கோட் படத்துல லியோ தாஸ் ஒய்ப் ஆடுச்சே பார்க்கலையா நீங்க.. அதாங்க எல்சியு கனெக்ட்!
சென்னை : கோட் படத்தில் லியோவின் மனைவி மட்ட பாடலுக்கு நடனமாடி இருப்பதால், அதில் எல் சி யு கனெக்ட் இருப்பதாக விதவிதமான மீம்ஸ் போட்டு கலாய்த்து வருகின்றனர்.
மீம்ஸ் போட்டு கலாய்ப்பதென்று முடிவு செய்து விட்டால், அது முன்னணி நடிகர்களின் படமாக இருந்தாலும் பாராபட்சம் பார்ப்பதில்லை நம் நெட்டிசன்கள். அப்படித்தான் சமீபகாலமாக ரிலீசான இந்தியன் 2, ராயன் மற்றும் கோட் போன்ற படங்களைக் கலாய்த்து வருகின்றனர்.
அந்தவகையில் கோட் படத்தில் திரிஷா ஒரு பாடலுக்கு நடனமாடி இருப்பதை வைத்தும், தற்போது அதிக மீம்ஸ்கள் இணையத்தில் பகிரப்பட்டு வருகின்றன. குறிப்பாக அவர் மஞ்சள் சேலை கட்டி ஆடியதை வைத்து ரீல்ஸ் செய்பவர்களை மீம்ஸ் போட்டு கலாய்த்த நெட்டிசன்கள், தற்போது கோட் படத்தில் எல்சியு கனெக்ட் இருப்பதாக கலாய்த்து வருகின்றனர். இதென்ன புதுப்புரளியாக இருக்கிறதே எனக் கேட்டால், 'லியோ தாஸின் மனைவி மட்ட பாடலுக்கு ஆடி இருக்கிறார்' என மீம்ஸ்களில் விளக்கம் வேறு கொடுக்கிறார்கள்.
இதோ அப்படியாக சமூகவலைதளப் பக்கங்களில் நம் கண்ணில் பட்ட கோட் பட மீம்ஸ்களின் தொகுப்பு உங்களுக்காக...










Click it and Unblock the Notifications
