மேடம்.. எல்லாம் நடிப்பு.. இவன் சூர்ய குமார் யாதவ் இல்லை.. தினேஷ் கார்த்திக்.. டிரெண்டான மீம்ஸ்!
சென்னை; ஆஸ்திரேலியாவிற்கு எதிரான உலகக் கோப்பை பைனல் ஆட்டத்தில் இந்தியா தோல்வி அடைந்த நிலையில் அதை வைத்து நெட்டிசன்கள் மீம்ஸ் போட்டு வருகின்றனர். இந்திய அணியில் சில வீரர்கள் ஆடிய விதம் கடுமையான விவாதங்களை ஏற்படுத்தி உள்ளது. இதை வைத்தும் நெட்டிசன்கள் மீம்ஸ் போட்டுள்ளனர்.
2023 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி அதிரடியாக ஆடியும் கூட தோல்வி அடைந்துள்ளது. தொடக்கத்தில் இருந்து எல்லா போட்டிகளிலும் சிறப்பாக ஆடி 10 போட்டிகளை இந்தியா வென்றது.

ஆனால் கடைசியாக ஆஸ்திரேலியாவிற்கு எதிராக நடந்த ஒரே ஒரு போட்டியில் மட்டும் தோல்வி அடைந்து கோப்பை வெல்லும் வாய்ப்பை இழந்துள்ளது. இந்தியாவின் சிறப்பாக உலகக் கோப்பை டீம்.. ஒருநாள் அணிகளிலேயே சிறப்பான டீம் என்று எல்லாம் இந்தியாவின் இந்த அணி பாராட்டப்பட்டது.
ஆனாலும் பைனல் என்று வந்துவிட்டால் ஆஸ்திரேலியாவை வெல்ல முடியாது. நாக் அவுட் என்று வந்துவிட்டால் ஆஸ்திரேலியாவிடம் வேறு விதமான ஆக்ரோஷ பலம் இருக்கும். இதை எதிர்கொள்ள முடியாமல் நேற்று ஆஸ்திரேலியா அணியிடம் இந்தியா தோல்வி அடைந்தது.

மீம்ஸ் டிரெண்டிங்; 2003 & 2023, ரெண்டுலையும் வலியை உணர்ந்த மக்கள் சிலர் இருக்கிறார்கள் என்று மீம்ஸ் போடப்பட்டு உள்ளது. முக்கியமாக சூர்ய குமார் யாதவ் ஆட்டத்தை பலரும் விமர்சனம் செய்து வருகின்றனர். டேய் சூர்ய குமார் யாதவ்.. நீ பறக்க விட்ட ப்ளைட்டுக்கு வாடகையை உன் சம்பளத்துல இருந்து குடுக்குற நீ.. என்று நெட்டிசன்கள் விமர்சனம் செய்துள்ளனர்.

அதேபோல் ஆஸியும் அகண்ட பாரதத்துலதான் வருது... எப்டி பாத்தாலும் நாமதான் வின் பண்ணுவோம் என்று நெட்டிசன்கள் விமர்சனம் செய்துள்ளனர். அதேபோல் இது லியோ படத்தின் பிளாஷ்பேக் போல.. இது ஃபேக் பைனல்.. ரிக்கி பாண்டிங் சொல்லும் கதை என்று நெட்டிசன்கள் விமர்சனம் செய்துள்ளனர்.
போதும்டா..டேய்..போங்கடா... போய் புள்ள குட்டிகளை படிக்க வைங்க.....cricketலாம் வேணாம்டா... மேடம் இவன் நடிக்கிறான் மேடம்.. இவன் ஸ்கை இல்லை தினேஷ் கார்த்திக் என்றும் நெட்டிசன்கள் மீம்ஸ் போட்டுள்ளனர்.

இந்தியா படுதோல்வி; இந்தியா ஆஸ்திரேலியா இடையிலான உலகக் கோப்பை தீவிரமாக நடந்து முடிந்துள்ளது. அதிகம் எதிர்பார்க்கப்பட்ட பைனலில் இந்தியா தோல்வி அடைந்துள்ளது . 2003 உலகக் கோப்பையில் இந்தியா ஆஸ்திரேலியாவிடம் பைனலில் தோல்வி அடைந்தது. அந்த நாளை கிரிக்கெட் பார்க்கும் யாரும் மறக்க மாட்டார்கள்.

அதன்பின் தற்போது மீண்டும் 2023ல் இந்தியா ஆஸ்திரேலியாவிடம் தோல்வி அடைந்துள்ளது. ஆஸ்திரேலியாவிற்கு எதிராக இந்தியா படுதோல்வியை அடைந்து இந்தியா உலகக் கோப்பையை வெல்லும் வாய்ப்பை இழந்துள்ளது. சிராஜ் ஒரு விக்கெட் கூட எடுக்காமல் கடுமையாக ரன்களை வாரி வழங்கினார். இந்த உலகக் கோப்பை முழுக்க அவர் சரியாக ஆடவில்லை.

பிரஷர் காரணமாக.. லைன், லென்த் இரண்டிலும் வீரர்கள் சொதப்பி தொடங்கினர். முக்கியமாக சிராஜ், பும்ரா, குல்தீப் கூட லைன் மற்றும் லென்த் இரண்டிலும் தவறு செய்ய தொடங்கினார். இதை எல்லாம் கிண்டல் செய்து நெட்டிசன்கள் போஸ்ட் செய்துள்ளனர் . முக்கியமாக சூர்ய குமார் யாதவ் ஆட்டத்தை பலரும் கிண்டல் செய்துள்ளனர்.

-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications