Memes: இட்லிக்கு தொட்டுக்க என்னம்மா! டப்பாவுல முறுக்கும் அதிரசமும் இருக்கு தொட்டுக்கோப்பா!
சென்னை: தீபாவளி பலகார பரிதாபங்கள் என்ற பெயரில் ஆண்டுதோறும் புது புது மீம்ஸ்கள் வருகின்றன. அவற்றில் வயிறு குலுங்க சிரிக்க வைக்கும் மீம்ஸ்களை பார்ப்போம்.
தீபாவளி என்றாலே பலகாரம்தான் நினைவுக்கு வரும். இந்த பலகாரம் மாதக்கணக்கில் சாப்பிட்டாலும் காலியாகாமல் இருக்கும். காரணம், நிறைய உறவினர்கள் அவரவர் செய்த பலகாரங்களை கொடுப்பர். இந்த பலகாரங்கள் காலியாகும் வரை சாம்பார் சாதம், ரசம் சாதம், தயிர் சாதம், காரக் குழம்பு, கீரைக் குழம்பு... இத்தனை ஏன் பிரியாணிக்கு கூட முறுக்கும், தட்டையும்தான் சைட் டிஷ்! அந்த வகையில் தீபாவளி பண்டிகையையொட்டி வந்துள்ள மீம்ஸ்கள் இதோ:

தீபாவளி முடிந்ததும் 3ஆம் நாள் மகன் தனது தாயிடம் அம்மா பசிக்குது, இட்லிக்குத் தொட்டுக்க என்ன கறிக்குழம்பா என கேட்கிறார். அதற்கு அம்மாவோ இல்லை இல்லை முறுக்கும் அதிரசமும் என்கிறார். சாம்பார் சாதம், தயிர் சாதம் கூட ஓகே, இட்லிக்கு கூடவா முறுக்கை தொட்டுக்குறது. ஒரு நியாயம் வேண்டாமா மம்மீஸ்!

முறுக்கும் அதிரசமும் இருக்கும் வரை எங்களுக்கு ஸ்னாக்ஸுக்கு இன்னும் 1 மாசத்திற்கு பஞ்சமே இல்லை என வடிவேல் காமெடியை வைத்து மீம் வைரலாகி வருகிறது.

இனி முறுக்கு முடியும் வரை சாம்பார சாதம் முதல் தயிர் சாதம் வரை... சைட் டிஷ்ஷாக இருக்குமே! என ரஜினியின் புகைப்படத்தை வைத்து மீம் வைரலாகி வருகிறது.

அடுத்தவங்களுக்கு நல்லது நெனச்சா.. நமக்கு.. ? நல்லது நடக்குமா..? அதான்.. இல்லை நம்ம தலையில் மிளகாய் அரச்சிறுவாங்க என நடிகர் சரத்குமார், வடிவேல் காமெடியை இந்த மீம் விளக்குகிறது.

தீபாவளிக்கு ஒரு குடும்பத்திற்கு ரூ 5000க்குள் துணிமணி எடுக்கலாம் என திட்டமிட்டால் அந்த செலவு எங்கோ போய்விடும். அதிலும் பட்டாசுகளின் விலை அதிகமாக இருப்பதால் கணிசமான பட்டாசுகள் வேண்டுமானால் ரூ 2 ஆயிரத்திற்கு குறைந்து இல்லை. அதைதான் இந்த மீம் விளக்குகிறது. பேசாமல் தீபாவளிக்கு நரகாசுரனை மன்னிச்சி விட்டிருக்கலாம் போல!












Click it and Unblock the Notifications