இது பிபா பைனலா இல்ல காந்தாரா படமா? மெர்சல் மெஸ்ஸியும் குருநாதர் மாரடோனாவும்! தெறிக்கும் மீம்ஸ்
சென்னை: கத்தாரில் நடைபெற்ற உலகக்கோப்பை கால்பந்து தொடரின் இறுதிப்போட்டியில் பிரான்ஸ் அணியை வீழ்த்தி அர்ஜெண்டினா அணி வெற்றிபெற்றதை தொடர்ந்து மீம்ஸ் போட்டு இந்திய ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள்.
கத்தாரில் கடந்த மாதம் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் பிபா உலகக்கோப்பை கால்பந்து தொடர் தொடங்கியது. 32 அணிகள் கலந்துகொண்ட இப்போட்டி விறுவிறுப்பாக நடைபெற்றது.
மிகச்சிறிய நாடான கத்தார், பெரும் பொருட் செலவை கொண்டு இந்த தொடருக்கான ஏற்பாடுகளை செய்து பிரம்மாண்டமாக நடத்திய நிலையில் அர்ஜெண்டினா 36 ஆண்டுகள் கழித்து தொடரை வென்று அசத்தி இருக்கிறது.

விறுவிறுப்பான இறுதிப்போட்டி
இதனை மீம்ஸ் போட்டு ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள். குறிப்பாக பிரான்ஸ் வீரர் எம்பாபே 2 வது சுற்றில் இரண்டே நிமிடத்தில் 2 கோல்களை அடித்தது, கூடுதல் நேரத்தின் கடைசி சில நிமிடங்களில் ஒரு கோல் என ஹாட்ரிக் கோல் அடித்தது, இரு அணிகளும் தலா 3 கோல்களை அடித்து பொனால்டி மூலம் வெற்றி முடிவு செய்யப்பட்டது என மிகச்சிறந்த உலகக்கோப்பை போட்டியாக இது மாறியது.

36 ஆண்டுகளுக்கு பின் வெற்றி
உலகின் தலைசிறந்த கால்பந்து அணிகளில் ஒன்றாக கருதப்படும் அர்ஜெண்டினா மாரடோனா காலத்திற்கு பிறகு அதாவது 36 ஆண்டுகளுக்கு பிறகு இந்த கோப்பையை வென்றது உலகளவில் இருக்கும் அதன் ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தி உள்ளது. குறிப்பாக பெரும் ரசிகர் பட்டாளத்தை கொண்டு உள்ள மெஸ்ஸியின் கடைசி போட்டியில் உலகக்கோப்பை வென்றுகொடுத்தது கத்தாரையே உணர்ச்சிக்கடலில் மிதக்க வைத்தது.

காந்தாரா படத்தின் கதை
இதனை சுட்டிக்காட்டி மறைந்த உலக கால்பந்து ஜாம்பவான் மாரடோனாவின் ஆன்மா மெஸ்ஸியிடம் புகுந்து விட்டதாக காந்தாரா படத்தை சுட்டிக்காட்டி மீம் ஒன்றை வெளியிட்டு இருக்கிறார் ஒரு நெட்டிசன். வெற்றிக்களிப்பில் மைதானத்தில் மெஸ்ஸி படுத்துக்கிடந்தபோது அவர் முகத்துக்கு நேரே மாரடோனா எட்டிப்பார்ப்பதைபோல் உலக ரசிகர்கள் போட்டோசாப் செய்ய, அதில் மாரடோனா முகத்தை நீக்கிவிட்டு காந்தாரா முகத்தை வைத்து தக் லைஃப் செய்துள்ளார்கள்.

