"தேங்காய் சட்னி".. தங்கத்தை நசுக்கிடாம எடுத்துட்டு வாடா.. கண்ணுல தண்ணி வருது ஆத்தா.. "ஜாலி தக்காளி"
சென்னை: கோயம்பேடு மார்க்கெட்டிற்கு தக்காளி வரத்து சமீப காலமாகவே வெகுவாக குறைந்துவிட்டது. இதனால் தக்காளியின் விலை ஒரு கிலோ ரூ.100 ஆக உயர்ந்துள்ளது.
அதிலும், சென்னை கோயம்பேடு மார்க்கெட்டிற்கு தக்காளியினுடைய வரத்து கடந்த ஆண்டை விட குறைவாகவே உள்ளது. இதற்கு காரணம் கடந்த ஆண்டு ஆந்திரா, கர்நாடகா பகுதி விவசாயிகளுக்கு சரியான விலை கிடைக்காததால், அவர்கள் மாற்று பயிரை நடவு செய்ய தொடங்கி விட்டதாகவும், அதனாலேயே தக்காளி விலை உயர்ந்துள்ளதாகவும் சொல்கிறார்கள்.

என்ன காரணம்: பருவமழையும் மற்றொரு காரணமாக சொல்லப்பட்டு வரும் நிலையில், காய்கறி கடை மார்க்கெட்களிலும் தக்காளி வரத்து குறைந்தே காணப்படுகிறது.
நடவடிக்கை: இதற்கான மாற்று நடவடிக்கைகளை தமிழக அரசு கையில் எடுத்து வருகிறது. அதன்படி, தமிழகத்தின் ரேஷன் கடைகளிலும் தக்காளி விற்பனைக்கு வந்துள்ளது.. முதல்கட்டமாக சென்னையில் இந்த திட்டம் துவங்கப்பட்டுள்ளது.
எனினும், தக்காளி இல்லாமல் என்ன குழம்பு வைப்பது என்று? இல்லத்தரசிகள் கலங்கி போயுள்ளனர்.. தக்காளி இல்லாமல் என்ன குழம்பு வைப்பது, தக்காளி இல்லாமல் என்ன சமையல் செய்வது என்று கூகுளில் தேடுகிறார்களாம்.. ஹோட்டல்களிலும், தக்காளி சட்னி இல்லை என்று போர்டு எழுதி வைத்துவிடுகிறார்கள். இந்நிலையில்தான், நெட்டிசன்கள் தக்காளி விலை உயர்வை வைத்து, மீம்ஸ்களை இணையத்தில் மிதக்க விட்டுள்ளனர்.
தக்காளி இல்லாமல் சமைக்க முடியுமா? கூகுளில் தேடு மக்கள்.. என்ற போட்டோவை பதிவிட்டு, "எங்களுக்கு வேற வழி தெரியல ஆத்தா" என்று கலங்குகிறார் ஒரு நெட்டிசன்..

வடிவேலு: பெட்ரோல் டீசல் விலை உயர்வை, தக்காளி விலை உயர்வுடன் தொடர்புபடுத்தி மீம்ஸ்கள் வருகின்றன.. அதுமட்டுமல்ல, தேங்காய் சட்னியை பார்த்து, தக்காளி சட்னி ஏளனமாக கிண்டல் செய்வது போலவும் இன்னொரு மீம்ஸ் வட்டமடிக்கிறது.

இதுபோக, வழக்கம்போல் வடிவேலு மீம்ஸ்கள் தக்காளிக்குள்ளும் வந்துவிட்டன.. தற்போது தங்கம் விலை குறைந்துள்ளதால், அந்த செய்திகளை பதிவிட்டு, "அவனவன் தக்காளி வாங்கவே கஷ்டப்படுறான் போவியா" என்று வடிவேலு மீம்ஸை ஒருவர் பதிவிட்டுள்ளார். இணையத்தில் வைரலாகும் ஒருசில மீம்ஸ்கள்தான் இவையெல்லாம்

-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications