யம்மோவ்.. யாரும்மா அது வீட்ல.. காதலர் தினத்துக்கு கூழ் ஊத்த போறாம்.. டொனேஷன் குடுங்க!
சென்னை : காதலர் தினத்திற்கு இன்னமும் ஒருநாளே உள்ள நிலையில், இன்னமும் தனக்கான காதலியைத் தேடி மீம்ஸ் விடு தூது அனுப்பி வருகின்றனர் நம் முரட்டு சிங்கிள்ஸ்.
காதலர் தினத்திற்கு முன்னோட்டமாக ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு ஸ்பெஷல் நாளாகக் கொண்டாடி வருகின்றனர் நம் காதலர்கள். அதன்படி இன்று ஹக் டே. அதாவது கட்டிப் பிடிக்கும் தினமாம். காதலர்கள் எல்லாம் இந்த தினத்தை வேறு மாதிரி மகிழ்ச்சியாகக் கொண்டாடிக் கொண்டிருக்க, இன்னமும் காதலி கிடைக்காமல் ஒரு குரூப் அலையோ அலை என்று அலைந்து வருகிறது.
இன்னும் காதலர் தினத்திற்கு ஒருநாள் உள்ள நிலையில் எப்படியும் ஒரு காதலியைக் கண்டுபிடித்து, இந்த வருட காதலர் தினத்தை சிறப்பாகக் கொண்டாடி விட வேண்டும் என சின்சியராக அவர்கள் வேலை பார்த்து வருவது அவர்கள் பகிரும் மீம்ஸ்களைப் பார்த்தாலேத் தெரிகிறது.
சைடு கேப்பில் வழக்கம் போல், காதலர் தினத்துக்கும் கூழ் ஊற்றப் போவதாக ஒரு குரூப் கிளம்பி விட்டது. "யம்மோவ்.. யாரும்மா அது வீட்ல.. காதலர் தினத்துக்கு கூழ் ஊத்த போறாம்.. டொனேஷன் இருந்தா குடுங்க!" என வழக்கம் போல் தங்களது பேவரைட் டெம்ப்ளேட்டை வைத்து அவர்கள் மீம்ஸ்களைப் பகிர்ந்து வருகின்றனர்.
இதோ அப்படியாக சமூகவலைதளப் பக்கங்களில் நம் கண்ணில் பட்ட சில நகைச்சுவையான மீம்ஸ்களின் தொகுப்பு உங்களுக்காக...





















Click it and Unblock the Notifications