ரெய்னா இல்ல.. டூபிளஸி இல்லன்னுட்டு.. 10 வேப்பங்குச்சி குடுத்தாலே சிவனாண்டி கப் வாங்கி கொடுப்பார்டா!
சென்னை: ஐபிஎல் தொடர் ஆரம்பித்ததில் இருந்தே, மீம்ஸ்களால் ஒவ்வொரு போட்டியையும் திருவிழாவாகக் கொண்டாடி வரும் நெட்டிசன்கள், இறுதி ஆட்டத்தை மட்டும் சும்மா விட்டு விடுவார்களா? அதனால்தான் விதவிதமான ஐபிஎல் மீம்ஸ்களால் சமூகவலைதளத்தை தெறிக்கவிட்டு வருகின்றனர்.
ஐபிஎல் தொடரின் ஒவ்வொரு போட்டியுமே கிரிக்கெட் ரசிகர்களைப் பொறுத்தவரை திருவிழாதான். பிடித்த அணி, பிடிக்காத அணி என பாராபட்சமின்றி, முதல்நாள் போட்டி ஆரம்பித்ததில் இருந்து, இறுதி ஆட்டம் வரை ஒவ்வொரு நாள் ஆட்டத்தையும் பார்க்கத் தவற மாட்டார்கள். சாதாரண ஆட்டத்திற்கே அப்படியென்றால் இறுதி ஆட்டம் என்றால் கேட்கவா வேண்டும்.
அதிலும், சமூகவலைதளங்களில் அதிக ரசிகர்களை கொண்டிருக்கும் சிஎஸ்கே இறுதி ஆட்டத்தில் விளையாடுகிறதென்றால், சமூகவலைதளங்கள் எப்படி அதகளப் பட்டிருக்கும் என நாம் சொல்லித் தெரிய வேண்டியதில்லை. வழக்கம் போலவே, மற்ற பதிவுகளுக்கு இணையாக ஐபிஎல் பற்றிய நகைச்சுவையான மீம்ஸ்களையும் பகிர்ந்து, சமூகவலைதளங்களை கலகலக்க வைத்து வருகின்றனர் நம் நெட்டிசன்கள்.
இதோ அப்படியாக நம் கண்ணில் பட்ட சில நகைச்சுவையான மீம்ஸ்களின் தொகுப்பு உங்களுக்காக...












Click it and Unblock the Notifications
