யப்பா சின்னவயசு விஜய்ய காட்ட சொன்னா.. சின்னவயசு மைக்கேல்ஜாக்சன காட்டி இருக்காங்கப்பா!
சென்னை: வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடித்துள்ள கோட் படத்தின் டிரெய்லர் ரிலீசாகியுள்ள நிலையில், வழக்கம் போல் தங்கள் ஸ்டைலில் அதனை மீம்ஸ் போட்டு கொண்டாடி வருகின்றனர் விஜய் ரசிகர்கள்.
இப்போதெல்லாம் எந்தவொரு விசயமாக இருந்தாலும், அதனை மீம்ஸ் போட்டு தங்களது கருத்துக்களை சமூகவலைதளப் பக்கங்களில் வெளிப்படுத்துவதுதான் நெட்டிசன்களின் ஸ்டைலாக உள்ளது. சினிமாக்களையும் அவர்கள் விட்டு வைப்பதில்லை. புதிய பட அப்டேட்களாக இருந்தாலும் சரி, பாடல் வெளியீடு, டிரெய்லர், படத்தின் ரிலீஸ் என எல்லாவற்றையும் மீம்ஸ் போட்டு கொண்டாடித் தீர்த்து விடுகிறார்கள்.

சாதாரண படங்களுக்கே அப்படி என்றால், முன்னணி நடிகர்களின் படங்கள் என்றால் கேட்கவா வேண்டும். அந்தவகையில் நேற்று வெளியான விஜய்யின் கோட் பட டிரெய்லர் தான் தற்போது சினிமா ரசிகர்களுக்கு கன்டெண்ட். ஏற்கனவே இந்தப் படம் பற்றி பெரும் எதிர்பார்ப்பு உள்ள நிலையில், நேற்று வெளியான டிரெய்லர் இன்னும் அந்த எதிர்பார்ப்பை அதிகப்படுத்தியுள்ளது. அதிலும் குறிப்பாக சின்ன வயது விஜய்யின் காட்சிகள், விஜய் ரசிகர்களைக் குதூகலப் படுத்தியுள்ளது.
ஆனாலும், அது விஜய் மாதிரி இல்லை.. சின்ன வயது மைக்கேல் ஜாக்சன் மாதிரி இருக்கிறார் என்றும் ப்ரூனோ மார்ஸ் மாதிரி இருக்கிறார் என்றும், அந்தத் தோற்றத்தை விமர்சித்து மீம்ஸ்களைப் பகிர்ந்து வருகின்றனர் சமூகவலைதலப் பக்கங்களில், கூடவே, சூர்யாவின் கங்குவா படத்தின் டிரெய்லரையும் ஒப்பிட்டு, மீம்ஸ்களைப் பகிர்ந்து வருகின்றனர்.
இதோ அப்படியாக நம் கண்ணில் பட்ட சில மீம்ஸ்களின் தொகுப்பு உங்களுக்காக...









Click it and Unblock the Notifications
