“உன் ரத்தத்துல இன்னும் சூடு குறையல தாஸு”.. மீம்ஸ் போட்டு சிஎஸ்கே வெற்றியைக் கொண்டாடும் ரசிகர்கள்!
சென்னை: ஐபிஎல் தொடரில் சிஎஸ்கே அணி வெற்றி பெற்றதை மீம்ஸ் போட்டு கொண்டாடி வருகின்றனர் கிரிக்கெட் ரசிகர்கள்.
ஐபிஎல் கிரிக்கெட் தொடரின்17வது சீசன் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. மும்பையில் உள்ள வான்கடே மைதானத்தில் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில், சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதின.

20 ஓவர்களின் முடிவில் மும்பை இந்தியன்ஸ் அணி 6 விக்கெட் இழப்பிற்கு 186ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனால் 20 ரன்கள் வித்தியாசத்தில் மும்பை அணி, சென்னை அணியிடம் தோல்வியைத் தழுவியது. தோனி அடித்த 20 ரன்கள் சிஎஸ்கே அணியின் வெற்றிக்கு முக்கியமான ரன்களாக பார்க்கப்படுகிறது.
ஐபிஎல்லைப் பொறுத்தவரை மற்ற அணிகளைவிட சிஎஸ்கேவிற்கு சமூகவலைதளங்களில் ரசிகர்கள் அதிகம். அதிலும் குறிப்பாக தோனிக்கு ரசிகர்கள் ரொம்பவே அதிகம். இப்படி இருக்கையில், தோனியால் சிஎஸ்கே அணி வெற்றி பெற்றதென்றால், அந்த வெற்றியை சாதாரணமாகக் கொண்டாடி விடுவார்களா?
இதனால் சமூகவலைதளப் பக்கங்களைத் திறந்தாலே சிஎஸ்கேவின் வெற்றிச் செய்திதான் கண்ணில் படுகிறது. போதாக்குறைக்கு மீம்ஸ் போட்டு வேறு சிஎஸ்கேவின் வெற்றியை கிரிக்கெட் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.
இதோ அப்படியாக நம் கண்ணில் பட்ட சில நகைச்சுவையான சிஎஸ்கே மீம்ஸ்களின் தொகுப்பு உங்களுக்காக...





















Click it and Unblock the Notifications