கில்லி விஜயாக ரிஷப் பண்ட்.. கொயங்காவிற்கு அல்வா கொடுத்த குட்டி தோனி.. தெறிக்கும் லக்னோ மீம்ஸ்!
லக்னோ: ஐதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் லக்னோ அணி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்தது. இதன் காரணமாக பிளே ஆஃப் சுற்றுக்கான வாய்ப்பை லக்னோ அணி இழந்துள்ளது. இந்த போட்டியின் போது நடந்த சுவாரஸ்யங்களை வைத்து ரசிகர்கள் சோசியல் மீடியாவில் உருவாக்கியுள்ள மீம்ஸை பார்க்கலாம்.
மிடில் கிளாஸ் மாதவன் படத்தில் ஆட்டோ டிரைவராக வரும் வடிவேலு, தனது பயணியிடம், "6 மணிக்கு மேல வண்டி ஓடாது" என்று சொல்வார். அதில் வரும் வடிவேலுவாக இஷான் கிஷனையும், பயணியாக காவ்யா மாறனையும் மாற்றி, "ஃபர்ஸ்ட் மேட்ச்-க்கு பிறகு வண்டி ஓடாது" என்று சொல்வதாக உருவாக்கப்பட்டுள்ள மீம் குபீர் ரகம்.

கில்லி படத்தில் கோபக்கார தந்தையை ஏமாற்ற விஜய் ஒரு பிஸ்கட் பாக்கெட்டுடன் வருவார். அந்த காட்சியில் பிஸ்கட்டுக்கு பதிலாக அல்வா கொடுப்பதாக காட்டப்படும். அதனை அப்படியே விஜயாக ரிஷப் பண்ட்-ஐயும், கோபக்கார தந்தையான ஆஷிஷ் வித்யார்த்தியை சஞ்சீவ் கொயங்காவாகவும் மாற்றி, லக்னோ அணி பிளே ஆஃப் சுற்றுக்கான ரேஸில் இருந்து வெளியேறிவிட்டு ரிஷப் பண்ட் அல்வா கொடுப்பதாக உருவாக்கப்பட்டுள்ள மீம் ஆப்பு கண்ணுக்கு தெரியாது ரகம்.

ஹெல்மெட் விழிப்புணர்வு குறும்படம் ஒன்றில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், "ஒரு பிரயோஜனமும் இல்லை" என்று சொல்வார். நேற்றைய ஆட்டத்தில் அபிஷேக் சர்மாவை பார்த்து திக்வேஷ் ராதி வெளியே போ என்று சைகை காட்டினார். இதன்பின் இருவருக்கும் இடையில் மோதல் ஏற்பட்டது. இதனை ஐதராபாத் அணி வீரர்கள் பார்த்து, "ஒரு பிரயோஜனமும் இல்லை" என்று சொல்வதாக உருவாக்கப்பட்டுள்ள மீம் சோலிய முடிச்ச அப்புறம் என்ன சண்டை ரகம்.

ஜெயம் படத்தில் வில்லன் கோபிசந்தை நாயகனான ஜெயம் ரவி அடிப்பார். அப்போது சதா, "நான் பார்க்கிறேன்.. நீ அடி" என்று சொல்வார். அதில் வரும் வில்லனாக லக்னோ அணியையும், ஜெயம் ரவியாக அபிஷேக் சர்மாவையும், சதாவாக யுவராஜ் சிங்கையும் மாற்றி, "நான் பார்க்கிறேன்.. நீ அடி" என்று சொல்வதாகவும், இதனால் உற்சாகமாகி அபிஷேக் சர்மா 18 பந்துகளில் அரைசதம் அடித்ததாகவும் உருவாக்கப்பட்டுள்ள மீம் மாட்டிக்கிட்டாரு ஒருத்தரு.. அவர காப்பாத்தனும் கர்த்தரு ரகம்.

-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications