சும்மா போகமாட்டேன்.. ஆதார்கார்டுல இருக்க மாதிரியே உன் மூஞ்சிய மாத்திட்டுதான் போவேன்!
சென்னை: கொளுத்தும் வெயிலுக்கு போட்டியாக குளுகுளுவென நகைச்சுவையான வெயில் மீம்ஸ்களைப் பகிர்ந்து இணையத்தை கலகலக்க வைத்து வருகின்றனர் நெட்டிசன்கள்.
காலை பத்து மணிக்கே சுள்ளென அடிக்கும் வெயிலைப் பார்த்தாலே, நாம் கோடை காலத்திற்கு வந்து விட்டோம் என்பது நன்றாக புரிகிறது. ஆனால், மார்ச் மாதத்திலேயே இப்படி வெயில் போட்டுத் தாக்குவதுதான் பொறுக்க முடியாமல் உள்ளது. எப்போது குழாயைத் திறந்தாலும் சுடுநீர்தான் கொட்டுகிறது.

'குளிர்ந்த நீர் வந்தால், கொஞ்சம் சுடுதண்ணீர் கலந்து குளிர் காலத்தில் பயன்படுத்தலாம்.. ஆனால் இப்படி கொதிக்கும் நீரை குளிர்விக்க வீட்டு பிரிட்ஜ்ஜில்தான் தண்ணீர் வைக்க வேண்டும் போல' என இப்போதே வெயிலை நினைத்து மக்கள் கவலைப்பட ஆரம்பித்து விட்டனர். எப்படியும் இன்னும் இரண்டு மாதங்களுக்கு இந்த வெயிலை சகித்துக் கொண்டுதான் ஆக வேண்டும்.
எனவே, அதுவரை வெயிலுக்கு போட்டியாக குளுகுளு மீம்ஸ்களைப் பகிர்ந்து, மக்களைச் சிரிக்க வைப்போம் என வெயில் ஸ்பெஷல் மீம்ஸ்களைப் பகிர்ந்து வருகின்றனர் நெட்டிசன்கள். 'நிலாவுக்கு போன மாதிரி, யாராவது சூரியனுக்கு போய் கொஞ்சம் செட்டிங்ஸை கம்மி பண்ணுங்கப்பா' என்பதெல்லாம் வேற லெவல்.
இதோ அப்படியாக சமூகவலைதளப் பக்கங்களில் நம் கண்ணில் பட்ட நகைச்சுவையான சில மீம்ஸ்களின் தொகுப்பு உங்களுக்காக...






















Click it and Unblock the Notifications