என்னாடி இது.. இவனுங்களும் ஆட மாட்டேங்குறாங்க.. நம்மளையும் ஆட விட மாட்டேங்குறாங்க!
சென்னை : ஐபிஎல் தொடரின் இன்றைய ஆட்டத்தில், சிஎஸ்கேவும், எஸ் ஆர் ஹெச்சும் விளையாடி வரும் நிலையில், இந்த இரு அணிகளை வைத்தும் நகைச்சுவையான மீம்ஸ்களைப் பகிர்ந்து வருகின்றனர் நம் குறும்புக்கார நெட்டிசன்கள்.
ஐபிஎல் ஆரம்பித்ததில் இருந்தே சமூகவலைதளப் பக்கங்களில் எப்போதுமே கிரிக்கெட் மீம்ஸ்களின் ஆதிக்கம்தான். அதுவும் இந்த வருடம் வழக்கத்திற்கு மாறாக ஆர்சிபி தொடர்ந்து நன்றாக விளையாடி, பட்டியலில் முன்னிலையிலும், அதற்கு நேர் எதிராக சிஎஸ்கே தொடர்ந்து ஆட்டங்களில் சொதப்பி, பட்டியலில் கடைசி இடத்திலும் உள்ளது.

இந்நிலையில், இன்று பட்டியலில் கடைசி இடத்தில் உள்ள சிஎஸ்கேவுக்கும், அதற்கு முந்தைய இடத்தில் உள்ள எஸ் ஆர் ஹெச் அணிக்கும் போட்டி நடந்து வருகிறது. பிறகென்ன, "யாரு 10வது இடத்துல இருக்கறதுனு எனக்கும், இவனுக்கும்தான் போட்டியே" என மீம்ஸ் போட்டு கலாய்த்து வருகின்றனர் நெட்டிசன்கள். கூடவே, "என்னாடி இது.. இவனுங்களும் ஆட மாட்டேங்குறாங்க.. நம்மளையும் ஆட விட மாட்டேங்குறாங்க!" என சியர்ஸ் கேர்ள்ஸும் நொந்து கொள்வதாகவும் மீம்ஸ்களில் கலாய்த்துள்ளனர்.
இதோ அப்படியாக நம் கண்ணில் பட்ட சில நகைச்சுவையான ஐபிஎல் மீம்ஸ்களின் தொகுப்பு உங்களுக்காக...



















Click it and Unblock the Notifications