Apple iphone 17: "கிட்னியை கொடு.. ஐபோனை எடு.." தெறிக்கவிடும் ஐபோன் மீம்ஸ்.. ஐயோ முடியல
சென்னை: ஆப்பிள் நிறுவனம் புதிதாக ஐபோன் 17ஐ நேற்று அறிமுகப்படுத்தியது. உலகெங்கிலும் ஐபோனுக்கு பெரும் எதிர்பார்ப்பு நிலவி வந்த நிலையில், ஐபோன் ரசிகர்கள் இதைக் கொண்டாடித் தீர்த்து வருகிறார்கள். அதேநேரம் ஐபோன் குறித்து நம்மால் பல மீம்ஸ்களையும் பார்க்க முடிகிறது. அதன் விலையில் தொடங்கி டிசைன், அம்சங்கள் என ஏகப்பட்ட விஷயங்கள் குறித்தும் நம்மால் மீம்ஸ்களை பார்க்க முடிகிறது.
ஆப்பிள் நிறுவனம் நேற்றைய தினம் ஐபோன் 17 சீரியஸில் 4 மாடல்களை வெளியிட்டன. வழக்கமான ஐபோன் 17, ஐபோன் 17 ப்ரோ, ஐபோன் ப்ரோ மேக்ஸ் உடன் ஐபோன் 17 ஏர் மாடலும் வெளியிடப்பட்டது. புதிய ஐபோன் மாடல்கள் வரும் செப்டம்பர் 26ம் தேதி விற்பனைக்கு வருகிறது. இது ஒரு பக்கம் இருக்க ஐபோன் குறித்த மீம்ஸ்களையும் நம்மால் சமூக வலைத்தளங்களில் பார்க்க முடிகிறது.

ஐபோன் மீம்ஸ்
இந்த முறை ஐபோன் மாடல்களின் விலை அதிகரிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே விலை அதிகமாகத் தான் இருக்கும்.. இதுல இன்னும் வேற விலையை ஏற்றி இருக்காங்களா என்பதே பலரது கேள்வியாக இருக்கிறது. ஐபோன் 17ல் அடிப்படை ஸ்டோரேஜ் மாடல் விலை ரூ.82,900ல் தொடங்கும் நிலையில், அதிகபட்சமாக ஐபோன் 17 ப்ரோ மேக்ஸ் விலை ₹2,29,900 வரை போகிறது. ஐபோன் 17 வாங்க வேண்டும் என்றால் என்றால் கிட்னியை விற்க வேண்டும் என்று மீம்ஸ் போட்டுள்ளார் இந்த நபர்.

ஐபோனின் விலையை வைத்தே இந்த மீம்ஸும் இருக்கிறது. ஐபோன் 17 விலை லட்ச கணக்கில் இருக்கும் சூழலில், அதை வாங்குவது பெரும்பாலானோருக்கு முடியாத ஒன்றாகவே இருக்கிறது. பாக்கெட்டில் ஒரு ரூபாயை வைத்துக் கொண்டு ஐபோன் வெளியீட்டைப் பார்ப்பதாக நம்ம சூப்பர் ஸ்டாரை வைத்து மீம் போட்டுள்ளனர்.

எலி கேமரா
அடுத்து ஐபோன் கேமரா டீசன்களின் அடிப்படையிலும் பல மீம்ஸ்களை பார்க்க முடிகிறது. ஐபோன் பின்புறம் இரு கேமராகளை கொண்டிருக்கும் சூழலில், அது பார்க்க எலியின் கண் போலவே இருப்பதாகச் சொல்லியும் மீம்ஸ்களை தெறிக்க விடுகிறார்கள்.

