‘ஓ.. இவருதா அந்த வெளியூர் ஆட்டக்காரரா’.. ஒமைக்ரான்னா மட்டும் விட்ருவோமா.. இந்தோ ஆரம்பிச்சுட்டோம்ல!
தமிழகத்தில் ஒமைக்ரான் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளதை வைத்து இணையத்தில் மீம்ஸ்கள் பகிரப்பட்டு வருகின்றன.
சென்னை: தமிழகத்தில் முதல் ஒமைக்ரான் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளதைத் தொடர்ந்து, மக்கள் மத்தியில் பயம் ஏற்பட்டுள்ள போதும், வழக்கம் போல அதை வைத்தும் மீம்ஸ்களை பகிர்ந்து கலாய்க்கத் தொடங்கி விட்டனர் நெட்டிசன்கள்.
அதோ.. இதோ என பூச்சாண்டிக் காட்டிக் கொண்டிருந்த ஒமைக்ரான் இப்போது தமிழகத்திற்குள்ளும் வந்து விட்டது. டெல்டாவை விட தீவிரமாகப் பரவக்கூடியது என உலக சுகாதார மையம் ஏற்கனவே எச்சரிக்கை விடுத்துள்ள நிலையில், ஒமைக்ரானால் எப்படிப்பட்ட பாதிப்புகளை இந்தியா சந்திக்கப் போகிறதோ என்ற பயம் ஒரு பக்கம் மக்கள் மத்தியில் இருந்தாலும், வழக்கம் போல இதுவும் மீமர்களுக்கு ஒரு கண்டெண்ட் ஆகி விட்டது.
டெல்டா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது இந்தியாவில் தான் என்பதால், நாம் பட்ட பாடுகளில் இருந்து உலக நாடுகள் பாடம் கற்றுக் கொண்டன. ஆனால் நிலைமை தற்போது அப்படியில்லை. தென்னாப்பிரிக்காவில் ஒமைக்ரான் கண்டுபிடிக்கப்பட்ட போதே அது பல நாடுகளுக்கு பரவி விட்டிருந்தது. ஏற்கனவே ஒமைக்ரானின் சமூகப்பரவலும் ஆரம்பித்திருந்தது.

தமிழகத்திலும் ஒமைக்ரான்
இந்தியாவும் ஒமைக்ரானிடம் இருந்து தப்பவில்லை. தென்னாப்பிரிக்கா பக்கம் தலைவைத்துக் கூட படுக்காத பெங்களூரு மருத்துவருக்கு ஒமைக்ரான் பாதிப்பு ஏற்பட்டதே இதற்கு ஒரு சான்று. கொஞ்சம் கொஞ்சமாக ஒவ்வொரு மாநிலமாக ஒமைக்ரானின் பாதிப்பு கண்டுபிடிக்கப்பட்டு வருகிறது. இப்போது தமிழத்திலும் ஒருவருக்கு ஒமைக்ரான் இருப்பது உறுதியாகி விட்டது.

மக்களின் அலட்சியம்
அய்யய்யோ.. நம்ம ஊருக்கும் ஒமைக்ரான் வந்துடுச்சா..? என்ற பீதி ஒரு பக்கம் இருந்தாலும், 'நம்மையெல்லாம் ஒண்ணும் செய்யாது' என்ற அலட்சியமும் மக்கள் மத்தியில் இன்னமும் உள்ளது. அதனால்தான் அரசாங்கமே வேறு வழியில்லாமல் மாஸ்க் அணியாமல் சென்றால் அபராதம் என்ற உத்தரவை தரவேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.

புது கண்டெண்ட்
இது ஒருபுறம் இருக்க வழக்கம் போல், நெட்டிசன்கள் மீம்ஸ் போட்டே ஒமைக்ரானை விரட்டி அடிப்பது என்ற முடிவுக்கு வந்து விட்டனர் போலும். சமூகவலைதளப் பக்கங்களைத் திறந்தாலே ஒமைக்ரான் மீம்ஸ்கள் தான் கொட்டிக் கிடக்கின்றன. நாயகன் டயலாக் மாதிரி, 'நீங்க நல்லவரா இல்ல.. கெட்டவரா?' என ஒமைக்ரானை வைத்து 'செய்து' வருகின்றனர்.

வெளியூர் ஆட்டக்காரர்
அதிகம் பகிரப்படும் மீம்ஸ்களில் கரகாட்டக்காரன் டெம்ப்ளேட்டும் ஒன்று. அதில் நடிகர் சந்திரசேகர், நாயகன் ராமராஜனைப் பார்த்து, 'ஓ நீங்க தான் புது ஆட்டக்காரரோ..' எனக் கேட்பாரில்லையா.. தற்போது அதை வைத்துத் தான் இந்த மீம்ஸை உருவாக்கியுள்ளனர். அதாவது, டெல்டா வைரஸ், ஒமைக்ரான் வைரஸைப் பார்த்து, 'ஓ நீங்க தான் அந்த வெளியூர் ஆட்டக்காரரா'? எனக் கேட்கிறதாம்.

பதறும் மனது
ஜாலியாகத் தான் இந்த மீம்ஸ் பகிரப்படுகிறது என்றாலும், கொஞ்சம் பீதியையும் கிளப்பாமல் இல்லை. டெல்டா வைரஸ் ஆடிய ஆட்டத்தில் இந்தியா எந்தளவிற்கு சின்னாபின்னமானது என்பது ஊரறிந்த, உலகறிந்த கதை தான். இப்போது இந்த புதிய வெளியூர் ஆட்டக்காரர், அதாங்க ஒமைக்ரான்.. இன்னும் என்னவெல்லாம் ஆட்டம் ஆடப் போகிறாரோ என்பதை நினைத்தாலேயே நெஞ்சம் பதறுகிறது.
Recommended Video

மாஸ்க் போடுங்க மக்களே
முதல் இரண்டு அலைகளில் நாம் செய்த தவறை இம்முறை திருப்பிக் கொண்டாலே, ஒமைக்ரான் என்ன இனி வேறு எந்த ஆட்டக்காரர் வந்தாலும், நாம் சுலபமாக விரட்டி அடித்து விடலாம். ஆம், நாம் செய்ய வேண்டியதெல்லாம் இவை தான்.. முறையாக மாஸ்க் அணிவது, சமூக இடைவெளியைக் கடைபிடிப்பது, கைகளை முறையாகக் கழுவுவது, தேவையில்லாமல் கண்கள், மூக்கைத் தொடாமல் இருப்பது. செய்வீர்களா.. மக்களே செய்வீர்களா?
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி












Click it and Unblock the Notifications