இம்பேக்ட் பிளேயர் ரூல் எப்போ வந்துச்சு.. கம்பீர் செய்த குசும்பு.. ரசிகர்களின் தெறிக்கும் மீம்ஸ்!
புனே: இங்கிலாந்து அணிக்கு எதிரான 4வது டி20 போட்டியில் இந்திய அணி 15 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியை பெற்றதோடு, 3-1 என்ற கணக்கில் தொடரையும் கைப்பற்றி சாதனை படைத்துள்ளது. இந்தப் போட்டியில் நடந்த சம்பவங்கள் குறித்து சோஷியல் மீடியாவில் உருவாக்கப்பட்ட மீம்ஸை பார்க்கலாம்.

கத்தி படத்தில் ஜெயிலில் இருந்து தப்பிக்கும் விஜய், நேராக காமெடியனான சதீஷ் அறைக்கு வருவார். அப்போது உனக்கு இப்போ ரிலீஸ் இல்லையே என்று சதீஷ் கேட்க, நானே ரிலீஸ் பண்ணிக்கிட்டேன் என்று ஜாலியாக பதில் அளிப்பார். அதுபோல் ஐபிஎல் தொடரில் இம்பேக்ட் பிளேயரை கொண்டு வருவது போல் கன்கஷன் காரணமாக சர்வதேச கிரிக்கெட்டில் திடீரென ஹர்திக் ராணா களமிறங்கினார். இதனை வைத்து சதீஷை இங்கிலாந்து அணியாகவும், விஜயை கம்பீராகவும் மாற்றி.. ஹே.. இம்பேக்ட் பிளேயர் ரூல் டி20 கிரிக்கெட்டில் இன்னும் அறிமுகமாகவில்லையே என்று கேட்க, அதற்கு கம்பீர், நான் அறிமுகப்படுத்திகிட்டேன் என்று பதில் அளிப்பதாக உருவாக்கப்பட்டுள்ள மீம் ஜாலியோ ஜிம்கானா ரகம்.

புஷ்பா படத்தில், நீ முடிஞ்சா பிடிச்சிக்கோடா ஷெகாவத்து.. என்று சவால் விடுக்கும் அல்லு அர்ஜூன், இந்த புஷ்பா அடங்காதவன்டா என்று அதிரடியாக பஞ்ச் பேசுவார். அதுபோல் நேற்றைய ஆட்டத்தில், 79 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்த போது, அதிரடியாக 30 பந்துகளுக்கு 54 ரன்களை விளாசி அசத்தினார். இதனையடுத்து அவருக்கு புஷ்பா ஸ்டைலில் யாருக்கும் அடங்காதவன்டா என்று உருவாக்கப்பட்டுள்ள மீம் ரியல் தக் ரகம்.

வடசென்னை படத்தில் கிஷோரை கேரம் விளையாடி அசத்தும் தனுஷிடம், அப்பப்போ வாடா.. நல்ல விளையாடுற என்று சொல்வார். நேற்று கடைசி ஓவரில் 3 ரன்கள் மட்டுமே கொடுத்து 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார் ஜேமி ஓவர்டன். இதனையடுத்து கிஷோரை சிஎஸ்கே ரசிகர்களாகவும், தனுஷை ஓவர்டனாகவும் மாற்றி, "நல்லா பவுலிங் போடுற டா.. மேட்ச் அப்போ வந்துரு" என்று உருவாக்கப்பட்டுள்ள மீம் ரகிட ரகிட ரகம்.

சாமி 2 படத்தில் நான் சாமி இல்ல பூதம் என்று விக்ரம் பஞ்ச் டயலாக் பேசிவிட்டு, ஆர்ம்ஸை உயர்த்தி காட்டுவார். அதுபோல் நேற்று நம்ம ஆறுச்சாமியும் மாஸ் கம்பேக்கை கொடுத்துள்ளார். ஆடில் ரஷீத் பவுலிங்கில் அபாரமாக ஒரு சிக்சரை அடித்ததோடு, 34 பந்துகளில் 53 ரன்கள் எடுத்து அசத்தினார். இதன்பின் சிவம் துபேவை ஆறுச்சாமியாக மாற்றி, நான் சாமி அல்ல.. பூதம் என்று வசனம் பேசுவது போல் உருவாக்கப்பட்டுள்ள மீம் வேற மாதிரி.

கண்ணா லட்டு திண்ண ஆசையா படத்தில் பவர்ஸ்டாரின் அண்ணனாக வருபவர் சந்தானத்தை பார்த்து, என்ன.. கேகே.. அண்ணன் மேல பயம்விட்டு போச்சா என்று கேட்பார். அதனை அப்படியே சந்தானத்தை சஞ்சு சாம்சனாகவும், பவர் ஸ்டார் அண்ணனை தேர்வுக் குழுவாகவும் மாற்றி, "என்ன சாம்சன்.. தேர்வுக் குழு மீது பயம் போச்சா" என்று உருவாக்கப்பட்டுள்ள மீம் குபீர் ரகம்.
-
இனிமேலாவது வீரவசனம் பேசாமல் மாற்றத்தைக் கொடுங்கள் CM விஜய் சார்! அன்பில் மகேஷ் பதிவு -
டெல்லியிலும் கொங்கு சமையல் மணக்கப்போகுது.. முதல்வர் விஜய்க்கு சமைக்கும் மாதம்பட்டி ரங்கராஜ்! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
கூட்டுறவு கடன் தள்ளுபடி 2026.. ஆர்பிஐ விதிமுறை என்ன.. உதயநிதி ஸ்டாலினுக்கு தவெக விளக்கம் -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
அவசரப்பட்டு கையெழுத்து போட்டுட்டோமோ? முட்டி மோதும் 3 அதிமுக ’மாஜி’ எம்எல்ஏக்கள்! தவெக கொடுத்த ஆஃபர்!












Click it and Unblock the Notifications