டிஎன்பிஎஸ்சி வந்தா போதுமே.. உடனே மணக்கோலத்துல வந்துடுவாங்க.. இந்த மீம்ஸ் எல்லாம் பார்த்தீங்களா?
சென்னை: தமிழ்நாட்டில் நேற்று நடந்த டிஎன்பிஎஸ்சி தேர்வு மற்றும் டெல்லியில் நடந்த மத்திய அமைச்சரவை பதவி ஏற்பை வைத்து நெட்டிசன்கள் பலர் மீம்ஸ் போட்டு வருகின்றனர்.
லோக்சபா தேர்தல் முடிவடைந்த நிலையில் மத்தியில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக முற்போக்கு கூட்டணி ஆட்சி அமைந்துள்ளது. நேற்று 3வது முறையாக பிரதமராக மோடி பொறுப்பேற்றார். குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு அவருக்கு பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். அவருடன் 72 பேர் மத்திய அமைச்சர்களாக பாஜக மற்றும் கூட்டணி கட்சியினர் பொறுப்பேற்றனர்.

யாருக்கும் தனி மெஜாரிட்டி கிடைக்காத நிலையில் 240 தொகுதிகளில் வெற்றி பெற்ற பாஜக தனது கூட்டணி கட்சிகளுடன் சேர்ந்து மத்தியில் ஆட்சி அமைக்கிறது. பாஜக கூட்டணி கட்சிகளுக்கு 52 எம்பிக்கள் உள்ளன. இதன்மூலம் பாஜகவுக்கு ஆட்சியமைக்க தேவையான 272 எம்பிக்களை விட கூடுதலாக 20 எம்பிக்கள் உள்ளனர்.
ஆந்திராவில் செயல்பட்டு வரும் முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம் கட்சிக்கு 16 எம்பிக்கள், பீகார் முதல்வர் நிதிஷ் குமாரின் ஐக்கிய ஜனதாதளம் கட்சிக்கு 12 எம்பிக்கள், மகாராஷ்டிரா முதல்வர் ஏக்நாத் ஷிண்டேவின் சிவசேனாவுக்கு 7 எம்பிக்கள், சிராக் பஸ்வானின் லோக் ஜன கட்சிக்கு 5 எம்பிக்கள், கர்நாடக முன்னாள் முதல்வர் குமாரசாமியின் ஜேடிஎஸ்க்கு 2 எம்பிக்கள் ஆதரவுடன் நேற்று பாஜக ஆட்சி அமைத்தது.

டிஎன்பிஎஸ்சி தேர்வு: இன்னொரு பக்கம் நேற்று தமிழ்நாட்டில் டிஎன்பிஎஸ்சி தேர்வு நடந்தது. தமிழ்நாடு முழுவதும் 7,247 தேர்வு மையங்களில் நடந்த 10 ஆம் வகுப்பு கல்வி தகுதி கொண்ட குரூப் 4 தேர்வை 15.8 லட்சம் பேர் எழுதியுள்ளனர் என்று டிஎன்பிஎஸ்சி தெரிவித்துள்ளது.

ஒவ்வொரு ஆண்டும் பல்வேறு அரசுத் துறைகளில் காலியாக இருக்கும் பணியிடங்கள் இதன் மூலமே நிரப்பப்படும். குரூப் 1, குரூப் 2, 2ஏ, குரூப் 4 என பல்வேறு நிலைகளில் பணியாளர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். இதற்குத்தான் நேற்று டிஎன்பிஎஸ்சி தேர்வு நடந்தது.

இந்த ஆண்டுக்கான குரூப் 4 தேர்வில் கிராம நிர்வாக அலுவலர்- 108, இளநிலை உதவியாளர்-2,604, தட்டச்சர்- 1,705, சுருக்கெழுத்து தட்டச்சர்- 445, தனி உதவியாளர், கிளார்க்- 3 உள்ளிட்ட பல பணிகளுக்கான தேர்வு நடந்தது.
மீம்ஸ்: நேற்று நடந்த இந்த இரண்டு நிகழ்வுகளையும் வைத்து நெட்டிசன்கள் மீம்ஸ் போட்டுள்ளனர்.
நாயுடு : இன்னைக்கு விருந்து ரெடி பண்ணி இருக்கேன்.. ஆந்திராக்கு போகலாம் வாங்க ஜீ
நிதிஷ் : இல்ல பீகார்க்கு போகலாம் வாங்க ஜீ..

