லவ் பண்ண ஆசைதான்.. பொண்டாட்டிய நினைச்சா! 90ஸ் கிட்ஸை சோதிக்காதீங்கடா! லவ்வர்ஸ் டே மீம்ஸ்
காதலர் தினம் இன்று உலகம் முழுவதும் உற்சாகமாக கொண்டாடப்படும் நிலையில் அது தொடர்பான மீம்ஸ்கள் சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.
சென்னை: காதலர் தினம் இன்று உலகம் முழுவதும் உற்சாகமாக கொண்டாடப்படும் நிலையில் அது தொடர்பான மீம்ஸ்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. சிங்கிள்ஸை கலாய்த்தும், திருமணம் ஆனவர்களை கலாய்த்தும் செய்திகள் போடப்படுகின்றன. அப்படி வந்த சில மீம்ஸ்களை இப்போது பார்ப்போம்.
காதலர் தினம் என்பது இன்றைய 2கே கிட்ஸ்களுக்கு மிகவும் கொண்டாட்டமான நாளாக உள்ளது. அதேநேரம் 90களில் பிறந்து இன்னும் திருமணம் ஆகாத இளைஞர்களுக்கு சோதனையாக நாளாக உள்ளது என மீம்ஸ் போட்டு கலாய்க்கிறார்கள் பலர்.
காதலர் தினம் என்பது இன்றைய 2கே கிட்ஸ்களுக்கு மிகவும் கொண்டாட்டமான நாளாக உள்ளது. அதேநேரம் 90களில் பிறந்து இன்னும் திருமணம் ஆகாத இளைஞர்களுக்கு சோதனையான நாளாக உள்ளது என மீம்ஸ் போட்டு கலாய்க்கிறார்கள் பலர்.

90ஸ் கிட்ஸ் மீம்ஸ்
90ஸ் கிட்ஸ் ஒருவர் போட்டுள்ள மீம், 90ஸ் ல காதலர் தினம் என்று ஒரு படம் பார்த்த பிறகு தான்... லவ்வர்ஸ் டே ன்னு ஒன்னு இருக்குன்னு தெரியும் என்று கூறுகிறார். நீங்க என்னடா.. னா ரோஸ் டே, புரோபசல் டே, டெடி டே, பிராஸ்மிடா, ஹக் டே, கிஸ் டே, லவ்வர்ஸ் டே என்னு ஒரு வாரமாக சோதிக்கிறீங்களேடா என்று பதிவிட்டுள்ளார்.

எது 35 வயசுலையா
இன்னொருவர் வெளியிட்டிருந்த பதிவில், ஹேப்பி புரொபோசல் டே என்று ஒருவர் கூறுகிறார். அத்துடன் இன்னைக்கு ப்ரொபோஸ் டே யாராச்சும் ப்ரொபோஸ் பண்ணுவாங்க.. ஓகே சொல்லி கல்யாணம் பண்ணிரு என்று ஒருவர் கேட்பதாக உள்ளது. அதற்கு 90ஸ் கிட்ஸ் சிங்கிள், எது இந்த 35 வயசுலையா என்று கேட்பதாக உள்ளது. இப்படியா இருக்கிறது அந்த மீம்ஸ்

பொண்டாட்டிய நினைச்சா
90ஸ் கிட்ஸை மட்டுமல்ல கல்யாணம் முடிந்தவர்களையும் கலாய்த்து மீம்களை போட்டிருக்கிறார்கள். காதலர் தினம் வேற வருது லவ் பண்ணலாம்னு ரொம்ப ஆசையா இருக்கு. ஆனா.. பொண்டாட்டிய நெனச்சாதான் ரொம்ப பயமாக இருக்கு.. என்ன பண்ணலாம்... என்று யோசிப்பது போல் உள்ளது.

மெதுவா கத்துடா
இன்னொரு மீம்மில் டேய் மச்சான். அட்வான்ஸ் ஹாப்பி காதலர் தினம் நல்வாழ்த்துக்கள் என்று தனது மச்சானுக்கு கத்தி கூறுகிறார்கள். அடேய் எடுபட்ட பயலே மெதுவா கத்துடா என் பொண்டாட்டிக்கு கேட்டுற போகுது என்று சொல்வதாக மீம்ஸ் உள்ளது.

காதல் சொல்வாள்
இன்று தொட்டு ஏழாம் நாள் சிங்கிள் ஆகிய நாம் மிங்கில் ஆக உள்ளோம்.. என்று ஆயிரத்தில ஒருவன் பார்த்திபன் சொல்வதாக மீம்ஸ் ஆரம்பிக்கிறது. டோலி ஒருத்தி வருவாள்.. டைரி மில்க் வாங்கி தருவாள்.. காதலை காதில் சொல்வாள் என்பதாக அந்த மீம் முடிகிறது. காதலர்கள் தின மீம்ஸ்களை பார்த்தோம். காதலர் தினத்தை கொண்டாடும் அனைவருக்கும் காதலர் தின வாழ்த்துக்கள். இன்றைக்கு பூங்காக்கள், கடற்கரைகள், மலைவாசல் தளங்களில் காதலர்களின் கூட்டம் அலைமோதுவாக தகவல்கள் வெளியாகி












Click it and Unblock the Notifications