குரு பெயர்ச்சி பலன் 2024: குரு பார்வை.. கல்யாண வயசுதான் வந்துருச்சு.. யாரெல்லாம் பாடப்போறீங்க
சென்னை: குரு பகவான் மேஷ ராசியில் பயணம் செய்கிறார் குருவின் பார்வை சிம்மம், துலாம், தனுசு ராசிகளின் மீது விழுகிறது. வரும் மே 1ஆம் தேதி முதல் ரிஷப ராசிக்கு பயணம் செய்யும் குரு பகவான் தனது பயணம் மற்றும் பார்வையால் துலாம், விருச்சிகம், தனுசு, மகரம், கும்பம், மீன ராசிகளில் பிறந்தவர்களுக்கு என்ன பலன் தரப்போகிறார் என்று ஜோதிடர் ஒருவர் மீம்ஸ் வடிவத்தில் பலன்களை பதிவிட்டுள்ளார்.
மேஷம் குடும்ப குரு: ஜென்ம ராசியில் உள்ள குரு பகவான் குடும்ப ஸ்தானத்திற்கு போகிறார். குருவின் பார்வை பத்தாம் வீடான தொழில் ஸ்தானத்தின் மீது விழுவதால் நல்ல வேலை வீடு தேடி வரப்போகிறது. அதைத்தான் இந்த மீம்ஸ் கிரியேட்டர் பதிவிட்டுள்ளார்.

ரிஷபம் ஜென்ம குரு: விரைய ஸ்தானத்தில் உள்ள குரு பகவான் உங்கள் ஜென்ம ராசிக்கு வரப்போகிறார். குருவின் பார்வை உங்களுக்கு சாதகமாக இருந்தாலும் ஜென்ம குரு மன உளைச்சலை தரப்போகிறார். அவசரப்பட்டு எந்த முடிவுகளும் எடுக்காதீர்கள்.

மிதுனம் விரைய குரு: லாப வீட்டில் உள்ள குரு பகவான் மே மாதம் முதல் விரைய ஸ்தானத்திற்கு வரப்போகிறார். குருவின் பார்வையும் பயணமும் சாதகமாக இருப்பதால் குடும்ப ஒற்றுமை அதிகரிக்கும்.

கடகம் லாப குரு: பத்தாம் வீட்டில் உள்ள குரு பகவான் வேலை தொழிலில் சின்னச் சின்ன சங்கடங்களை கொடுத்து வருகிறார். குரு மே 1ஆம் தேதி முதல் லாப ஸ்தானத்திற்கு செல்லப்போவதால் தொழில் வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும்.

சிம்மம் தொழில் குரு: பாக்ய ஸ்தான குருவின் பார்வை மே மாதம் வரைக்கும் உங்கள் ராசிக்கு கிடைக்கிறது. குருவின் பார்வையால் திருமண யோகம் கைகூடி வந்துள்ளது. குரு பகவான் மே மாதத்திற்கு மேல் பத்தாம் வீட்டிற்கு இடப்பெயர்ச்சி அடைந்தாலும் பார்வை குடும்ப ஸ்தானத்தில் விழுவதால் புதிய வாழ்க்கையில் அடி எடுத்து வைக்கப்போகிறீர்கள்.

கன்னி பாக்ய குரு: குரு பகவான் அஷ்டம ஸ்தானத்தில் பயணம் செய்கிறார். குருவின் பார்வை சாதகமாக உள்ளது. மே மாதத்திற்குப் பிறகு குரு பகவானின் பார்வை உங்கள் ராசியின் மீது விழுகிறது. நட்பு விசயத்தில் கவனம் தேவை என்று சொல்கிறார் இந்த மீம்ஸ் கிரியேட்டர்.













Click it and Unblock the Notifications