சின்ன வயசுல காதலிச்சப்போ அப்பா, அம்மாக்கு பிடிக்கல.. இப்போ காதலிச்சா என் பொண்டாட்டிக்கு பிடிக்கல!
சென்னை: வீட்டில் மனைவியிடம் நேரடியாகப் புலம்ப முடியாததை எல்லாம் மீம்ஸ் போட்டு புலம்பத் தொடங்கி விட்டனர். அதனால்தான் சமூகவலைதளப் பக்கங்களைத் திறந்தாலே கணவர்களின் புலம்பல் மீம்ஸ்களாகக் கொட்டிக் கிடக்கின்றன.
'பாம்பு துரத்துனா நேரா ஓடு.. புலி துரத்துனா மரத்துல ஏறு.. கரடி துரத்துனா பிணம் போல் நடினு இதெல்லாம் சொல்லிக் கொடுத்தீங்களே.. ஆனா பொண்டாட்டி துரத்தினா எப்படித் தப்பிக்கிறதுனு சொல்லிக் கொடுத்தீங்களா?' என அப்பாவியாக மீம்ஸ் போட்டுக் கேட்டுக் கொண்டிருக்கின்றனர். அந்தளவிற்கு வீட்டில் பலமாக அடி வாங்குகிறார்கள் போல, என நினைத்தால், 'சின்ன வயசுல காதலிச்சப்போ அப்பா, அம்மாவுக்கு பிடிக்கல.. இப்போ காதலிச்சா பொண்டாட்டிக்குப் பிடிக்கல' என தாங்கள் அடி வாங்குவதற்கான காரணத்தையும் சொல்லாமல் சொல்லி விட்டார்கள் இந்த கணவர்கள்.
இப்படியாக மனைவியின் அருமை பெருமைகளையெல்லாம் மீம்ஸ் போட்டு சமூகவலைதளங்களில் புலம்பிக் கொண்டிருக்கின்றனர். இதோ நம் கண்ணில் பட்ட சில நகைச்சுவையான மீம்ஸ்களின் தொகுப்பு உங்களுக்காக...






















Click it and Unblock the Notifications