இப்ப சந்தோஷமா.. மத்திய அமைச்சர் சுரேஷ் கோபியை ஆடிப்போக வைத்த மீம்ஸ்.. கேரள காங்கிரஸ் சம்பவம்
திருவனந்தபுரம்: திருச்சூர் இப்ப சந்தோஷமா என்று கேட்டு, மத்திய அமைச்சர் சுரேஷ் கோபியை கிண்டல் செய்து கேரள காங்கிரஸ் தனது எக்ஸ் தள பதிவில் மீம்ஸ் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளது. அந்த வீடியோ மீம்ஸ் திருச்சூருக்கு பட்ஜெட்டில் ஒன்றுமே கிடைக்கவில்லை என்று சித்தரிக்கும் விதமாக வெளியிடப்பட்டிருக்கிறது. அதனை பலரும் சமூக வலைதளங்களில் ஷேர் செய்து வருகிறார்கள்.
2024-25ஆம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நேற்று நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தார். 1959 முதல் 1964 வரை நிதியமைச்சராக இருந்த முன்னாள் பிரதமர் மொரார்ஜி தேசாயின் சாதனையை முறியடித்து, நிர்மலா சீதாராமன் ஏழு பட்ஜெட் உரைகளை தாக்கல் செய்த முதல் நிதியமைச்சர் என்ற பெருமையை பெற்றுள்ளார்.
நிர்மலா சீதாராமன் தனது ஏழாவது சாதனை பட்ஜெட்டில், பொருளாதார வளர்ச்சியை வளர்ப்பதற்கும், அதற்கு ஏராளமான வாய்ப்புகளை உருவாக்குவதற்கும், வேலைவாய்ப்பை உருவாக்கவும் முன்னுரிமை அளித்திருப்பதாக கூறியுள்ளார். இந்த பட்ஜெட்டில் பீகார் மற்றும் ஆந்திராவிற்கு ஏராளமான திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. ஆனால் இந்தியா கூட்டணி ஆளும், தமிழ்நாடு, மேற்கு வங்காளம், கேரளா, கர்நாடகா, தெலுங்கானா உள்பட பல்வேறு மாநிலங்களில் புறக்கணிக்கப்பட்டுள்ளதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன.
இந்த பட்ஜெட்டில் தமிழ்நாடு, தமிழ் என எங்குமே இல்லை.. தமிழ்நாடு முற்றிலும் புறக்கணிக்கப்பட்டுள்ளதாக கூறிய முதல்வர் ஸ்டாலின், பிரதமர் மோடி தலைமையில் நடைபெற உள்ள நிதி ஆயோக் கூட்டத்தை புறக்கணிப்பதாக நேற்று கூறினார். நேற்று செய்தியாளர் சந்திப்பில் முதல்வர் ஸ்டாலின், மத்திய அரசை கடுமையாக விமர்சிக்கவும் செய்தார்.
கேரளாவை பொறுத்தவரை தமிழ்நாட்டை போலவே இடதுசாரிகளும், கம்யூனிஸ்டுகளும் மாறி மாறி வென்றுவரும் மாநிலம் ஆகும். அங்கு கடந்த முறை ஒரே ஒரு தொகுதியில் பாஜக வெற்றி பெற்றது. திருச்சூர் தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிட்ட நடிகர் சுரேஷ் கோபி வெற்றி பெற்றார். அவருக்கு மத்திய இணையமைச்சர் பதவி அளிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தமிழ்நாட்டை போலவே கேரளாவிற்கும் பெரிதாக எந்த திட்டமும் மத்திய அரசால் அறிவிக்கப்படவில்லை. இதனால் இடதுசாரிகளும், காங்கிரஸ் கட்சியும் பாஜகவின் ஒரே ஒரு எம்பியான சுரேஷ் கோபியையும், திருச்சூர் மக்களையும் கேள்விகளை எழுப்பி விமர்சித்து வருகிறார்கள்.

மத்திய அமைச்சர் சுரேஷ் கோபியை கிண்டல் செய்து கேரள காங்கிரஸ் மீம்ஸ் வீடியோ ஒன்று வெளியிட்டுள்ளது. அந்த வீடியோவில், திருச்சூரை பார்த்து சுரேஷ் கோபி இப்போது சந்தோஷமா என்று கேள்வி எழுப்புவது போலவும், அதை பார்த்து அப்படியே திருச்சூர் மக்கள் உறைந்து போய் நிற்பது போலவும் மீம்ஸ் வீடியோ வெளியாகி உள்ளது. இந்த மீம்ஸ் வீடியோ சமூக ஊடகங்களில் வேகமாக பரவி வருகிறது.

இதனிடையே மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்த பட்ஜெட் பாரபட்சமாக உள்ளது என்று கூறி அதற்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், தெலுங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி, கர்நாடகாவின் சித்தராமையா, இமாச்சலப் பிரதேச முதல்வர் சுக்விந்தர் சிங் சுகு ஆகியோர் மோடி தலைமையில் நடைபெறும் நிதி ஆயோக் கூட்டத்தை புறக்கணிப்பதாக கூறியுள்ளனர். அதேநேரம் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி மற்றும் கேரளாவின் பினராயி விஜயன் ஆகியோர் மத்திய பட்ஜெட்டில் தங்கள் மாநிலங்கள் புறக்கணிக்கப்பட்டிருப்பதாக விமர்சித்த போதிலும், நிதி ஆயோக் கூட்டத்தை புறக்கணிப்பதை பற்றி எதுவும் கூறவில்லை.

இதனிடையே விளக்கம் அளித்த நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், அனைத்து மாநிலங்களிடம் இருந்து நிதி ஒதுக்கீடு குறித்த கோரிக்கைகள் வருகிறது. எனவே உரிய நடைமுறைகளின்படி மாநிலங்களின் நிதித்தேவைகளை நிறைவு செய்ய தொடா்ந்து முயற்சித்து வருகிறோம். நிதி ஒதுக்கீட்டில் மாநிலங்களுக்கு இடையே எந்த பாகுபாடும் நாங்கள் காட்டவில்லை. எனது பட்ஜெட் உரையில் மேற்கு வங்கத்துக்கான ஒதுக்கீடு குறித்த அறிவிப்பும் இடம் பெற்றுள்ளது. அரசு மீது குற்றம்சாட்டுபவா்கள் பட்ஜெட் உரையை முழுமையாக படித்துத் தெரிந்து கொள்ள வேண்டும் என்றார்.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள்












Click it and Unblock the Notifications