ஆர்சிபி மீது சிஎஸ்கே ரசிகர்களின் வெறித்தனமான வன்மத்தை பாருங்க.. எவ்வளவு மீம்ஸ்
சென்னை: தங்களை குவாலிபையர் ரவுண்டுக்குள் போகவிடாமல் தடுத்ததுடன், சிரித்து கிண்டலடித்த ஆர்சிபி ரசிகர்கள் மீது கடும் கோபத்தில் இருந்த சிஎஸ்கே ரசிகர்கள் தங்கள் மொத்த வன்மத்தையும் மீம்ஸ் வடிவில் இறங்கிவிட்டுள்ளார்கள். என்னங்க சொல்றீங்க.. அவ்வளவு வெறியோடு இருந்தார்களா என்பது போல் கொண்டாடி வருகிறார்கள்.
ஐபிஎல் 2024 ஆம் ஆண்டு சீசனில் எலிமினேட்டர் போட்டியின் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை எதிர்கொண்ட ஆர்சிபி அணி தோல்வியை தழுவி உள்ளது. நேற்று இரவு அகமதாபாத்தில் டாஸ் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் அணி முதலில் பந்துவீச்சு தேர்வு செய்தது.

இதையடுத்து முதலில் ஆடிய பெங்களூர் அணி 20 ஓவர் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 172 ரன்கள் எடுத்தது. இதில் வீராட் கோலி 33 ரன்களும், ராஜாத் படிதர் 34 ரன்களும், மகிபால் 32 ரன்களும், கேமரூன் 27 ரன்களும் எடுத்தனர். ராஜஸ்தான் ராயல்ஸ் தரப்பில் ஆவேஸ் கான் 3 விக்கெட்டுகளும், ரவிச்சந்திரன் அஸ்வின் 2 விக்கெட்டுகளும், டிரெண்ட் பௌல்ட் , சந்தீப் சர்மா, சாஹல் தலா ஒரு விக்கெட்டும் கைப்பற்றினர்.
அடுத்து 173 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆடிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 19 ஓவரில் 5 விக்கெட் இழப்பிற்கு 174 ரன்கள் எடுத்து ஐந்து விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி தரப்பில் அதிகபட்சமாக ஜெய்ஸ்வால் 45 ரன்களும், ரியான் பராக் 36 ரன்களும், ஹிட்மேயர் 26 ரன்களும், டாம் கோலர் 20 ரன்களும் எடுத்தனர். பெங்களூர் அணி தரப்பில் முகமது சிராஜ் அதிகபட்சமாக இரண்டு விக்கெட் வீழ்த்தினார்.

ராஜஸ்தான் ராயல்ஸ் இந்த வெற்றி மூலம் நாளை நடைபெறும் குவாலிபையர் 2வது போட்டியில் ஹைதராபாத் அணியுடன் மோதுகிறது. இதில் வெற்றி பெறும் அணி சென்னை சேப்பாக்கத்தில் வரும் 26ம் தேதி (ஞாயிறு) நடைபெறும் ஐபிஎல் இறுதிப்போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை எதிர்கொள்ள போகிறது.

இதனிடையே இன்று ராஜஸ்தான் ராயல்ஸ் அணி , பெங்களூர் அணியை வென்றதை சிஎஸ்கே ரசிகர்கள் பெரிய அளவில் கொண்டாடி வருகிறார்கள்.
இனி அப்படி செய்யாதீங்க❤️💛🫂#RCBvsRR pic.twitter.com/uLwxC149S8
— black cat (@Cat__offi) May 22, 2024
தங்களை குவாலிபையர் ரவுண்டுக்குள் போகவிடாமல் தடுத்ததுடன், சிரித்து கிண்டலடித்த ஆர்சிபி ரசிகர்கள் மீது கடும் கோபத்தில் இருந்த சிஎஸ்கே ரசிகர்கள் தங்கள் மொத்த வன்மத்தையும் மீம்ஸ் வடிவில் இறக்கிவிட்டுள்ளனர்.

பேஸ்புக், ட்விட்டர், இன்ஸ்டாகிராம் என எதை திறந்தாலும் சிஎஸ்கே ரசிகர்களின் மீம்ஸ் வீடியோக்கள் தான் ஆக்கிரமித்து உள்ளன. சிஎஸ்கே ரசிகர்கள் பலர் ஆர்சிபியின் தோல்வியை கொண்டாடி வருகிறார்கள். ஆடிய ஆட்டம் என்ன, ஹேப்பி இன்று முதல் ஹேப்பி என்று பாட்டுகளை போட்டு கிண்டல் செய்கிறார்கள். ஆர்சிபி ரசிகர்கள் இந்த மீம்ஸ்களை பார்த்து நொந்து போய் இருக்கிறார்கள்.

How’s the josh CSK fans 😂💉
— CSK Fans Army™ (@CSKFansArmy) May 22, 2024
WARRA TROPHY FOR RCB | #WhistlePodu
pic.twitter.com/ZSA6JmP3PD












Click it and Unblock the Notifications