‛‛தி ரியல் Silencer’’.. பைனலில் கம்மின்ஸை கதறவிட்ட ஜிஜி.. மீம்ஸோடு கம்பீரை கொண்டாடும் ரசிகர்கள்
சென்னை: நடப்பு ஐபிஎல் சீசனில் சன்ரைசர்ஸ் ஹைதராபாதை வீழ்த்தி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி சாம்பியன் பட்டம் வென்று அசத்தியது. இந்நிலையில் தான் ‛தி ரியல் Silencer' என கொல்கத்தா அணியின் ஆலோசகர் கவுதம் கம்பீருக்கு ஆதரவாக மீம்ஸ் போட்டு கொண்டாடி வருகின்றனர்.
ஐபிஎல் இறுதி போட்டியில் இன்று கொல்கத்தா நைட் ரைடர்ஸ் (கேகேஆர்) மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் (எஸ்ஆர்எச்) அணிகள் மோதின. சென்னை - சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்தில் இந்த போட்டி நடந்தது. இதில் டாஸ் வென்ற ஹைதராபாத் கேப்டன் பேட் கம்மின்ஸ் பேட்டிங்கை தேர்வு செய்தார்.

முதலில் பேட் செய்த சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 18.3 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் 113 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதையடுத்த களமிறங்கிய கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 10.3 ஓவர்களில் 2 விக்கெட்டுகளை இழந்து 114 ரன்கள் எடுத்து 8 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது.
இதன்மூலம் 2024ம் ஆண்டுக்கான ஐபிஎல் சாம்பியன் பட்டத்தை கொல்கத்தா அணி கைப்பற்றியது. இந்த அணி இதற்கு முன்பு
2012, 2014 ஆகிய ஆண்டுகளில் ஐபிஎல்லில் சாம்பியன் பட்டத்தை வென்றிருந்த நிலையில் தற்போது 3வது முறையாக கோப்பையை உச்சி முகர்ந்துள்ளது. இதனால் கொல்கத்தா அணியின் ரசிகர்கள் ஹேப்பியாகி உள்ளனர். மேலும் கொல்கத்தா அணியின் வெற்றியை அவர்கள் உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர்.

இந்நிலையில் தான் கொல்கத்தா அணியின் வெற்றியை போல் அந்த அணியின் ஆலோசகரான கவுதம் கம்பீரை ரசிகர்கள் கொண்டாட தொடங்கி உள்ளனர். இந்திய அணியின் முன்னாள் வீரரான இவர் கொல்கத்தா அணியின் கேப்டனாக செயல்பட்டார். இவர் தலைமையில் கொல்கத்தா அணி 2012 மற்றும் 2014 ஆகிய ஆண்டுகளில் கோப்பையை வென்றது. அதன்பிறகு இப்போது 2024ல் கம்பீர் ஆலோசகராக இருந்த நிலையில் தான் நிலையில் அந்த அணி மீண்டும் சாம்பியனாகி உள்ளது.
அதேபோல் கம்பீர் ஒரு பிடிவாதக்காரராகவும், மிகவும் கான்பிடென்ட் கொண்ட வீரராகவும் அறியப்படுகிறார். இதற்கு உதாரணம் கூற வேண்டும் என்றால் 2011 உலககோப்பை பைனலில் இந்திய அணியில் சச்சின் மற்றும் சேவாக் அடுத்தடுத்து அவுட்டான நிலையில் கம்பீர் நிதானமாக ஆடி 97 ரன்கள் சேர்த்து இந்திய அணியின் வெற்றிக்கு மிக முக்கிய காரணமாக இருப்பார். மேலும் அவர் சமீபத்தில் தமிழக வீரர் அஸ்வினுடன் சேர்ந்து கலந்துரையாடினார். அதில், ‛‛நான் தோல்வியை விரும்புவது இல்லை. நான் தோல்வியை வெறுக்கிறேன். எனக்கு புகழடைவது என்பது தேவையில்லை. மாறாக நான் வின்னராக இருக்க வேண்டும்'' என கூறுவார். இந்த டெம்பிளேட் தற்போது மீமாக பரவி வருகிறது.

