தக் லைஃப்.. இந்நேரம் சூப்பரா வீடியோ ரெடியாகிட்டு இருக்கும்.. பொளக்க போறானுங்க!
சென்னை : தக் லைஃப் படம் தியேட்டர்களில் நன்றாக ஓடுகிறதோ இல்லையோ, சமூகவலைதளப் பக்கங்களில் நிறைய கண்டண்ட் கொடுத்து ட்ரோல் பண்ண மீமர்களுக்கு உதவியாக இருக்கிறது.
மிகவும் எதிர்பார்த்த படம், எதிர்பார்த்த அளவுக்கு இருக்கவில்லை என்றால் பொங்கி எழுந்து விடுவார்கள் நம் மக்கள். அதிலும் கமல், மணிரத்னம், ஏ.ஆர்.ரஹ்மான், சிம்பு, திரிஷா என பெரிய நட்சத்திரப் பட்டாளமே நடித்துள்ள தக் லைஃப் படத்தைப் பற்றிக் கேட்கவே வேண்டாம். பட அறிவிப்பு வெளியான நாளில் இருந்தே மக்களிடம் இப்படத்தைப் பற்றிய எதிர்பார்ப்பு எகிறிக் கிடந்தது. அதிலும் நாயகன் போன்ற கதைக்களம் என்பது டிரெய்லர் மூலம் தெரிய வர, மக்கள் வெகு ஆர்வமாக தக் லைஃபை எதிர்பார்த்துக் காத்துக் கிடந்தார்கள்.

இதில் போதாக்குறைக்கு கமலின் பேச்சு வேறு சர்ச்சையில் சிக்க, அதனால் கர்நாடகாவில் தக் லைஃப் படம் எதிர்பார்த்தபடி ரிலீஸ் செய்ய முடியாமல் போனது. அதனால் படம் பார்க்க வாய்ப்பு கிடைத்தவர்கள், தாங்கள் ஏதோ புண்ணியம் செய்து விட்டவர்கள் என்ற ரேஞ்சுக்கு தியேட்டருக்குள் சென்றனர். ஆனால் படம் முடிந்து வெளியில் வரும் போது, 'என்ன பாவம் செய்தோமோ.. இந்தப் படத்தைப் பார்க்க வேண்டியதாகி விட்டதே' என அவர்கள் புலம்பியதெல்லாம் வேறு கதை.
அவர்களது கோபத்தை மேலும் அதிகரிப்பது மாதிரி, முத்தமழை பாடலை படத்தில் கட் செய்து விட்டார்கள். பட ரிலீசுக்கு முன்னர் தீ பாடிய முத்தமழை பாடலை, சின்மயி தன் ஸ்டைலில் பாட, படத்தில் யார் பாடியது இடம் பெற்றிருக்கும் என ஆர்வத்தோடு தியேட்டருக்குப் போய் ஏமாந்தது வந்தவர்கள்தான் அதிகம். இதனால் தங்கள் கோபத்தை எல்லாம் சமூகவலைதளப் பக்கங்களில் மீம்ஸ்களாகக் கொட்டித் தீர்த்து வருகின்றனர் நெட்டிசன்கள்.
இதோ அப்படியாக நம் கண்ணில் பட்ட சில நகைச்சுவையான தக் லைஃப் மீம்ஸ்களின் தொகுப்பு உங்களுக்காக...









-
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
SP Velumani: உங்க சங்காத்தமே வேண்டாம்.. சிங்கப்பூர் சென்ற SP வேலுமணி.. எடப்பாடிக்கு பைனல் மெசேஜ் -
சாய்பாபா காலனி பிரச்சனை ஓவர்.. சிங்காநல்லூருக்கும் விடிவு காலம்.. தவெக ஆட்சியில் பிறந்த நம்பிக்கை -
மனித மூளையை உலுக்கக்கூடிய ஒரு விஷயம்.. ஏஐ குறித்து சத்ய நாதெல்லா பதிவு.. கமல் பதில் -
ஸ்டாலின் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்.. அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நோட்டீஸ் -
தமிழ்நாடுக்கு போட்டியாக கிளம்பிய குஜராத்.. விஜய்-க்கு நேரடி சவால்! -
நீலாங்கரை வீட்டிற்குள் நுழைந்த மாஸ் பிரபலம்! அண்ணன் விஜய்யை கண்டதுமே கட்டிப்பிடித்து உருகிய சிம்பு -
குத்துவிளக்கு ஏற்ற சொன்னா இப்படியா செய்வது? Narcissistic Behaviour ப்ரோ! விஜய்யை வறுத்த அதிமுக -
நடிகர் வாகை சந்திரசேகருக்கு கிடைத்த கௌரவம்.. பல வருட உழைப்புக்கு அங்கீகாரம்! குவியும் பாராட்டு -
எலக்ட்ரானிக் சிட்டி டூ ஓசூர் ரோடு இனி 5 நிமிட ரேஸ்! பெங்களூரு நம்ம மெட்ரோவின் அந்த ப்ளூ லைன் கணக்கு -
சூர்யவன்ஷியிடம் வம்பிழுத்த இலங்கை வீரர்கள்.. டீ-சர்ட்டை பிடித்து தள்ளி.. மைதானத்தில் பரபரப்பு!












Click it and Unblock the Notifications