ரீசார்ஜ் பண்ணலைனா 1000 வாட்டி கால் பண்றீங்களே.. உங்க பையன் கல்யாணத்துக்கு ஒரு போன் பண்ணுனீங்களா?
சென்னை: 'பல வருடங்களாக லட்சக்கணக்கில் ரீசார்ஜ் செய்துள்ளோம்.. ஒரு தேங்காய் பையாவது கொடுங்கண்ணே' என தன் மகனுக்கு ஆடம்பரமாக திருமணம் நடத்தி முடித்துள்ள அம்பானியிடம் மீம்ஸ் வாயிலாக அன்பாக கோரிக்கை வைத்து வருகின்றனர் நம் குறும்புக்கார நெட்டிசன்கள்.
இந்தியாவின் முன்னணி கோடீஸ்வரர்களில் ஒருவரான அம்பானி வீட்டில் நடக்கும் சிறு விசேஷம் என்றாலும்கூட, அதில் ஆடம்பரத்திற்குப் பஞ்சம் இருக்காது. அப்படி இருக்கையில் அவரது கடைசி மகன் திருமணம் என்றால் சும்மாவா? சர்வதேச அளவில் பிரபலங்களை அழைத்து அவர்களுக்கு தலா ரூ. 2 கோடியில் வாட்ச் பரிசளித்து என மக்கள் எண்ணி எண்ணி பிரமிக்கும் அளவிற்கு தன் மகனின் திருமணத்தை முடித்து விட்டார் அம்பானி.
இந்தத் திருமணம் முடிந்து ஒரு வாரம் ஆனபோதும், சமூகவலைதளங்களில் அதன் பேச்சு இன்னமும் ஓயவில்லை. அதுவும் இந்த மாதம் ஜியோ தனது கட்டணத்தை உயர்த்திவிட்ட கோபத்தில் இருந்த நெட்டிசன்களும், 'இதையும் அதையும் கூட்டிக் கழிச்சுப் பாரு.. கணக்கு சரியா வரும்' என அண்ணாமலை ராதாரவி ரேஞ்சுக்கு இரண்டையும் சேர்த்து, நகைச்சுவையான மீம்ஸ்களாகப் பகிர்ந்து வருகின்றனர்.
இதோ அப்படியாக சமூகவலைதளப் பக்கங்களில் நம் கண்ணில் பட்ட சில நகைச்சுவையான மீம்ஸ்களின் தொகுப்பு உங்களுக்காக...




















Click it and Unblock the Notifications