"என்னங்க பாமக சின்னம் ஆப்பிள்ங்கிறாரு.." .. அட அவர் தப்பாச் சொல்றாருங்க.. பாமக சின்னம் தேங்காய்!!
தமிழக தேர்தல் பிரச்சாரங்களில் எழும் சர்ச்சைகள் தொடர்பான மீம்ஸ்கள் வைரலாகி வருகின்றன.
Recommended Video

சென்னை: "என்னங்க பாமக சின்னம் ஆப்பிள்ங்கிறாரு.." என்று ஓபிஎஸ் கேட்க, "முட்டாபய பாமக சின்னம் தேங்காய்.." என்று பதிலளிக்கிறார் முதல்வர் பழனிசாமி! ட்விட்டர் பக்கங்களுக்கு போனால், முதல்வரும், துணை முதல்வரும் இப்படித்தான் மீம்ஸ்களில் பேசிக் கொண்டிருக்கிறார்கள்!
கடந்த சில நாட்களாகவே தேர்தல் பிரச்சாரங்களில் ஒரு சீரியஸ்தன்மை இல்லாமல் போய்விட்டது. எல்லா கட்சி தலைவர்களுமே... வாய்க்கு வந்ததை எல்லாம் உளறி கொட்டிக் கொண்டு... உடனே கூட்டத்தில் சலசலப்பு ஏற்பட்ட உடன் சுதாரித்து தலையை சொரிந்து கொண்டு.. பார்க்கவே கன்றாவியாக உள்ளது!

எந்த கட்சியில் கூட்டணி வைத்திருக்கிறோம், எந்த கட்சிக்கு எந்த சின்னம், எந்த கட்சியின் வேட்பாளருக்காக பிரச்சாரம் செய்ய வந்திருக்கிறோம் என்று கூட தெரியாமல் மக்களை திரட்டி படாதபாடு படுத்தி வருகிறார்கள். ஒரு பக்கம் இந்த கூத்தெல்லாம் நமக்கு எரிச்சலை தந்தாலும், இன்னொரு பக்கம் மீம்ஸ்கள் இதை வைத்து றெக்கை கட்டி பறக்க ஆரம்பித்துவிட்டன.
நிறைய மீம்ஸ்கள் சாட்சாத் திண்டுக்கல்லாருக்குதான்! எந்த பழம் பாமகவுக்கு என்று கூட தெரியாமல் ராமதாஸை மேடையிலேயே வைத்து கொண்டு உளறியதுதான். இதற்கான மீம்ஸில், "என்னங்க பாமக சின்னம் ஆப்பிள்ங்கிறாரு.." என்று ஓபிஎஸ் கேட்க, "முட்டாபய பாமக சின்னம் தேங்காய்.." என்று பதிலளிக்கிறார் முதல்வர் பழனிசாமி!
பா.ம.க வின் தேர்தல் சின்னம் #ஆப்பிள்
— Rajthurai (@Rajthurai1) March 30, 2019
(மாம்பழத்திற்கு பதிலாக ஆப்பிள் பாமக சின்னமாக மாற்றப்பட்டது) pic.twitter.com/G28rVzeVBB
பிரேமலதா விஜயகாந்த்தான் தேமுதிக என்ற கட்சியின் பிரச்சார பீரங்கியே. இங்கிருக்கும் பிரச்சனைகளே கொட்டி கிடக்கும்போது, தேவையில்லாமல் புல்வாமா பிரச்சனைக்கு போய்விட்டார். அது சம்பந்தமாக மாற்றி பேசபோய், ஒருவர் போட்டுள்ள ட்வீட்தான் இது:
"அண்ணியார் இன்னும் புல்வாமா தாக்குதலில் இருந்தே தெளியவில்லை..!! 😂 அதுக்குள்ள ஒரு வெட்டி ஸ்டேட்மெண்ட்..!!" என்று பதிவிட்டுள்ளார்.
#அண்ணியார் இன்னும் #புல்வாமா தாக்குதலில் இருந்தே தெளியவில்லை..!! 😂 அதுக்குள்ள ஒரு வெட்டி ஸ்டேட்மெண்ட்..!!! 🥴#ADMKAlliance #அதிமுககூட்டணி #தேர்தல்யுத்தம்2019 #தேமுதிக pic.twitter.com/FYdjluUO2f
— SHRiNY (@SHRiNY6) March 31, 2019
ஆனா இந்த உளறலையே ஒருத்தர் பாசிட்டிவ்-ஆக எடுத்து கொண்டார். "புல்வாமா தாக்குதல் நடத்திய பிரதமர் #மோடி"..பிரேமலதா டங் சிலிப் -செய்தி டங்கு ஸ்லிப்பானா தப்பா வரும்னு சொல்வாங்க, இங்க உண்மை வருது." என்று போட்டுள்ளார்.
"#புல்வாமா தாக்குதல் நடத்திய பிரதமர் #மோடி"..பிரேமலதா டங் சிலிப்
— Meeran Abdu Ⓜ️🎁Ⓜ️ (@ThalaMeeran) March 29, 2019
-செய்தி
டங்கு ஸ்லிப்பானா தப்பா வரும்னு சொல்வாங்க, இங்க உண்மை வருது.#LokSabhaElections2019 | #ElectionsWithNews18
கடைசியாக இதெல்லாம் பார்த்து செம டென்ஷனாகிவிட்ட ஒருவர், "பாமகவுக்கு #ஆப்பிள் சின்னத்தில் வாக்கு கேட்ட திண்டுக்கல் சீனிவாசன்! #புல்வாமா தாக்குதல் நடத்தியது மோடி தான் - பிரேமலதா! பாஜகாவுக்கு #முரசு சின்னத்தில் வாக்கு கேட்ட பிரேமலதா! #அதிமுகவுக்கு ஓட்டு போடாதீர்கள் என்று டாக்டர் ராமதாஸ்! - குழப்ப கூட்டணி" என்று பதிவிட்டுள்ளார்.
பாமகவுக்கு #ஆப்பிள் சின்னத்தில் வாக்கு கேட்ட திண்டுக்கல் சீனிவாசன்!#புல்வாமா தாக்குதல் நடத்தியது மோடி தான் - பிரேமலதா!
— புறக்கணிப்பீர் அதிமுக கூட்டணி (@thawheednow) March 30, 2019
பாஜகாவுக்கு #முரசு சின்னத்தில் வாக்கு கேட்ட பிரேமலதா!#அதிமுகாவுக்கு ஓட்டு போடாதீர்கள் என்று டாக்டர் ராமதாஸ்!
- குழப்ப கூட்டணி
முன்னாடிலாம் #ADMK வுல செந்தில் , குண்டு கல்யாணம் போன்ற காமெடியன்கள் பிரச்சாரம் பண்ணுவாங்க..இப்ப #திண்டுக்கல்சீனிவாசன் , #ராஜேந்திரபாலாஜி போன்ற அமைச்சர்களே அதை பார்த்துக்கிறாங்க.
முன்னாடிலாம் #ADMK வுல செந்தில் , குண்டு கல்யாணம் போன்ற காமெடியன்கள் பிரச்சாரம் பண்ணுவாங்க..இப்ப #திண்டுக்கல்சீனிவாசன் , #ராஜேந்திரபாலாஜி போன்ற அமைச்சர்களே அதை பார்த்துக்கிறாங்க.
— Vijayaraghavan S (@vijay_thevictor) March 26, 2019
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications