மும்பைக்கு மாறிய ஹர்திக் பாண்டியா.. அப்போ ரோஹித் கதி.. நோலனே குழம்ப போறாரே.. டிரெண்டான மீம்ஸ்!
சென்னை: நேற்று 2024 ஐபிஎல் தொடருக்கான ரிட்டேஷன் நடந்தது. இதில் ஹர்திக் பாண்டியா அணி மாறியதை வைத்து நெட்டிசன்கள் பலரும் மீம்ஸ் போட்டு வருகின்றனர்.
2024 ஐபிஎல் ஏலத்திற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகின்றன. துபாயில் டிசம்பர் 19 ஆம் தேதி நடைபெறவிருக்கும் ஐபிஎல் மினி ஏலத்தில் பல அதிரடி மாற்றங்கள் நடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பல வீரர்கள் அணிகளுக்கு இடையே மாற வாய்ப்புகள் உள்ளன. அடுத்த ஆண்டு ஐபிஎல் எப்போது நடைபெறும் என்பது தொடர்பாக அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை.

இந்த நிலையில் ஐபிஎல் மினி ஏலத்திற்கு முன்பாக வீரர்களை "ரிடென்ஷன்" செய்யும் லிஸ்ட் நேற்று வெளியானது.
டெல்லி அணியில் தக்கவைக்கப்பட்ட வீரர்கள்: ரிஷப் பந்த், பிரவின் துபே, டேவிட் வார்னர், விக்கி ஓஸ்ட்வால், பிரித்வி ஷா, அன்ரிச் நார்ட்ஜே, அபிஷேக் போரல், குல்தீப் யாதவ், அக்சர் படேல், லுங்கி என்கிடி, லலித் யாதவ், கலீல் அகமது, மிட்செல் மார்ஷ்ம், இஷாந்த் குமார் ஷர்மா, யகேஷ் துஷ் ஷர்மா, . வெளியிடப்பட்ட வீரர்கள்: ரிலீ ரோசோவ், சேத்தன் சகாரியா, ரோவ்மேன் பவல், மணீஷ் பாண்டே, பில் சால்ட், முஸ்தாபிசுர் ரஹ்மான், கமலேஷ் நாகர்கோட்டி, ரிபால் பட்டேல், சர்பராஸ் கான், அமன் கான், பிரியம் கார்க்.
ராஜஸ்தான் அணியில் தக்கவைக்கப்பட்ட வீரர்கள்: சஞ்சு சாம்சன் (சி), ஜோஸ் பட்லர், ஷிம்ரோன் ஹெட்மியர், யஷஸ்வி ஜெய்ஸ்வால், துருவ் ஜூரல், ரியான் பராக், டொனோவன் ஃபெரீரா, குணால் ரத்தோர், ரவிச்சந்திரன் அஷ்வின், குல்தீப் சென், நவ்தீப் சைனி, பிரசித் கிருஷ்ணா, சந்தீப் சர்மா, டிரெண்ட் போல்ட், யுஸ்வேந்திர சால்ட் , ஆடம் ஜம்பா. விடுவிக்கப்பட்ட வீரர்கள்: ஜோ ரூட், அப்துல் பாசித், ஜேசன் ஹோல்டர், ஆகாஷ் வஷிஷ்ட், குல்தீப் யாதவ், ஓபேட் மெக்காய், முருகன் அஷ்வின், கே.சி. கரியப்பா, கே.எம்.ஆசிப். டிரேட் செய்யப்பட்ட வீரர்: அவேஷ் கான்
சிஎஸ்கே அணியில் தக்கவைக்கப்பட்ட வீரர்கள்: MS தோனி (கேப்டன் & wk), மொயின் அலி, தீபக் சாஹர், டெவோன் கான்வே (wk), துஷார் தேஷ்பாண்டே, ஷிவம் துபே, ருதுராஜ் கெய்க்வாட், ராஜ்வர்தன் ஹங்கர்கேகர், ரவீந்திர ஜடேஜா, அஜய் மண்டல், முகேஷ் சவுத்ரி, மதீஷா பத்திரனா, அஜின், ஷேக் ரஷீத், மிட்செல் சான்ட்னர், சிமர்ஜீத் சிங், நிஷாந்த் சிந்து, பிரசாந்த் சோலங்கி, மகேஷ் தீக்ஷனா. வெளியிடப்பட்ட வீரர்கள்: பென் ஸ்டோக்ஸ், டுவைன் பிரிட்டோரியஸ், பகத் வர்மா, சுப்ரான்ஷு சேனாபதி, அம்பதி ராயுடு, கைல் ஜேமிசன், ஆகாஷ் சிங், சிசண்டா மகலா.
ஹர்திக் பாண்டியா மாற்றம்: குஜராத் டைட்டன்ஸ் அணியுடன் இரண்டு சீசன்களை வழி நடத்திய ஹர்திக் பாண்டியா மும்பை இந்தியன்ஸ் அணிக்கு திரும்பி உள்ளார். குஜராத் அணியால் இவர் ரீ டெயின் செய்யப்பட்டார். அதன்பின் கொஞ்ச நேரத்தில் மீண்டும் இவர் மும்பை அணிக்கு மாறிவிட்டார் என்று செய்திகள் வந்தன.
இதற்கான கேஷ் டீலிங் ஒப்பந்தம் இரண்டு உரிமையாளர்களுக்கும் இடையில் நடந்ததாக கூறப்படுகிறது. அதாவது முழுக்க கேஷ் ஏலத் தொகை + கூடுதல் பணம் + விளம்பர வாய்ப்புகள் கொடுக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. இதை வைத்துதான் நெட்டிசன்கள் மீம்ஸ் போட்டு வருகின்றனர். இந்த டீலிங்கை பார்த்தால் கிறிஸ்தபர் நோலன் குழம்பி போய்விடுவார் என்று நெட்டிசன்கள் கூறியுள்ளனர்.
முக்கியமாக ரோஹித் சர்மா இனி ஹர்திக் பாண்டியா தலைமையின் கீழ் ஆடுவார். இதையும் பலரும் கிண்டல் செய்துள்ளனர்.




-
திமுகவை விட 2% வாக்கு அதிகம்.. 3ம் இடத்திற்கு செல்கிறது அதிமுக.. புதிய டேட்டாவுடன் வந்த ஆதவ் அர்ஜுனா -
சிறகடிக்க ஆசை: முத்து மீனா வாழ்க்கையில் நடந்த நல்ல விஷயம்.. சந்தோஷத்தில் விஜயா! ரோகிணி செய்த செயல் -
தங்கம்.. 15 ஆண்டுகளில் இல்லாத மிகப்பெரிய சரிவு! 2011 செப்டம்பர் 'கிளைமாக்ஸ்' மீண்டும் நடக்கிறதா? -
"தயவு செய்து தண்ணீரை கொடுங்க.." இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான்.. பஞ்சம் மோசமாக தாக்கும் போல! -
"பாகிஸ்தானுக்கு தண்ணீர் கொடுக்க முடியாது.." சர்வதேச அரங்கில் லெப்ட் அண்ட் ரைட் வாங்கிய இந்தியா! -
தேனியில் 25 சவரன் அடமான தங்க நகையை மீட்க போன பால் வியாபாரி.. கொத்தனார் வேற.. மக்களுக்கு பெரிய பாடம் -
மோடியின் பணமதிப்பிழப்பால் மாடியிலிருந்து விழுந்து செத்தாரா பாகிஸ்தானின் ஜாவேத் கானானி? துரந்தர் 2! -
ரேஷன் அட்டைதாரர்களுக்கு மெகா ஆஃபர்: ஒரே மாதத்தில் 3 மாத ரேஷன்! மத்திய அரசின் சர்ப்ரைஸ் பின்னணி என்ன -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
விசிக + காங்கிரஸ்.. திமுகவையும் விட்டு வைக்காத இ.கம்யூனிஸ்ட்.. எந்தெந்த தொகுதிகளை கேட்குது பாருங்க! -
மத்தி மீனின் "கோடி" ரூபாய் ரகசியம்.. விலை மலிவான இந்த மீனுக்குள் ஒளிந்திருக்கும் நன்மை! வரப்பிரசாதம்












Click it and Unblock the Notifications