ஆத்தீ.. நாம மாவுல கால் முக்கி நடந்து விளையாண்டதை கண்டுபிடிச்சுடுவாங்களோ!
சென்னை: கிருஷ்ண ஜெயந்திக்காக குழந்தைகளுக்கு எப்படி எப்படியெல்லாம் இந்த பெற்றோர் மேக்கப் போட்டு விடுகின்றனர் என்பதை வைத்து நகைச்சுவையாக மீம்ஸ்களைப் பகிர்ந்து வருகின்றனர் நெட்டிசன்கள்.
இன்று கிருஷ்ண ஜெயந்தி என்பதால் பல வீடுகளில் குட்டிக் குட்டிக் குழந்தைகளுக்கு அழகழகாக கிருஷ்ணர் மற்றும் ராதை மேக்கப்பைப் போட்டு அழகு பார்த்து வருகின்றனர் பெற்றோர். ஆனால் அந்த வேடத்தில் அந்தக் குழந்தைகள் எப்படி இருக்கிறார்கள், அதை அவர்கள் எப்படிப் பார்க்கிறார்கள் என நெட்டிசன்கள் தங்களது கற்பனைக் குதிரையை தட்டி விட்டு இணையத்தை கலகலக்க வைத்து வருகின்றனர்.

கடந்த சில வருடங்களாகவே கிருஷ்ண ஜெயந்தி வந்து விட்டால், மறக்காமல் இந்த கலாய்ச்சி பை மீம்ஸ்களும் இணையத்தில் டிரெண்டிங் ஆகி விடுகின்றன. குறிப்பாக வருடாவருடம் யாருக்கு கிருஷ்ணர் வேடம் போடுகிறார்களோ இல்லையோ, மீம்ஸ் டெம்ப்ளேட்டுகளின் மன்னனான வடிவேலுக்கு கிருஷ்ணர் வேடம் போட்டு அந்த மீம்ஸை சமூகவலைதளப் பக்கங்களில் பகிர்ந்தால்தான் அந்த கிருஷ்ண ஜெயந்தி அவர்களுக்கு முழுமையடைகிறது.
இந்த முறை சற்று வித்தியாசமாக கிருஷ்ண ஜெயந்தி மேக்கப் போடுவதோடு, அதை கலைப்பதற்கும் மக்கள் எவ்வளவு கஷ்டப்படுகிறார்கள் என்பதையும் மீம்ஸ்களாக்கி இருப்பது ரசிக்கும்படி உள்ளது.

இதோ அப்படியாக சமூகவலைதளங்களில் நம் கண்ணில் பட்ட சில நகைச்சுவையான கிருஷ்ண ஜெயந்தி ஸ்பெஷல் மீம்ஸ்களின் தொகுப்பு உங்களுக்காக...






-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications