கு போய்.. கிருஷ்ணரோட கால்ல விழுந்து.. நரகாசுரனைக் கொன்னுடாதீங்கன்னு கெஞ்சப் போறேன்!
தீபாவளி பற்றிய நகைச்சுவையான மீம்ஸ்கள் இணையத்தில் அதிகம் பகிரப்பட்டு வருகின்றன.
சென்னை: தீபாவளி என்றால், பட்டாசு, பட்சணம் பற்றித்தான் கலாய்க்க வேண்டுமா என்ன? நாங்களாம் வேற மாதிரி, தீபாவளியையே கலாய்ப்போம்..' என மாற்றி யோசித்து இணையத்தை கலகலக்க வைத்துள்ளனர் நெட்டிசன்கள்.
எப்போதுமே பெரியவர்களைவிட, குழந்தைகளுக்குத்தான் தீபாவளி பற்றிய குதூகலம் அதிகம். அதற்குக் காரணம் பணம்... ஒரு மாத சம்பளத்தையும் ஒரு நாள் தீபாவளி கரியாக்கி விடுமே என்ற கவலை நடுத்தர குடும்பத்தினருக்கு.. 'பேசாமல் நரகாசுரனை பெரிய மனதோடு கிருஷ்ணன் மன்னித்திருக்கலாம்...' என்பதுதான் பலரது மைண்ட் வாய்ஸ். இதை வைத்துதான் இணையத்தில் பல மீம்ஸ்கள் பகிரப்பட்டு வருகின்றன.
கடந்த ஆண்டுகளில் இந்த மீம்ஸ்தான் அதிக லைக்ஸ்களைக் குவித்தது என்பதால், திரும்பத் திரும்ப அதையே பகிரத் தொடங்கி விடுகின்றனர் என சொந்தக் காசில் தங்களைத் தாங்களே கலாய்த்துள்ளனர் மீமர்கள்.
இப்படியாக தீபாவளியை வைத்து விதவிதமாய் நகைச்சுவையான மீம்ஸ்கள் சமூகவலைதளங்களில் பகிரப்பட்டு வருகின்றன.



















Click it and Unblock the Notifications