6 பந்துகளில் 41 ரன்கள் தேவை.. இருந்தும் எதிரிகள் கண்ணில் ஒரு மரண பயம்.. டிரெண்டான சிஎஸ்கே மீம்ஸ்
சென்னை: நேற்று டெல்லி அணிக்கு எதிரான ஆட்டத்தில் சிஎஸ்கே அணி தோல்வி அடைந்த நிலையில் சிஎஸ்கே அணியை கலாய்த்து நெட்டிசன்கள் பலரும் மீம்ஸ் போட்டு வருகின்றனர்.
நேற்று சிஎஸ்கே மேட்சில் எல்லாம் சொதப்பலாக இருந்தது. கேப்டனாக பவுலிங் ரொட்டேஷன் தொடங்கி பீல்டர் செட்டப் வரை பலவற்றில் கேப்டன் ருத்துராஜ் சொதப்பினார். பவர் பிளேவை அஸ்வின் சரியாக போடுவது இல்லை என்பதால் இன்று நடந்த மேட்சில் பவர் பிளேவில் அவரை கொண்டு வரவில்லை.

அது சரியான முடிவு என்று பார்த்தால்.. அதற்காக வேறு ஸ்பின் பவுலரையும் பவர் பிளேவிலும் கொண்டு வர மாட்டேன் என்று பிடிவாதமாக இருந்தார். நூரை களமிறக்கி டெஸ்ட் செய்து இருக்கலாம். ஆனால் செய்யவில்லை. முகேஷ் சவுத்திரி மீண்டும் மீண்டும் மோசமாக பவர் பிளேவில் வீசியும் அவருக்கு 3 ஓவர்களை கொடுத்தார். இதை வைத்தும் நெட்டிசன்கள் பலரும் மீம்ஸ் போட்டு வருகின்றனர்.

டிரெண்டான மீம்ஸ்
குறைந்தபட்சம் 16 ஓவர்களில் ஸ்பின் ஓவர் கோட்டாவை முடிக்க முடியவில்லை. முகேஷுக்கு 2 ஓவர்கள் மட்டும் தொடக்கத்தில் கொடுத்து ஸ்பின் பவுலர்களை முன்பே இறக்கி கோட்டாவை முடித்து இருந்தால் கடைசியில் முகேஷுக்கு கூடுதல் ஓவர் கொடுக்க வேண்டி இருக்காது. ஆனால் அவர் போட்ட 19வது ஓவரில் தேவையின்றி சிக்ஸ், பவுண்டரி சென்று ஆட்டம் மாறியது.

ருத்துராஜ் செய்த தவறால் கடைசி 4 ஓவர்களில் தரமான பவுலிங் போட சரியான பவுலர்கள் இல்லாத நிலை இருந்தது. சேப்பாக்கம் மைதானத்தில் ஜடேஜா போன்றவர்களை கூட 4 ஓவர்கள் போடாமல் நிறுத்தியது மோசமான முடிவாக பார்க்கப்படுகிறது.
அஸ்வின் மும்பைக்கு எதிரான முதல் ஆட்டத்தில் மட்டுமே கொஞ்சம் சுமாராக ஆடினார். 4 ஓவரில் 1 விக்கெட் எடுத்தார். அதோடு 31 ரன்கள் கொடுத்தார். பெங்களூருக்கு எதிரான ஆட்டத்தில் அவரின் பவுலிங் எடுபடவில்லை. மிக மோசமான பவுலிங்கை அவர் வீசினார். பெங்களூருக்கு எதிரான மேட்சில் 2 ஓவர் வீசியவர் 22 ரன்களை கொடுத்தார். 1 விக்கெட் எடுத்தார். ராஜஸ்தான் அணிக்கு எதிரான ஆட்டத்தில் அவரின் பவுலிங் இன்னும் மோசம் ஆனது. 4 ஓவரில் 46 ரன்கள் கொடுத்தார். 1 விக்கெட் எடுத்தார். இதில் எந்த போட்டியிலும் அவரின் பேட்டிங் சரியாக இல்லை. மிக மோசமாகவே இருந்தது இன்று ருத்துராஜ் அவரை அணியில் எடுத்தது தவறாக பார்க்கப்படுகிறது.

படுதோல்வி மீம்ஸ்
நேற்று சிஎஸ்கே அணியின் பேட்டிங், பவுலிங், பீல்டிங் என்று எல்லாமே மிக மோசமாக இருக்காது. முக்கியமாக சிஎஸ்கே அணியில் டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் ரச்சின் ரவீந்திரா, தேவன் கான்வே, ருத்துராஜ், துபே என்று டாப் ஆர்டர் மொத்தமாக சரிந்தது. மிடில் ஆர்டர் ஜடேஜாவும் மோசமாக சொதப்பினார். பவுலிங்கில் பதிரானா, நூர் தவிர மற்ற எல்லோரும் மிக மோசமாக சொதப்பினர். இதை வைத்து நெட்டிசன்கள் பலரும் மீம்ஸ் போட்டு வருகின்றனர்.

சிஎஸ்கே தோல்வி மீம்ஸ்
நேற்று சென்னை சேப்பாக்கத்தில் நடந்த டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் சிஎஸ்கே அணி தோல்வி அடைந்தது. முதலில் இறங்கிய டெல்லி அணி 183/6 (20) ரன்கள் எடுத்தது. கே. எல் ராகுல் 77 ரன்கள் எடுத்து அசால்ட்டாக சிஎஸ்கே அணிக்கு பிரஷர் போட்டார். அவரை அடுத்து இறங்கிய சிஎஸ்கே அணியில் டாப் ஆர்டர் சீட்டு கட்டு போல சரிந்தது. விஜய் சங்கர் மட்டும் 54 பந்தில் 69 ரன்கள் எடுத்தார். இன்னொரு பக்கம் டெஸ்ட் இன்னிங்ஸ் ஆடிய தோனி 26 பந்தில் 30 ரன்கள் எடுத்தார்.

மற்ற வீரர்கள் யாரும் 20 ரன்கள் கூட எடுக்காத நிலையில் சிஎஸ்கே அணி மோசமாக படுதோல்வி அடைந்தது. இதன் மூலம் 4 போட்டிகளில் முதல் போட்டியை தவிர மற்ற போட்டிகளில் வரிசையாக சிஎஸ்கே அணி தோல்வி அடைந்து உள்ளது.



-
"அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவை பதவிநீக்கம் செய்ய வேண்டும்”.. முதல்வர் விஜய்க்கு கிருஷ்ணசாமி வைத்த கோரிக்கை -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
"3 சேனல்கள் நீக்கம் இல்லை.. தொழில்நுட்ப கோளாறால் தற்காலிக ஒளிபரப்பு பாதிப்பு” - அமைச்சர் ராஜ்மோகன் -
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
நேற்று இந்திரா, நாளை நேரு.. 62 வருட சாதனை முறியடிப்பு! மிக நீண்ட கால பிரதமர் என்ற வரலாறு படைத்த மோடி -
காவலாளிக்கு லாட்டரியில் விழுந்த ரூ.78 கோடி பரிசு.. ஐக்கிய அரபு அமீரகத்தில் ‘மெகா ஜாக்பாட்’












Click it and Unblock the Notifications