மழை வந்தா என்ன.. நீச்சல் போட்டி நடத்தியாவது எங்களுக்கு கப்பு குடுங்கய்யா!
சென்னை : ஐபிஎல் தொடரின் லீக் போட்டிகள் நாளையுடன் முடிவடைய உள்ள நிலையில், ப்ளேஆப்புக்கு தகுதி பெறாவிட்டாலும், தகுதி பெற்ற அணிகளின் புள்ளிகளைக் குறைக்கும் வகையில் சில அணிகள் ஆடி வருவதை வைத்து நகைச்சுவையான மீம்ஸ்களைப் பகிர்ந்து வருகின்றனர் நெட்டிசன்கள்.
போர்ப் பதற்றம் காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 18-வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர், தற்போது மீண்டும் முழு வீச்சுடன் நடந்து வருகிறது. இடையில் மழை குறுக்கிட்டாலும், அணிகளும் சளைக்காமல் விளையாடி வருகின்றன, ரசிகர்களும் குதூகலம் குறையாமல் பார்த்து வருகின்றனர்.

ஒரு வழியாக நாளையுடன் லீக் போட்டிகள் முடிவடைந்து, அடுத்ததாக ப்ளேஆப் சுற்று ஆரம்பிக்க இருக்கிறது. நடப்பு ஐ.பி.எல் தொடரில் குஜராத், பெங்களூரு, பஞ்சாப், மும்பை ஆகிய அணிகள் பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறியுள்ளன. அனைவரும் அதிகம் எதிர்பார்த்த சிஎஸ்கே அணி, ப்ளேஆப்புக்கு தகுதி பெறாமல் வெளியேறியுள்ளது.
நேற்று அந்த அணி, இந்த ஐபிஎல்லில் தனது கடைசி ஆட்டத்தை ஆடி வெற்றி பெற்றது. தோல்வியுடன் லீக் போட்டியில் இருந்து வெளியேறாமல், சிஎஸ்கே வெற்றி பெற்றது. சிஎஸ்கே அணி வெற்றி பெற்றது, அந்த அணி ரசிகர்களை ஒருபுறம் மகிழ்ச்சி அடைய வைத்துள்ளது. ஆனால், சிஎஸ்கேவின் இந்த வெற்றியால், பட்டியலில் முதலிடத்தில் உள்ள ஜிடி அணி தோல்வியைச் சந்தித்திருப்பது அந்த அணி ரசிகர்களை சோகமடைய வைத்துள்ளது.
அதனால்தான், "ப்ளேஆப்புக்கு தகுதி இல்லனு அப்பவே துரத்தி விட்ருக்கணும்.. இப்ப பாரு உள்ள புகுந்து குட்டையைக் குழப்புறானுங்க!" என தங்களது மனக்குமுறல்களை எல்லாம் மீம்ஸ்களாகப் பகிர்ந்து வருகின்றனர். அதோடு, மழை காரணமாக ஆட்டம் நிறுத்தப்பட்டால், "மழை வந்தா என்ன.. நீச்சல் போட்டி நடத்தியாவது எங்களுக்கு கப்பு குடுங்கய்யா!" என ஆர்சிபி கேட்பது போல் கலாய்த்துள்ளனர்.
இதோ அப்படியாக சமூகவலைதளப் பக்கங்களில் நம் கண்ணில் பட்ட ஐபிஎல் ஸ்பெஷல் மீம்ஸ்களின் தொகுப்பு உங்களுக்காக...




















Click it and Unblock the Notifications