ஐபிஎல் கப்பை எடுத்துக்கிட்டு.. மம்தா ஊர்வலம் போறாங்களா.. மோடி ரியாக்சன்.. டிரெண்டான ஐபிஎல் மீம்ஸ்
சென்னை: சென்னை சேப்பாக்கத்தில் நடந்த ஐபிஎல் 2024 தொடரில் கொல்கத்தா அணி வென்று சாம்பியன் ஆகி உள்ளது. இதை வைத்து நெட்டிசன்கள் பலரும் மீம்ஸ் போட்டு வருகின்றனர்.
சென்னை சேப்பாக்கத்தில் நேற்று கொல்கத்தா - ஹைதராபாத் அணிகளுக்கு இடையிலான ஐபிஎல் 2024 இறுதிப்போட்டி நடந்தது.நேற்று முதலில் பேட்டிங் இறங்கிய ஹைதராபாத் அணி எந்த விதமான அதிரடியும் காட்டாமல் 18.3 ஓவர்களில் 113 ரன்கள் எடுத்து சுருண்டது. ஹெட், கெல்சன், அபிஷேக் சர்மா, திரிப்பதி, ஷாபாஸ் அகமது, என்று யாருமே பெரிதாக அந்த அணியில் அதிரடி காட்டவில்லை.

இதையடுத்து இறங்கிய கொல்கத்தா அணி தொடக்கத்திலேயே ஓவருக்கு 10 அடிக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருந்து.. எந்த விதமான திரில்லருக்கும் இடம் கொடுக்காமல் அடித்து ஆடியது.
மெதுவாக ஆட வேண்டும் என்று யோசிக்காமல் குர்பாஸ் 39 ரன்கள் எடுக்க, வெங்கடேஷ் 52 ரன்கள் எடுக்க, வெறும் 10.3 ஓவரில் 114-2 ரன்கள் எடுத்து எளிதாக கொல்கத்தா அணி சாம்பியன் ஆனது. இதன் மூலம் ஐபிஎல் தொடரில் மூன்றாவது முறையாக கொல்கத்தா சாம்பியன் ஆகி உள்ளது.

மீம்ஸ்: கடந்த 50 ஓவர் உலகக் கோப்பையை இந்தியா வென்றால் அதை மோடி கண்டிப்பாக தனது பிரச்சாரத்திற்கு பயன்படுத்துவார் என்று கூறப்பட்டது. ஆனால் அப்போது இந்தியா தோல்வி அடைந்ததால் அது நடக்கவில்லை. இந்த நிலையில்தான் தற்போது என்னது IPL கோப்பையை எடுத்துட்டு திதி மம்தா பானர்ஜி கடைசி கட்ட தேர்தல் நடக்குற தொகுதிகளுக்கு ரோடு ஷோ போறாங்களா என்று பலரும் மீம்ஸ் போட்டு கிண்டல் செய்து வருகின்றனர்.

நேற்று மேட்ச் 10.26க்கு எல்லாம் முடிந்துவிட்டது. திட்டமிட்டபடி 1 மணி நேரம் கூடுதலாக நடந்திருக்க வேண்டும். நேற்று பைனலுக்கு உண்டான எந்த விதமான ஆர்ப்பாட்டமும் இல்லாமல் ஆட்டம் முடிந்தது. இது லோ ஸ்கோரிங் மேட்ச். லோ ஸ்கோரிங் திரில்லர் ஆக இருந்தால் கூட பிரச்சனை இல்லை. ஆனால் அப்படி எந்த திரில்லும் இல்லாமல் ஆட்டம் நேற்று முடிந்தது. இதனால் பலரும் இதை கிண்டல் செய்து நேற்று ஒளிபரப்பான வாரிசு படத்தையே இதற்கு பார்த்து இருக்கலாம் என்று கிண்டல் செய்து வருகின்றனர்.

இன்னும் சில நெட்டிசன்கள் இந்த வெற்றியை வைத்து பாஜகவையும் தாக்கி மீம்ஸ் போட்டு வருகின்றனர். மம்தா ஊரு கொல்கத்தா விண் பண்ணதை நினைச்சு வருத்தப்படவா, இல்ல நம்ம ஜீ யை மதிக்காத ஸ்ரேயாஷ் ஐயரை நினைச்சி வருத்தப்படவா, இல்ல டீம் ஓனர் ஷாருக்கான்னு நினைச்சி வருத்தப்படவான்னு தெரியல ஒரே சங்கடமா இருக்கு கோபி..!! என்று போஸ்ட் செய்துள்ளனர்.

பாட் கம்மின்ஸ் தொடர்ச்சியாக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பைனல், 50 ஓவர் உலகக் கோப்பை பைனல் என்று வெற்றிபெற்றார். அவரின் வெற்றி தொடரை முடித்தது ஷ்ரேயாஸ்தான். எல்லோரையும் அமைதியாகும் அவரை அமைதியாக்கியது ஷ்ரேயாஸ்தான். இதை வைத்தும் நெட்டிசன்கள் மீம்ஸ் போட்டு வருகின்றனர்.

நேற்று இதற்கான கோப்பையை வழங்க நீண்ட நேரம் எடுத்தது.. அது ஏன் தெரியுமா? நேற்று மேட்ச் 10.26க்கு எல்லாம் முடிந்துவிட்டது. திட்டமிட்டபடி 1 மணி நேரம் கூடுதலாக நடந்திருக்க வேண்டும். அப்போதுதான் விளம்பரம் கொடுத்த ஸ்பான்சர்களுக்கு பலன். இதையும் பலரும் கிண்டல் செய்து மீம்ஸ் போட்டு வருகின்றனர்.
-
சீனாவுக்குச் சென்ற ரஷ்ய கப்பல்கள் திடீரென இந்தியா நோக்கி யூ-டர்ன்! Oil வருது -
"இனி அவர்கள் முகத்தையே பார்க்க விரும்பல".. திருப்பரங்குன்றம் வழக்கில் நீதிபதி GR சுவாமிநாதன் காட்டம் -
லுலு மால் கோயம்புத்தூர்..நூல் நூலாக தொங்கிய சிக்கன் லாலிபாப்.. அடுத்து கோவையில் நடந்த பெரிய ட்விஸ்ட் -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஷாக்! அதிரடியாக தூக்கப்பட்ட ரேஷன் கார்டுகள்! 41.41 லட்சம் குளோஸ்! -
திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் கண்ட காட்சி.. ஆடிப்போன பொதுமக்கள்.. அதிர வைத்த ஊழியர்கள் -
கடன் சுமை.. வீட்டை ஜப்தி செய்த அதிகாரிகள்.. தெருவோரம் தூங்கிய சீரியல் நடிகை.. நெகிழ வைத்த மாற்றம்! -
சிவி சண்முகம் சர்ச்சை பேச்சு.. இன்ஸ்டா போஸ்டில் நயன்தாரா பதிலடி.. இப்படி சொல்லிட்டாரே! குவியும் கமெண்ட்ஸ்! -
கரூர் கூட்ட நெரிசலில் எடுக்கப்பட்டதாக சொல்லப்படும் டிரோன் காட்சி முதல்முறையாக வெளியீடு! -
அன்று 10 ஆயிரம் போட்டிருந்தால் இன்று ஒரு கோடி.. ஆச்சரியமாக வளர்ந்த பிரபல நிறுவனம் -
நள்ளிரவில் அமெரிக்கா எடுத்த முக்கியமான முடிவு.. மொத்தமாக சரிந்த தங்கம்.. இனிமேல் இப்படி தான்? -
ஆதவ் அர்ஜுனா உடைத்த அடுத்த பர்னிச்சர்.. தவெக நிர்மல்குமாரின் பதிவும் ஒரே வார்த்தையில் காலி -
சிலிண்டர் முன்பதிவு செய்பவர்களுக்கு ஷாக் நியூஸ்! இனி இது இல்லைனா கேஸ் வராது.. மத்திய அரசின் தடை?












Click it and Unblock the Notifications