For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ஐ லவ் விஜய்.. ஐ லவ் ஜோசப் விஜய்.. ஐ லவ் முகமது விஜய்.. மனுசனுக்குதான் மதிப்பு மதத்துக்கு இல்ல!

மெர்சல் பட சர்ச்சை அரசியல் விவகாரமாக மாறியள்ள நிலையில், மெர்சலை வைத்து சமூக வலைதளத்தில் உலா வரும் மெர்சல் மீம்ஸ் இதோ உங்களுக்காக.

By Gajalakshmi
Google Oneindia Tamil News

சென்னை : மெர்சல் பட வசனம் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில் இதை வைத்து டுவிட்டரில் வலம் வரும் சில மீம்ஸ் உங்களுக்காக.

மெர்சல் படத்தில் ஜிஸ்டி, டிஜிட்டல் இந்தியா குறித்த வசனங்களை நீக்க வேண்டும் என்று தானாக ஆப்பு மீது உட்கார்ந்த தமிழக பாஜகவால் சமூக வலைதளங்களில் கடந்த நாட்களாக மீம்ஸ் பறக்கின்றன. பாஜகவினர் எதைச் சொன்னாலும் அதற்கு பதிலடியாக ஒரு மீம்ஸை தட்டிவிட்டு ஆதங்கத்தை தீர்த்துக் கொள்கின்றனர் நெட்டிசன்கள்

மத்திய அரசின் மிகப்பெரிய வரி சீர்திருத்த முறை ஜிஎஸ்டி என்று கூறி வருகிறது. ஆனால் இதற்கு எதிர்மறையாக மெர்சல் வசனம் இருக்கிறது என்பதே பாஜகவினரின் குற்றச்சாட்டு. மெர்சல் சர்ச்சை குறித்து சமூகவலைதளத்தில் நிரம்பி வழியும் மீம்ஸ்களில் சில இதோ.

நெத்தியடி மீம்

விஜயை மதத்தின் பெயரைச் சொல்லி விமர்சித்திருந்தார் எச். ராஜா. அவருக்கு பதிலடியாக உள்ளது இந்த டுவீட். ஐ லவ் விஜய்..ஐ லவ் ஜோசப் விஜய்..ஐ லவ் முகமது விஜய்.. மனுசனுக்குதான் மதிப்பு மதத்துக்கு இல்லை என்ற பொளந்து கட்டியுள்ளார் இவர்.

ஜெட்லி கொண்டு வந்ததுக்கு அட்லிக்கு திட்டா?

GST கொண்டு வந்தது மத்திய அமைச்சர் அருண் ஜெட்லி, ஆனால் திட்டு வாங்குறது அட்லியா. இது என்ன நியாயம் என்று கேட்கிறார் இந்த நெட்டிசன்

அரசியல் பேச வெச்சிட்டாங்க

பாஜக எழுப்பிய சர்ச்சையால் மெர்சல் இப்போது அரசியல் தலைவர்கள் கருத்து வரை சென்று விட்டது. இதனை குறிக்கிறது இந்த டுவீட். மெர்சல் படம் பத்தி பேசிட்டு இருந்தவங்கள அரசியல் பேச வெச்சிட்டாங்க! அவங்கவங்க எடுக்கற முடிவு நமக்கு சாதகமா தான் இருக்கு!

பாஜகவிற்கு சவால்

பாஜகவினர் தொடர்ந்து மெர்சலுக்கு எதிர்ப்பு கருத்துகளைத் தான் கூறி வருகிறார்கள். அது ஏன் என்று கூறியிருக்கிறார் இவர். கடைசி வரைக்கும் பிஜேபி சினிமா தியேட்டரை முற்றுகையிடாது, ஏன்னா அவங்க தொண்டர்கள் எண்ணிக்கையை விட ஒரு தியேட்டருக்குள்ள படம் பார்க்கிறவன் அதிகம்

சரியான பழமொழி

தமிழக பாஜகவின் தற்போதைய நிலையை சுட்டிக்காட்டி இந்த மீம்ஸை தட்டிவிட்டுள்ளார் இந்த வலைபதிவர். "சும்மா இருந்த சங்க, ஊதி கெடுத்தான்னாம் ஆண்டி"ன்னு எங்க ஊர் பக்கம் ஒரு பழமொழி உண்டு.

இப்ப புரியுது வசனம்

மெர்சல் படத்தில் வரும் வசனமான நீ விதைத்த விதையெல்லாம் உனை அருக்கக் காத்திருக்கும் என்று வசனம் bjp க்கு சரியான வார்த்தை தான் இது.இப்ப புரியுது இந்த வசனம் என்று கிண்டலாக பகிரப்பட்டுள்ளது.

English summary
Mersal turns a hot topic for meme creators and the social media is flooding with the support of mersal and vijay memes. Here are some interesting memes.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X