"யோவ் மிலிட்டரி.. நீ எங்கயா இங்க" ஜனநாயகன் டிரெய்லரில் புஸ்ஸி ஆனந்த், அருண்ராஜ்.. தெறிக்கும் மீம்ஸ்!
சென்னை: விஜய் நடித்துள்ள ஜனநாயகன் திரைப்படத்தின் டிரெய்லர் ரிலீஸாகி இருக்கும் நிலையில், அது பாலகிருஷ்ணா நடித்த பகவந்த் கேசரி ரீமேக் என்பது தெரிய வந்துள்ளது. இதையடுத்து விஜய் ரசிகர்கள் சோசியல் மீடியாவில் உருவாகி இருக்கும் ஜாலியான மீம்ஸ் கவனத்தை பெற்று வருகிறது. அதுதொடர்பாக இந்த செய்தியில் பார்க்கலாம்.
தேசிங்குராஜா படத்தில் விமல் செய்த சேட்டையை கேள்வி கேட்க செல்லும் சூரி, திடீரென சிங்கமுத்துவை அடித்துவிட்டு செல்வார். அதற்கு சிங்கமுத்து, "அதுக்கு என்னைய ஏன்டா அடிக்கிறீங்க" என்று புலம்புவார். அதில் வரும் சிங்கமுத்துவாக தெலுங்கு ரசிகர்களாகவும், சூரியை விஜய் ரசிகர்களாகவும் மாற்றி, ஜனநாயகன் கேசரி தான்டா.. பாத்துக்கோங்கடா என்று சூரி சொல்வதாகவும், அதற்கு சிங்கமுத்து, அதனை எதுக்குடா வேறு ஃபிளேவர்ல எங்களுக்கு ரீ டெலிவர் பண்றீங்க என்று கேட்பதாக உருவாக்கப்பட்டுள்ள மீம் "என்ன பண்றது.. கஷ்டமாதான் இருக்கு ரகம்"

"உள்ளத்தை அள்ளித்தா" படத்தில் கவுண்டமணி, "யோவ் மிலிட்டரி.. நீ எங்கயா இங்க" என்று நக்கல் செய்வார். அதுபோல் ஜனநாயகன் படத்தின் டிரெய்லரில் முன்னாள் ஐஆர்எஸ் அதிகாரி அருண்ராஜ் தோன்றி இருக்கிறார். அதனால் விஜய் ரசிகர்களே, "யோவ் மிலிட்டரி.. நீ என்னயா இங்க" என்று கேட்பதாக உருவாக்கப்பட்டுள்ள மீம் என்னப்பா நடக்குது இங்க ரகம்.

லிங்கா படத்தில் ரஜினியையும், தனது மகள் சோனாக்ஷியையும் தேடி செல்லும் ராதாரவி, அழுது கொண்டே சாப்பிடுவார். அதில் வரும் ராதாரவியாக விஜய் ரசிகர்களை மாற்றி, "கேசரியை எதிர்பார்த்தால், அதனை விட மோசமாக ஏதோ கிண்டி கொண்டு வந்திருக்கான்" என்று அழுதுகொண்டே சாப்பிடுவதாக உருவாக்கப்பட்டுள்ள மீம் முடியலடா சாமி ரகம்.
தவசி படத்தில் குடுகுடுப்புகாரரை கூட்டத்தில் பார்க்க வடிவேலு சென்றுவிட்டு ஓட முயற்சிக்கும் போது, திடீரென "கூட்டத்தில் இருந்து மஞ்சள் சட்டைக்காரன் எஸ்கேப் ஆகுறான்" என்ற குரல் வரும். அதில் வரும் வடிவேலுவாக அனிருத்தை மாற்றி, "அ.வினோத்தை மட்டும் அடிக்கிறீங்களே.. கூட்டத்துல மியூசிக் போட்டவன் எஸ்கேப் ஆகுறான் பாருங்க" என்று உருவாக்கப்பட்டுள்ள மீம் ஆள விடுங்கடா ரகம்.

ஜனநாயகன் ட்ரெய்லர் தொடக்கத்தில் விஜய்க்கு பில்டப் கொடுக்கும் வகையில் ஒரு கதாபாத்திரம் அமர்ந்திருக்கும். அதன் முகம் காட்டப்படாது. அந்த கதாபாத்திரம் புஸ்ஸி ஆனந்த் தான் என்று நம்பும் வகையில் உருவாக்கப்பட்டுள்ள மீம் அட்ரா சக்க.. இதுதான்டா ட்விஸ்ட் ரகம் என்று உருவாக்கப்பட்டுள்ள மீம் விஜய் ரசிகர்களுக்கே அதிர்ச்சி.















Click it and Unblock the Notifications