உடைத்துப் போடும் யூடியூபர்கள்
பிரபல கார்டூன் கேரக்டரான டாம்மை வைத்து உருவாக்கப்பட்டுள்ள இந்த மீமும் டிரெண்டாகி வருகிறது. ஆப்பிள் நிறுவனம் இன்று புதிய ஐபோனை வெளியிட்டுள்ள நிலையில், அது விற்பனைக்கு வந்த உடனேயே அதை டெஸ்ட் செய்கிறோம் என்ற பெயரில் யூடியூபர்களை அதை வைத்துச் செய்துவிடுவார்கள். 100 மீட்டர் உயரத்தில் இருந்து போடுவது, தண்ணீரில் முக்கி எடுப்பது எனப் பல விஷயங்களைச் செய்வார்கள். அதையே நக்கல் செய்யும் வகையிலேயே இந்த மீம் இருக்கிறது.

புதுமை இல்லை
இது எவர்கிரீன் டிரெண்டிங் டாபிக் என்றே சொல்லலாம். தொடக்கத்தில், அதிலும் குறிப்பாக ஸ்டீவ் ஜாப்ஸ் இருந்த வரை, ஐபோன் என்றாலே பல புதுமைகள் இருக்கும். நாம் இன்று ஸ்மார்ட்போனில் பயன்படுத்தும் பல அம்சங்களை முதலில் கொண்டு வந்ததே ஆப்பிள் தான். ஒவ்வொரு முறையும் ஐபோனில் பல புதுமைகள் இருக்கும். ஆனால், சமீபத்திய ஆண்டுகளில் புதுமைகள் எதுவும் இல்லை என்பது புகாராகும்.

அதாவது ஐபோன்களில் பெரிய அப்டேட்கள் வருவதில்லை. ஏற்கனவே இருக்கும் வசதிகளிலேயே சின்ன சின்ன மாற்றங்களைச் செய்து ஒவ்வொரு ஆண்டும் புதிய மாடல் போல வெளியிடுவதாக நெட்டிசன்கள் பலரும் விமர்சித்து வருகிறார்கள். அதில் ஓரளவுக்கு உண்மையும் இருக்கவே செய்கிறது. அதை சுட்டிக்காட்டும் வகையிலேயே இந்த மீம் இருக்கிறது.
-
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
கோவையில் 2022ல் சரவணம்பட்டியில் இடம் வாங்கி போட்டிருந்தால் இன்று நீங்கள் கோடீஸ்வரன்.. மாறிய மதிப்பு -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
இந்தியாவை உலுக்கும் "ஜாம்பி" போதை மருந்து.. 2 மணி நேரமா இன்ச் கூட அசையல.. திகிலூட்டும் வீடியோ! -
"பதிலடி தாக்குதல் நடத்துவோம்.." ஈரானுக்கு எதிராக ஒன்றுகூடும் வளைகுடா.. 6 நாடுகள் கூட்டாக அறிக்கை -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
"எங்க இப்போ கை வை பார்க்கலாம்.." ஹார்முஸை முடக்கிய ஈரான் தளபதி படுகொலை.. இஸ்ரேல் அறிவிப்பு! -
தோழமை கட்சிகள்.. காங்கிரஸ் பெயரை தவிர்த்த ஸ்டாலின்.. கோபம் உச்சத்தில்.. சத்தமின்றி சொன்ன மெசேஜ்! -
பழம் விழுந்தால் லாபம் எடப்பாடி பழனிசாமிக்கு.. அதிமுக வைத்த செக்கில் சிக்கிய கூட்டணி, திமுக விஐபிகள்! -
சொத்து வைத்திருப்போர் அலர்ட்! 5 நாளில் இதை செய்யாவிட்டால் நில பத்திரப்பதிவில் லட்சக்கணக்கில் நஷ்டம்? -
ஸ்டாலின் VS எடப்பாடி VS விஜய்.. எந்தெந்த ஜாதியினர் யாருக்கு ஆதரவு! News 18 சர்வே ரிசல்ட் இதோ -
"கோடம்பாக்கம் ஏரியா.. ஓட்டு கேட்டு வரியா".. விஜய் பாடலுக்கு நடனமாடிய அரசு பள்ளி தலைமையாசிரியை.. இப்போ வேலை போச்சே












Click it and Unblock the Notifications