memes: "ஏன் சார் சதம் அடிக்கலை" விராட் கோலி ஷாட்டால் கதறும் ரசிகர்கள்.. தெறிக்கும் மீம்ஸ் இதோ!
துபாய்: சாம்பியன்ஸ் டிராபி தொடரில் ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான அரையிறுதி ஆட்டத்தில் 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இந்திய அணி அபார வெற்றியை பெற்றது. இந்த ஆட்டத்தின் போது நிகழ்ந்த சுவாரஸ்யங்களை வைத்து சோசியல் மீடியாவில் ரசிகர்கள் உருவாக்கிய தெறிக்கும் மீம்ஸை பார்க்கலாம்.
சந்திரமுகி படத்தில் அரண்மனையை விட்டு ஒரு வாரத்தில் புறப்படும் ரஜினியை பார்த்து, "கையெடுத்து கும்பிட்டு போய்ட்டு வா ராசா" என்று நாசர் அனுப்பி வைப்பார். நேற்றைய ஆட்டத்தில் டிராவிஸ் ஹெட் அதிரடியாக ஆடி 39 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினார். இதில் நாசராக இந்திய ரசிகர்களையும், டிராவிஸ் ஹெட்டாக ரஜினியையும் மாற்றி, "போய்ட்டு வா ராசா" என்று சொல்வதாக உருவாக்கப்பட்டுள்ள மீம் முடியலைடா சாமி ரகம்.

திருடன் போலீஸ் படத்தில் தனது தந்தையை கொலை செய்த இருவரை பிடித்து வைத்து, "ஏன் சார் எங்க அப்பாவை கொன்னீங்க" என்று கதறி கொண்டே தினேஷ் கேட்பார். நேற்றைய ஆட்டத்தில் 84 ரன்களில் இருந்த விராட் கோலி, திடீரென சிக்ஸ் அடிக்க முயற்சித்து சதம் அடிக்க முடியாமல் வெளியேறுவார். இதில் வரும் தினேஷாக இந்திய ரசிகர்களையும், கொலை செய்தவர்களாக விராட் கோலியையும் மாற்றி, "ஏன் சார் அந்த ஷாட் ஆடுனீங்க" என்று கேட்பதாக உருவாக்கப்பட்டுள்ள மீம் அவசரப்பட்டுடீங்களே தம்பி.

சார்பட்டா பரம்பரை படத்தின் கிளைமேக்ஸ் காட்சியில் வேம்புலியை வீழ்த்திய கபிலன், தனது குருவான ரங்கன் வாத்தியாருடன் கொண்டாடுவார். நேற்றைய ஆட்டத்தில் கேஎல் ராகுல் சிக்ஸ் அடித்து ஆட்டத்தை முடித்து அசத்தினார். அதன்பின் விராட் கோலியை கட்டியணைத்து நெகிழ்ச்சியடைந்தார். சார்பட்டா பரம்பரை கபிலனாக கேஎல் ராகுலையும், ரங்கன் வாத்தியாராக விராட் கோலியையும் மாற்றி உருவாக்கப்பட்டுள்ள மீம் ரங்கன் வார்த்தியார் சிஷ்யன்டா ரகம்.

சலார் படத்தில் பிரபாஸை அழைத்து வரும் பிரித்விராஜ், "யாராலயும் கணிக்கவே முடியாத பைத்தியக்காரன்டா அவன்" என்று கூறுவார். நேற்றைய ஆட்டத்தில் 24 பந்துகளில் 27 ரன்கள் என்று ஆட்டம் மாறிய போது, சடாரென 2 சிக்சர்களை பறக்கவிட்டு ஆட்டத்தை முடித்தார் ஹர்திக். இதனால் பிரபாஸாக ஹர்திக் பாண்டியாவையும், பிரித்விராஜாக ரசிகர்களையும் மாற்றி, "கணிக்கவே முடியாத பைத்தியக்காரன்டா" என்று உருவாக்கப்பட்டுள்ள மீம் மாஸ் ரகம்.

மாஸ்டர் படத்தில் தாடியை ஷேவ் செய்துவிட்டு மீண்டும் சீர்திருத்த பள்ளிக்குள் வரும் விஜய், ஒவ்வொரு சிறுவரையும் கைகளால் சிக்னல் கொடுத்து கிளாஸ் ரூம் அழைத்து செல்வார். இதில் வரும் விஜய்-ஐ ரோஹித் சர்மாவாக மாற்றி, ஒவ்வொரு அணியாக துபாய் மைதானத்திற்கு கூட்டி வந்து வெளுத்துவிட்டு அனுப்புவதாக உருவாக்கப்பட்டுள்ள மீம் தக் லைஃப் ரகம்.

-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications