விர்னு ஏறுது மழை தண்ணி.. ஆபீஸ் போற குழந்தைக்கெல்லாம் லீவு இல்லையாமே.. மழை + ராஜா + பஜ்ஜி.. வேற லெவல்
சென்னை: "எங்க தெருவுல தண்ணி வந்துடுச்சு" என்று மழை நீரை வைத்து நெட்டிசன்கள் இணையத்தில் மீம்ஸ்களை தெறிக்க விட்டுக் கொண்டிருக்கிறார்கள்.

தமிழகத்தில் மழை பெய்ய துவங்கிவிட்டது.. அதுவும் நேற்று முன்தினம் முதல் கனமழை வெளுத்து கட்டியது.. விடிய விடிய பெய்த மழையால், நேற்று பகல் வேளைகளிலும் விட்டு விட்டு மழை பெய்தது. இதனால், சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது.

மழை: சென்னை மட்டுமின்றி, சுற்றுவட்டார பகுதிகளிலும், வெளி மாவட்டங்களிலும் மழை பெய்தது. சென்னை நுங்கம்பாக்கம், சூளைமேடு, தி.நகர், கோடம்பாக்கம், சைதாப்பேட்டை, ஆயிரம் விளக்கு, அண்ணாநகர், பரங்கிமலை, கிண்டி, ஈக்காட்டுத்தாங்கல், மீனம்பாக்கம், மடிப்பாக்கம், வேளச்சேரி, திரிசூலம், எழும்பூர் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் கனமழை கொட்டித்தீர்த்ததால், சாலையோரங்களில் மழைநீர் தேங்கி நின்றதை காண முடிந்தது.

மீட்பு பணிகள்: சென்னையில் பெரும்பாலான இடங்களில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.. ஆனாலும், மழைநீர் தேங்கி நிற்கும் பகுதிகளில் மாநகராட்சிப் பணியாளர்களும், மாநில பேரிடர் மீட்புக்குழுவினரும், மேற்கண்ட பகுதிகள் என்றில்லாமல், மழைநீர் தேங்கி நின்ற பகுதிகளில் களப்பணியில் இறங்கினர்.. தேங்கி நின்ற நீரை வெளியேற்றும் பணிகளில் ஈடுபட்டனர்.. அந்தவகையில், மாநகராட்சியும் அரசும் சிறப்பாக மீட்பு பணியை கையாண்டது சென்னைவாசிகளை ஈர்த்திருந்தது.

இதனிடையே, இந்த மழையை வைத்து, இன்னமும் மீம்ஸ்கள் இணையத்தில் டிரெண்டாகி வருகின்றன.. "இப்ப மழை, பஜ்ஜி, ராஜான்னு chennairains# ஸ்டேட்ஸ் போட வேண்டியது, இன்னும் ரெண்டு நாள் மழை வந்தா, ஹெலிகாஃப்டர்ல வந்து எனக்கு பிரட் போடு, பிஸ்கட் போடுன்னு pray for chennai#-ன்னு போட வேண்டியது

விடியல் ஆட்சியா: "வரலாறு காணாத மழைன்னு வானிலை ஆராய்ச்சியாளர்கள் எல்லாம் சொல்றாங்க.. ஆனா எங்கியுமே தண்ணி நிக்கலயே. இதுதான் திராவிட மாடலா? விடியல் ஆட்சியா? யார ஏமாத்த பாக்குற. ஏய் மோசக்காரா chennairains#

ஆபீஸ் போற குழந்தைக்கெல்லாம் லீவு இல்லையாமே, ஒரு 10 நிமிஷம் ஸ்டாப் ஆனா ஆபீஸ் போயிடுவேன்.. நிக்க மாட்டேங்குதே.. ரொம்ப கவலையா இருக்கு மாமே என்றெல்லாம் மீம்ஸ்கள் தெறிக்க விட்டுக் கொண்டிருக்கிறார்கள் நெட்டிசன்கள்.





அடுத்த அறிவிப்பு: இந்நிலையில், மழை தொடரும் என்ற அடுத்த செய்தியும் வெளியாகி உள்ளது.. குறிப்பாக இன்றும் வட தமிழ்நாட்டில் ஒருசில இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், தென் தமிழ்நாட்டில் ஓரிரு இடங்களிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது. அதேபோல தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் ட்வீட்டிலும், "மழை மேகங்கள் உள்ளே நகர்கின்றன. நேற்று (ஜூன் 18 இரவு) இரவு போல் இல்லை. விட்டு விட்டு மழை தொடரும்" என்று பதிவிட்டுள்ளார்.
-
அடி வெளுக்கப்போகும் கனமழை! 7 மாவட்டங்களுக்கு பறந்த அலர்ட்.. உஷார் மக்களே! -
50 கி.மீ வேகத்தில் காற்று.. இடி, மின்னலுடன் கொட்டப்போகும் பேய் மழை! 5 மாவட்டங்களுக்கு வார்னிங் -
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
"சாக்கடையில் இருக்க வேண்டியது.." கரப்பான் பூச்சி கட்சி குறித்து பவன் கல்யாண் சொன்ன கருத்து -
300 கோடி சொத்துக்காக நந்தனாவை நடுத்தெருவில் நிறுத்தினாங்களா? பாரதிராஜா குடும்பத்தில் இப்படி சிக்கலா? -
“மக்களை தெருநாய்களாக சித்தரித்த உங்களுக்கும் ஓட்டு போடுவாங்க”.. ராகவா லாரன்ஸுக்கு சேரன் பதில்! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
"கலைஞர் டிவி, ஜெயா டிவிக்கு அடுத்ததாக 'வெற்றி டிவி'... ஜூன் 22-ல் லோகோ வெளியீடு? விஜய்யின் அடுத்த மாஸ்டர் மூவ் இதுதானா?" -
தவெகவில் சேர்ந்த 10 நாட்களிலேயே அரசியலில் இருந்தே விலகிய முன்னாள் MLA கோவிந்தசாமி.. பின்னணி என்ன? -
Vijay Sangeetha Divorce: சிஎம்-ஆவே இருந்தாலும் நேரில் தான் வரனும்.. வீடியோ கான்ஃப்ரன்ஸ் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம் -
6400 கி.மீ ரஷ்யா, 7200 கி.மீ ஆப்பிரிக்காவை விட நீளமானது என்று கூகுள் மேப்ஸ் எப்படி நம்ப வைக்கிறது? -
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை!












Click it and Unblock the Notifications