Jailer memes: போய் சொல்லுங்கண்ணே... நா யாருனு எல்லோருக்கும் நிரூபிக்கிற நேரம் இது!
சென்னை: நெல்சன் இயக்கத்தில் ரஜினி நடித்துள்ள ஜெயிலர் படம் ரிலீசானதை வைத்து விதவிதமான மீம்ஸ்களால் இணையத்தை தெறிக்க விட்டு வருகின்றனர் நெட்டிசன்கள்.
முன்பெல்லாம் புதுப்படம் ரிலீசானால், ஒரு வாரம் கழித்து டிவியிலோ அல்லது செய்தித்தாளிலோ வரும் விமர்சனத்தைப் பார்த்துவிட்டு மற்றவர்கள் அப்படத்திற்கு செல்வது பற்றி யோசிப்பார்கள். ஒரு படத்தின் வெற்றித் தோல்வியையே இதுபோன்ற விமர்சனங்கள் நிர்ணயித்த காலங்கள் உண்டு.
ஆனால் இப்போது அப்படியில்லை. கையில் செல்போனை வைத்துக் கொண்டு தியேட்டருக்குள் இருந்து கொண்டே, பட ரிலீசன்று உடனுக்குடன் படம் பற்றிய அப்டேட்டுகளை விமர்சனங்களாக சமூகவலைதளங்களில் அள்ளித் தெளித்து விடுகின்றனர் சினிமா ரசிகர்கள். அதனாலேயே முன்னணி நடிகர்களின் பட ரிலீசன்று படத்திற்கு போக முடியாதவர்கள், சமூகவலைதளங்களில் வரும் விமர்சனங்களை வைத்து அப்படம் வெற்றியா, தோல்வியா என முடிவு செய்கின்றனர்.
அந்தவகையில் ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்த்த நெல்சன் இயக்கத்தில் ரஜினி நடித்த ஜெயிலர் படம் நேற்று ரிலீசானதில் இருந்து, சமூகவலைதளப் பக்கங்களில் எங்கு திரும்பினாலும், ரஜினி, ரஜினி, ரஜினிதான். குறிப்பாக சமூகவலைதளங்களில் படம் பார்த்தவர்கள் ஒவ்வொரு சீனையும் ஸ்டேட்டஸாக வைத்து, படம் பார்க்காதவர்களை வெறுப்பேற்றி வருகின்றனர்.
இப்படி ஸ்டேட்டஸ் போடுகிறவர்கள் ஒருபக்கம் என்றால், படத்தை மீம்ஸ்களாகப் போட்டு கலகலக்க வைப்பவர்கள் மறுபுறம். படத்திற்கு பாசிட்டிவ்வாக விமர்சனங்கள் வருவதை இந்த மீம்ஸ்களே உறுதி செய்கின்றன. மீம்ஸ் விமர்சனங்களைப் பார்த்து பலர் ஜெயிலர் படத்திற்கு போக ஆசைப்படுகிறார்கள் என்பது சமூகவலைதளங்களில் பகிரப்படும் மீம்ஸ்களைப் பார்த்தாலே தெரிகிறது.
இதோ அப்படியாக இணையத்தில் நம் கண்ணில் பட்ட சில நகைச்சுவையான மீம்ஸ்களின் தொகுப்பு உங்களுக்காக...


















Click it and Unblock the Notifications