பேய்.. பிசாசு.. இதைத்தான் சுருக்கமா ‘பேபி’னு செல்லமா கூப்புடுறோம்டா!
சென்னை: மனைவியைக் கணவர்கள் கலாய்ப்பது போன்ற மீம்ஸ்களால் சமூகவலைதளப் பக்கங்களைக் கலகலக்க வைத்து வருகின்றனர் நெட்டிசன்கள்.
வீட்டில் நேருக்கு நேராக மனைவியை சொல்ல முடியாததை ( அதாவது திட்ட முடியாததை..) எல்லாம் மீம்ஸ்களாகப் பகிர்ந்து நேக்காக தங்கள் மனப்பாரத்தை தீர்த்துக் கொள்கின்றனர் போலும் இந்த ஆண்கள். அதனால்தான் அடிக்கடி மனைவியைப் பற்றிய கணவன்மார்களின் மீம்ஸ்களாக அதிகம் கண்ணில் படுகிறது.

இப்போதும் அப்படித்தான் சில நகைச்சுவையான மீம்ஸ்கள் சமூகவலைதளப் பக்கங்களில் அதிகம் பகிரப்பட்டு வருகின்றன. அவற்றில் சில மீம்ஸ்களைப் பார்த்தால், 'அட இப்டியெல்லாம்கூடவா சிந்திப்பார்கள்' என ஆச்சர்யப்படும் வகையில் உள்ளன.
உதாரணத்திற்கு, 'வரதட்சணை வாங்கிட்டு உன்னைக் கல்யாணம் பண்ணினது மனசுக்கு உறுத்தலா இருக்கு.. அதுக்கு பரிகாரமா வரதட்சணை வாங்காம உன் தங்கச்சியைக் கல்யாணம் பண்ணிக்கலாம்னு இருக்கேன்', 'சாப்பாடுல முடி கிடந்தா உறவு வளரும்னு சொல்றா.. ஒருதடவை இவளை கல்யாணம் பண்ணிக்கிட்டே நான் படுற பாடு பத்தாதா' என்பது போன்ற மீம்ஸ்கள் வேறலெவல்.
இதோ அப்படியாக இன்னும் நம் கண்ணில் பட்ட சில நகைச்சுவையான மீம்ஸ்களின் தொகுப்பு உங்களுக்காக...





















Click it and Unblock the Notifications