2 மேட்ச், 3 மேட்ச்னு என்னடா அசிங்கமா சொல்லிக்கிட்டு.. மொத்தமா சாமிக்குனு சொல்லுங்கடா!
சென்னை: ஜெயித்தாலும் சரி.. தோற்றாலும் சரி.. இந்த முறை சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை விடாமல் மீம்ஸ் போட்டு வெளுத்து வாங்கி வருகின்றனர் நெட்டிசன்கள். ஆபத்பாந்தவனாக தோனியே வந்து மீண்டும் வெற்றியைத் தந்தாலும், எங்களுக்கு கன்டென்ட் தான் முக்கியம் பாஸ் என மீம்ஸ்களால் சிக்சர்களை பறக்கவிட்டு வருகிறார்கள் மீமர்கள்.
இந்த வருடம் ஐபிஎல் ஆரம்பித்ததில் இருந்தே சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தான் இணையவாசிகளின் பிரதான மீம்ஸ் கன்டென்டாக இருந்து வருகிறது. இதுவரை விளையாடிய ஏழு போட்டிகளில் இரண்டு போட்டிகளில் மட்டுமே வெற்றி பெற்று, 4 புள்ளிகளுடன் 10வது இடத்தில், அதாவது கடைசி இடத்தில்தான் இருந்து இருக்கிறது சென்னை அணி.

லக்னோவுடனான கடந்த போட்டியில் தோனி மற்றும் துபேவின் அதிரடியான ஆட்டத்தினால் சென்னை அணி வென்றிருந்தாலும் கூட, தொடர்ந்து வரிசைப் பட்டியலில் கடைசி இடத்தில் நீடித்து வருவதால், வழக்கம் போல் அந்த அணியை வைத்தே நகைச்சுவையான மீம்ஸ்களைப் பகிர்ந்து வருகிறார்கள் நெட்டிசன். என்னதான் மற்ற அணிகளை கொஞ்சம் ஊறுகாய் போல், லேசாக தொட்டுக் கலாய்த்தாலும், புல் மீல்ஸ் மாதிரி சமூகவலைதளங்களை திறந்தாலே சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை கலாய்க்கும் மீம்ஸ்கள் தான் நிரம்பி வழிகின்றன.
"ஐபிஎல் பார்த்தா டிப்ரசன் போகுமா.. டேய் எனக்கெல்லாம் டிப்ரசன் வந்ததே ஐபிஎல்ல பார்த்துத்தான்டா!" என்றும், "என்னடா 2 மேட்ச், 3 மேட்ச்னு அசிங்கமா சொல்லிக்கிட்டு.. மொத்தமா சாமிக்கு விட்டுட்டோம்னு சொல்லுங்கடா!" என்றும் விதவிதமாக சிஎஸ்கேவைக் கலாய்த்து வருகின்றனர்.
இதோ, அப்படியாக சமூகவலைதளங்களை ஆக்கிரமித்து, சென்னை அணி ரசிகர்களை கடுப்பேற்றி வரும் மீம்ஸ்களில் சில உங்களுக்காக...























Click it and Unblock the Notifications