மேலும் ஒரு முன்னாள் அதிமுக அமைச்சரா.. ஹவுஸ்புல்.. போதும் இதுக்குமேலே வராதீங்க.. திமுகவினர் மீம்ஸ்
சென்னை: 2026 சட்டசபை தேர்தல் விரைவில் தமிழ்நாட்டில் நடக்க போகிறது. ஆளும் கட்சியான திமுக, கமலின் மக்கள் நீதி மய்யம், பிரேமலதாவின் தேமுதிகவை கூட்டணியில் இணைத்தது. அதேபோல ஓ பன்னீர்செல்வம் உள்பட பல முன்னாள் அமைச்சர்கள் மற்றும் நிர்வாகிகளை திமுகவில் இணைந்துள்ளது. இதனால் நேற்று வரை "யார் வருவார்? எப்போது வருவார்?" என்று எதிர்பார்த்துக்கொண்டிருந்த காலம் போய், இன்று "அடுத்து யார் வரப்போறா?" என்ற பீதியில் மற்ற கட்சிகள் கிடக்க, திமுகவினரோ "தயவு செஞ்சு யாரும் வராதீங்கப்பா... இடம் பத்தாது!" என்று கெஞ்சும் நிலைக்கு வந்துவிட்டார்களாம். அவர்கள் அதனை பிரதிபலிக்கும்வகையில் மீம்ஸ்களே போட ஆரம்பித்துவிட்டார்கள்.
அண்மையில் தேமுதிகவின் பிரேமலாதா தனது கட்சி திமுக கூட்டணிக்கு வருவதாக கூறி அறிவாலயம் வந்தார். அப்போதே அதிகப்படியான கூட்டணி கட்சிகள் வந்துவிட்டதாக திமுகவினர் விமர்சித்தனர். ஆனால் இப்போது முன்னாள் முதலமைச்சர் ஓபிஎஸ் அவர்கள் தனது மகனுடன் அறிவாலயத்திற்குள் நுழைந்த பின்னர், திமுகவினர் சற்று கலக்கமே அடைந்துவிட்டதாக தெரிகிறது.ஏனெனில் அந்த அளவிற்கு திமுக கூட்டணி மிகப்பெரிய கூட்டணியாக களம் இறங்கி உளள்து. இதை வைத்து திமுக உடன்பிறப்புகள் சமூக வலைதளங்களில் மீம்ஸ்களை தெறிக்கவிட்டு வருகிறார்கள்

ஹவுஸ்புல்... நோ அட்மிஷன்!"
இதனிடையே இன்னொரு அதிமுக முன்னாள் அமைச்சர் விரைவில் திமுகவில்இணைய போவதாகவும், அவர் தென்மாவட்டத்தைச் சேர்ந்தவர் என்றும் கூறப்படுகிறது. இந்த செய்தியை பிரபல ஆங்கில ஊடக செய்தியாளர் பதிவிட்டிருந்தார். இதை பார்த்த திமுகவினர், போதும் போதும்.. இதுக்கு மேலே யாரும் விழுகாதீங்க. இடமில்லை.. ஹவுஸ் என்று வடிவேல் சொல்வது போல் மீம்ஸ் வெளியிட்டிருக்கிறார்கள்.
அதேபோல் அறிவாலயத்தின் கேட் முன்பு வடிவேலு பாணியில், "ஏற்கனவே உள்ளே 15 முன்னாள் அதிமுக அமைச்சர்கள் இருக்காங்க, இப்ப ஓபிஎஸ்-உம் வந்துட்டாரு... இனிமே உள்ளே வரணும்னா டோக்கன் இல்ல, அப்ளிகேஷன் ஃபார்ம் கூட கிடையாது... போயிட்டு அப்புறம் வாங்க!" என்று 'ஹவுஸ்புல்' போர்டு மாட்டும் மீம்ஸ்களை போடுகிறார்கள் திமுகவினர்,
இப்படியே போனால், இன்னும் கொஞ்ச நாளில் அறிவாலய வாசலில் "இங்கு உறுப்பினர் சேர்க்கை தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. தயவுசெய்து பக்கத்தில் உள்ள மற்ற கட்சிகளுக்குச் சென்று அவர்களுக்கு வாழ்வு அளிக்கவும்" என்று அறிவிப்பு பலகை வைத்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை என்று மீம்ஸ் போடுகிறார்கள் சிலர்.
கமலாலயம் போகாது
— Raagh-ol (@Cringecat__) February 27, 2026
அறிவாலயம் போயிருச்சு! https://t.co/C3yOo9fQul pic.twitter.com/Um9M6ukE0f
🚶🚶🚶 https://t.co/1IKNJA6fW8 pic.twitter.com/iaN4z4jPsD
— James Stanly (@JamesStanly) February 27, 2026
-
திமுகவுடன் உறவு தொடரும்.. கம்யூனிஸ்ட்கள் அதிரடி முடிவு.. சண்முகம் பளீச்.. விஜய் ஷாக் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK quit?: திமுக கூட்டணியில் மதிமுக தொடருமா? கிளைமாக்ஸ் ஜூன் 27-ஆம் தேதி? -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
ஸ்டாலின் குடகு பயணம்.. திமுகவில் நடக்கும் பெரிய மாற்றம்.. கூண்டோடு தூக்கப்படும் தலைகள்! பின்னணி -
கை கால் ஆட்டி பேசி..சட்டமன்றத்தில் எங்க போச்சு BRO உங்க BODY LANGUAGE விஜய்யை விடாமல் அடித்த ஆ.ராசா! -
உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட திமுக நிர்பந்தித்தது! ஜூன் 27ல் முக்கிய முடிவு! கொதித்து பேசிய வைகோ -
திமுகவை குறை கூறுவதால்.. சட்டம் ஒழுங்கு பிரச்சனையை மக்கள் மறக்க மாட்டார்கள்.. கனிமொழி கொடுத்த பதில்! -
Gen Z மீட்டிங் நடத்திய திமுக.. தவெக பலமான இடமே வேறு.. நெட்டிசன்கள் சொல்லும் விஷயம் -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
திருச்சியில் விஜய்யை சிரித்தபடி ஓடிச்சென்று வரவேற்ற மதிமுக துரை வைகோ! -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா












Click it and Unblock the Notifications