இதெல்லாம் நம்ப மாட்டேன்.. வீடியோ இருக்கா?: பாரபட்சமில்லாமல் ராஜாவை திட்டும் நெட்டிசன்கள்

ஐஐடியில் சமஸ்கிருத பாடலுக்கு எதிர்ப்பு கிளம்பியதை தொடர்ந்து சர்ச்சைக்குரிய வகையில் ஆபாசமான போட்டோவை பதிவு செய்ததற்காக சமூக வலைதளங்களில் எச். ராஜாவுக்கு கண்டனங்கள் குவிகின்றன.

Subscribe to Oneindia Tamil

Recommended Video

    எச்.ராஜாவை வச்சு செய்யும் நெட்டிசன்கள்- வீடியோ

    சென்னை: சென்னை ஐஐடியில் சம்ஸ்கிருத பாடலுக்கு எதிர்ப்பு கிளம்பியதை தொடர்ந்து ஆணும், பெண்ணும் முத்தம் கொடுக்கும் படத்தை ஐஐடியில் தமிழ் வளர்த்தபோது எடுக்கப்பட்ட போட்டோ என்று டுவிட்டரில் எச்.ராஜா போட்டுள்ளார்.

    சென்னை ஐஐடியில் தேசிய கீதத்துக்கு பதிலாக சமஸ்கிருதத்தில் இறை வணக்கம் பாடப்பட்டது. இதற்கு ஸ்டாலின், வைகோ உள்ளிட்ட அரசியல் கட்சித் தலைவர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.

    அதற்கு பாஜக தேசிய செயலாளர் எச். ராஜா தனது டுவிட்டர் பக்கத்தில் ஒரு பையனும் பொண்ணும் முத்தம் கொடுக்கும் புகைப்படத்தை போட்டு, சென்னை ஐஐடியில் தமிழை வளர்த்த போது எடுத்த போட்டோ என்றும் அது ஸ்டாலின் மற்றும் வைகோ கவனத்துக்கு என்றும் குறிப்பிட்டிருந்தார்.

    இது போல் அசிங்கமான போட்டோவை போட்டதற்கு நெட்டிசன்கள் வறுத்து எடுத்து வருகின்றனர். அதிலும் அது வேறு ஒரு இடத்தில் முத்தம் கொடுக்கும் போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் 2014-ஆம் ஆண்டு எடுத்த போட்டோ என்றும் சென்னை ஐஐடியில் எடுக்கப்பட்டது இல்லை என்றும் காது கொடுத்து கேட்க முடியாத அளவுக்கு ராஜாவை வெளுத்து வாங்கி வருகின்றனர்.

    உங்களுக்கு என்ன சார்

    இந்த போட்டோ டெல்லியில் எடுக்கப்பட்டது என்றும் அவர் தவறான செய்தியை வெளியிடுகிறார் என்றும் அந்த பையனுக்கு பெண்ணுக்கும்தான் டங்கு ஸ்லிப் ஆயிடுச்சு , உங்களுக்கு என்ன சார்.

    தரம்தாழ்ந்த கருத்து

    பெரியவர்களுக்கென்று ஒரு பொறுப்பிருக்கிறதென்று நினைக்கிறன். தமது தகுதிக்கு கீழானவற்றை பதிவு செய்ய வேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறேன்.

    பெயிலு பெயிலு

    ஒண்ணு பெரிய மனுஷ தனமா பதிவு போடணும்..
    இல்லாட்டி பொய் தகவலை பதிவா போடாம இருக்கணும்..
    பெயிலு பெயிலு...
    இந்த லட்சணத்துல பிஜேபி தேசிய செயலாளர்.சிறப்பு.

    இம்புட்டு கோவமா

    ரொம்ப கோவகாரரா இருப்பாரு போலயே...

    IIT ல நடந்த்துக்கே இம்புட்டு கோவப்படுறாரே...

    இன்னும் புராண இதிகாச கதைகளையெல்லாம் படிச்சாருன்னா...கொந்தளிச்சி நாத்திகராயிடுவாரு போலயே...

    பித்தலாட்டம்

    இது IIT ல் எடுக்கப்பட்ட புகைப்படம் இல்லை

    உங்களின் பித்தலாட்டம் ஊருக்கே தெரிந்து விட்டது

    வீடியோ இருக்கா

    இதெல்லாம் நம்ப மாட்டேன்...வீடியோ வெச்சிருக்கியா?

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+