கில்லி படத்துக்கு போகலாம் வானு கூப்பிட்டா.. ரிவ்யூ கேட்டுட்டு போகலாம்னு சொல்றான் சார்!
சென்னை: கில்லி படம் ரீரிலீஸ் செய்யப்பட்டிருப்பதை மீம்ஸ் போட்டு கொண்டாடி வருகின்றனர் நெட்டிசன்கள்.
மனித மனம் காலத்திற்கு தகுந்தாற் போல் மாறும் என்பதற்கு கில்லி பட ரீரிலீசே சாட்சி. சுமார் 20 வருடங்களுக்குப் பிறகு மீண்டும் ரீரிலீஸ் செய்யப்பட்டுள்ள இப்படத்தில் விஜய் மற்றும் திரிஷா நாயகன் நாயகியாக நடித்துள்ளனர். வில்லனாக பிரகாஷ்ராஜ் மிரட்டியிருப்பார். 20 வருடங்கள் ஆன பிறகும் மக்கள் இப்படத்தைக் கொண்டாடுவது, நல்ல படங்களுக்கு எப்போதுமே வரவேற்பு இருக்கும் என்பதையே காட்டுகிறது.

ஆனால், அப்போது நாயகனான விஜய்யை கொண்டாடியது போல், இப்போது வில்லன் பிரகாஷ்ராஷின் கதாபாத்திரமான முத்துப்பாண்டியையும் மீம்ஸ் போட்டு நெட்டிசன்கள் கொண்டாடி வருவது ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.
தனலட்சுமி (அதாங்க திரிஷா..) முத்துப்பாண்டியையே திருமணம் செய்திருக்கலாம் என்பதற்கு அவர்கள் கூறும் காரணங்கள் நினைத்து நினைத்துப் பார்க்க சிரிக்க வைக்கின்றன. இதோ அப்படியாக சமூகவலைதளப் பக்கங்களில் நம் கண்ணில் பட்ட நகைச்சுவையான கில்லி பட மீம்ஸ்களின் தொகுப்பு உங்களுக்காக...





















Click it and Unblock the Notifications