இல்ல ஆந்திரா.. இல்ல பீகார்..
ஜீ ~ என்ன வுட்ருங்கோ பிளீஸ்.. நா வீட்டுக்கு போகனும்., என்று மோடி பற்றி ஒருவர் மீம்ஸ் போட்டுள்ளார்.
அதேபோல் நீங்க ஏன் மினிஸ்டர் ஆகலை என்பதற்கு அண்ணாமலை: அண்ணா எங்க அப்பா பேர் நாரயண சீத்தராமன் கிடையாதுங்கணா குப்புசாமிங்கணா என்று சொல்வதாக மீம்ஸ் போட்டுள்ளார்.
அதேபோல் டிஎன்பிஎஸ்சி தேர்வில் மணப்பெண் வந்து தேர்வு எழுதுவதை.. எனக்கு இப்போ எக்ஸாம் எழுதணும் போல இருக்கு என்று சொல்வதாக மீம்ஸ் போட்டுள்ளனர்.
இன்று டிஎன்பிஎஸ்சி எக்ஸாம்.. பல பேர் மணக்கோலத்தோட தேர்வு எழுதப்போற நாள் என்று நெட்டிசன்கள் மீம்ஸ் போட்டுள்ளனர்.

-
அண்ணாமலை போட்ட அந்த ஒரு கண்டிஷன்.. ஆடிப் போன டெல்லி மேலிடம்.. பிம்ப அரசியல் உடைகிறதா? இனி என்னாகும் -
ஆரம்பமே அலங்கோலம்.. பெரம்பூர் விஜய் பிரச்சாரத்தில் தவெகவினரால் அடுத்தடுத்து அசம்பாவிதம் -
Gold Price Today: தங்கம் விலை அதிரடியாக உயர்ந்தது.. காலையில் சரிந்து மாலையில் எகிறியது! நகை பிரியர்கள் கலக்கம்! -
ஆரணியில் கால் வைத்த மகாலட்சுமி.. 75 வருட ரூல்ஸை உடைத்து திமுக முதல்முறை சாதனை.. அதிரும் திருவண்ணாமலை! -
தவெக விஜய்க்கு சான்ஸே இல்லை.. 3வது இடம்தான்.. ஆனால் அதிலும் பெரிய சறுக்கல்.. சுடசுட வெளியான சர்வே -
தமிழகத்தில் 2010 ல் RI ஆக வேலைக்கு சேர்ந்தவர் 2026ல் எவ்வளவு சம்பளம் வாங்குவார் தெரியுமா? -
மாதம்பட்டி ரங்கராஜன் டிஎன்ஏ டெஸ்ட் ரிசல்ட் வந்தாச்சு..! ஜாய் கிரிஸில்டா குழந்தை விஷயத்தில் வெளியான தகவல்! -
நான் ஒருமுறை குடிச்சேன்.. ஐஏஎஸ் ஆக வேண்டிய பொண்ணு! வாழ்க்கை மாறிய காரணம்! நடிகை கஸ்தூரி ஓபன் -
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2: மீனா கேட்ட கேள்வி.. பாண்டியனின் எதிர்பாராத முடிவு.. சரவணன் நிலைமை? செம சம்பவம் -
இததான் ஒட்டிகிட்டு இருந்தீங்களா? அமெரிக்காவை லெஃப்ட் ஹேண்ட் டீல் செய்யும் ஈரான்! கோடிக்கணக்கில் லாஸ் -
விஜய்க்கு பெரம்பூரில் பிரபல நடிகை வைத்த செக்.. பிரச்சாரம் தொடங்கும் முன்பே இப்படியா பஞ்சாயத்து? -
நேத்து வந்த ஸ்ரீநாத்துக்கு சீட்.. தூத்துக்குடி அஜிதா ஆக்னல் செய்த சம்பவம்! சொதப்பிய விஜய்!












Click it and Unblock the Notifications