அதேபோல் கடந்த 50 ஓவர் உலககோப்பை போட்டியில் இந்தியா- ஆஸ்திரேலியா அணிகள் பைனலில் அகமதாபாத் மைதானத்தில் மோதும். அப்போது ஆஸ்திரேலிய அணியின் கேப்டனாக கம்மின்ஸ் இருப்பார். அப்போது அவர் இந்திய ரசிகர்களை சைலன்ட்டாக்குவோம் எனக்கூறி அதனை களத்தில் செயல்படுத்தி இந்தியாவை வீழ்த்திஇருந்தார். இன்றும் கம்மின்ஸ் தலைமை வகித்த சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை தான் கொல்கத்தா வீழ்த்தி உள்ளது. கொல்கத்தாவின் கேப்டனாக ஸ்ரேயாஸ் அய்யர் இருந்தாலும் கூட ஆலோசகராக கம்பீர் பெரும் பங்கு வகித்து கம்மின்ஸின் ஹைதரபாத்தை அணியை வீழ்த்தி உள்ளார். இதன்மூலம் ரியல் சைலன்சர் கம்பீர் தான் என்பது போன்ற மீம் வலைதளங்களில் பரவி வருகிறது.

மேலும் நாம் கூறியது போலவே கொல்கத்தா அணியின் கேப்டனாக ஸ்ரேயாஸ் அய்யர் இருந்தாலும் கூட ஆலோசகர் கம்பீர் தான் அந்த அணியின் ஒவ்வொரு வெற்றி தோல்வியின் போதும் தொலைக்காட்சியில் காட்டப்பட்ட நபராக இருந்தார். பைனலிலும் இது மாறவில்லை. கொல்கத்தா அணி வெற்றி பெற்றவுடன் மைதானத்துக்குள் அந்த அணியின் உரிமையாளர் ஷாருக்கான் வந்தார். அப்போது அவர் தனது மகிழ்ச்சியை பகிர்ந்து கொள்ளும் வகையில் கம்பீரின் நெற்றியில் அன்பு முத்தம் கொடுத்தார். இந்த டெம்பிளைட்டும் தற்போது வலைதளங்களில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.
-
தங்கத்தை மிஞ்சப்போகும்.. பலரின் வீட்டிலேயே இருக்கும் ஒரு குட்டி உலோகம்.. அடிக்குது ஜாக்பாட்! -
தென்னிந்திய தர்காக்கள் மற்றும் பள்ளி வாசல்கள் சங்கம் அதிமுகவிற்கு ஆதரவு! -
கடலூரில் நாளை விஜய் பிரச்சாரத்தால் உதயநிதி ஸ்டாலின் பிரச்சாரத்திற்கு அனுமதி மறுப்பு.. நடந்தது என்ன? -
அமெரிக்காவை அலறவிட்ட பிரான்ஸ்! 129 டன் தங்கத்தை மீட்க "கோல்டன்" ஸ்கெட்ச்.. அப்போ இந்தியா பிளான் என்ன -
சிறகடிக்க ஆசை: விஜயாவின் மாற்றம்! முத்து, மீனாவை பெருமையாக பேசுறாங்களே! குடும்பத்தில் கொண்டாட்டம் -
ரஷ்யா மாஸ்டர் பிளான்: இந்தியாவுக்கு ஜாக்பாட்.. சீனா உதவி.. ஒன்று கூடிய BRICS நாடுகளால் டிரம்ப் ஷாக்! -
மொத்தமாக மாறிய டிரம்ப்.. ஈரான் விஷயத்தில் தொனியை மாற்றிய அமெரிக்க அதிபர்.. அடேங்கப்பா! -
2 வெர்ஷன்.. ஜனநாயகன் படம் இணையத்தில் லீக்கானது எப்படி? அதிகம் பலன் அடைவது யார்? அந்த மர்ம கை -
23000 ஊழியர்களை பணிநீக்கம் செய்த பின்பும்.. டிசிஎஸ் நிறுவனத்தில் கட்டுப்படுத்த முடியாத செலவு! -
லீக் ஆன ஜனநாயகன்.. நானே ரீலிஸ் பண்ணித்தரேன்னு சொன்னேனே விஜய்.. விட்டு விளாசிய சாட்டை! -
செந்தில் பாலாஜி பெயரை சொல்லும்போது ‘டங் ஸ்லிப்’.. கோவை தெற்கில் உளறிய பியூஷ் கோயல் -
மும்பை ரெஸ்டாரண்டில் நடந்த சந்திப்பு.. சமாதானமான ஸ்மிருதி மந்தனா குடும்பம்.. மீண்டும் திருமணம்?












Click it and Unblock the Notifications