448 நாட்களுக்கு பின் ஜெயிச்சிட்டாங்க.. ரோஹித் சர்மாவை பொளக்கும் ரசிகர்கள்.. தெறி மீம்ஸ் இதோ!
நாக்பூர்: இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணி 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றியை பெற்றுள்ளது. இந்த போட்டியின் போது நிகழ்ந்த சம்பவங்கள் மற்றும் சாதனைகளை வைத்து சோசியல் மீடியாவில் ரசிகர்கள் உருவாக்கிய தரமான மீம்ஸை பார்க்கலாம்.
வேலாயுதம் படத்தில் கடைசி வரை திருட கூட முடியாமல் தவித்து வரும் சந்தானம், ஒரு வழியாக விஜய் வீட்டில் இருந்து பணப்பையை எடுத்து திருடிவிட்டு வெளியில் வருவார். அப்போது சூரி, "ஒரு வழியா நம்ம ஸ்பீடு திருடிட்டாருப்பா" என்று சக கிராம மக்களுடன் உற்சாகமாக வரவேற்பார். இதில் சூரியை இந்திய ரசிகராகவும், சந்தானத்தை இந்திய அணியாகவும் மாற்றி, "ஒரு வழியா நம்ம ஆளுங்க ஒருநாள் போட்டியை 448 நாட்களுக்கு பின் ஜெயிச்சுட்டாங்கப்பா" என்று கொண்டாடுவதாக உருவாக்கப்பட்டுள்ள மீம் அட்ரா சக்க ரகம்.

கலகலப்பு படத்தில் சந்தானம் தனது தாத்தாவை பலமாக அடித்த போது, அவர் மயங்கிவிடுவார். அப்போது தளபதி தினேஷ் சந்தானத்திடம், "தலைவரே.. ஃபர்ஸ்டு மர்டரு.." என்பார். அதில் சந்தானத்தை ரோஹித் சர்மாவாகவும் , தளபதி தினேஷை இந்திய அணி ரசிகர்களாகவும் மாற்றி, "தலைவரே.. கடைசி 7 மேட்ச்ல ஃபர்ஸ்டு வெற்றி" என்று சொல்வதாக உருவாக்கப்பட்டுள்ள மீம் குபீர் ரகம்.

மனுநீதி படத்தில் முரளியும், வடிவேலுவும் மெயின் ரோட்டினை தேடி அலையும் போது ஒரு கட்டத்தில் வடிவேலு துரத்துவோர் கைகளில் மாட்டிக் கொள்வார். அப்போது பெரிய கட்டையை எடுத்து துரத்தி வந்தவர்களை மிரட்ட, "டேய்.. யாரும் பக்கத்துல போகாதீங்க.. இவன் பெரிய ஆட்டக்காரனா இருப்பான் போல" என்று பில்டப் கொடுப்பார். அதனை அப்படியே ஸ்ரேயாஸ் ஐயருக்கு மாற்றி, "டேய் யாரும் இவன் பக்கம் போகாதீங்க.. மொரட்டு ஃபார்மில் இருக்கான் போல" என்று உருவாக்கப்பட்டுள்ள மீம் தக் லைஃப் ரகம்.

பரிதாபங்கள் யூட்யூப் வீடியோ ஒன்றில், "அது எப்படிடா ஒருத்தனை பார்த்தாலே அடிக்கணும் போல தோன்றும்" என்று கேட்கும் கோபி, உடனடியாக அந்தப் பக்கம் திரும்பி சடாரென ஒரு அப்பு அப்புவார். அதனை அப்படியே கவுதம் கம்பீருக்கு மாற்றி, இந்திய அணி ரசிகர்கள் ஸ்ரேயாஸ் ஐயரை நீக்க முடிவு எடுத்ததற்காக அடிப்பதாக உருவாக்கப்பட்டுள்ள மீம் ஜாலியோ ஜிம்கானா ரகம்.

வடிவேலுவின் ஆட்டோவை வைத்து ஆக்ஷன் காட்சி எடுக்கும் போது, சிங்கமுத்து "ஒன் மோர்" என்று மீண்டும் மீண்டும் அடித்து சேதப்படுத்துவார். இதனை பார்க்கும் வடிவேலு, "அவரை நிறுத்த சொல்லுங்கடா" என்று பதறுவார். இதில் வடிவேலுவாக இந்திய ரசிகர்களை மாற்றி, அந்த மனுஷனை ஃபார்முக்கு வர சொல்லுங்கடா.. ஒருநாள் கிரிக்கெட்லயும் சிங்கிள் டிஜிட்டில் அவுட்டாகுறான் என்று சொல்வதாக உருவாக்கப்பட்டுள்ள மீம் ஹிட்மேனுக்கு வந்த சோதனை ரகம்.

-
ஏர்போர்ட்டில் வைத்தே கரப்பான் பூச்சி ஜனதா கட்சி தலைவர் கைது? டெல்லியில் அலறும் பாஜக அரசு -
பாஜகவுக்கு தலைவலியாக மாறும் கரப்பான்பூச்சி கட்சி! ஜூன் 6ம் தேதி டெல்லியை ஸ்தம்பிக்க வைக்க திட்டம் -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
ஒரு வழியாக மாற்றப்பட்ட CBSE தலைவர், செயலாளர்! OSM குளறுபடி குறித்து விசாரிக்க தனியாக ஆணையம் அமைப்பு -
சும்மா துங்கும் பொக்கிஷம்.. இந்திய வீடு, கோயில்கள் முடங்கிய 32,000 டன் தங்கம்! மத்திய அரசின் ப்ளான்! -
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ்












Click it and Unblock the Notifications