தனியொருவன் கிலியன் எம்பாப்வே
பிரான்ஸ் நட்சத்திர வீரர் கிலியன் எம்பாப்வேயை வைத்து மற்றொரு மீமை வெளியிட்டு உள்ளார்கள். அதில், ஒரு கிலியன் எம்பாப்வே தனியொரு ஆளாக இருந்து அரக்கத்தனமாக விளையாடும் ஒட்டுமொத்த அர்ஜெண்டினா அணியையும் சமாளித்ததைபோல் கார்ட்டூன் படத்தின் ஸ்க்ரீன் ஷாட்டை வைத்து போட்டோஷாப் செய்து உள்ளனர்.
|
ஓங்கி அடித்த பிரான்ஸ்
மற்றொரு மீமில் பிரான்ஸ் அணி தூங்கிக் கொண்டு இருந்ததாகவும், அர்ஜெண்டினா அதை சீண்டிய மறுநொடியில் ஒரே அடியாக சாய்த்துவிட்டதாகவும் ஒரு கார்ட்டூ வீடியோவை வெளியிட்டு உள்ளனர். ஆனால், போட்டி நடந்துகொண்டு இருந்தபோது வெளியிட்ட பிரான்ஸ் வெற்றிபெறும் என்ற நம்பிக்கையில் அதன் ரசிகர்கள் வெளியிட்ட மீம் இது.

நட்சத்திர வீரர்
இந்த தொடரில் அதிக கோல்களை விளையாசிய பிரான்ஸ் நட்சத்திர வீரர் கிலியம் எம்பாப்வேயை பார்த்து அர்ஜெண்டினா நட்சத்திர வீரர் லையனல் மெஸ்ஸி கண் அடிப்பதை போன்ற படத்தை பகிர்ந்து உள்ள ரசிகர் ஒருவர், நீ கோல்டன் பூட்டை வைத்துக்கொள், நான் கோப்பையை எடுத்துச் செல்கிறேன் என்று டீல் பேசுவதைபோல் பதிவிட்டு உள்ளார்.

மாரடோனாவுடன் சேர்ந்த மெஸ்ஸி
மற்றொரு மீமில் அர்ஜெண்டினா கால்பந்து ஜாம்பவான் டியாகோ மார்டோனா 1986 ஆம் ஆண்டில் வென்ற உலகக்கோப்பையுடன் தயாராக இருப்பதாகவும், அவரோடு 2022 ஆம் ஆண்டில் வென்ற உலகக்கோப்பையுடன் மெஸ்ஸி சேர்ந்துகொள்வதை போன்று சிறப்பான படத்தை வடிவமைத்து உள்ளனர். இது நகைச்சுவையை கடந்து மாரடோனா ரசிகர்களுக்கு உணர்ச்சிகரமானதாகி உள்ளது. உலகக்கோப்பை பற்றி அதிகளவில் பகிரப்பட்ட மீமாகவும் இது இருக்கலாம்.

முதியவரும் எம்பாப்வேயும்
ஒரு முதியவர் தனக்கு நெஞ்சு வலி ஏற்படுவதுபோல் இளைஞரிடம் ஆம்புலன்ஸை அழையுங்கள் என்று சொல்வதைபோன்றும், அவர் செல்போனை எடுத்தவுடன் முதியவர் துப்பாக்கியை காட்டி ஆம்புலன்ஸ் எனக்கில்லை என்று சொல்லும் மீம்மை பதிவிட்டுள்ள ரசிகர்கள், பிரான்ஸ் ஒரு கோல் கூட அடிக்காமல் தோல்வியின் விளிம்பில் நின்றபோது 2 நிமிடத்தில் 2 கோல் அடித்த எம்பாப்வேயுடன் ஒப்பிட்டு உள்ளார்.

ஜியோ சினிமாவுக்கு டாட்டா
இந்தியாவில் இந்த உலகக்கோப்பை தொடரை ஜியோ சினிமா செயலியில் கால்பந்து ரசிகர்கள் பார்த்து வந்தனர். ஆனால், அந்த செயலி சரியாக இல்லை என்றும், இடையிடையே தடைபடுவதாகவும் பயனர்கள் குற்றம்சாட்டி வந்தனர். இந்த நிலையில் கால்பந்து உலகக்கோப்பை முடிந்தவுடன் அதை போனில் இருந்து நீக்குவதாக மீம் வெளியிட்டு உள்ளார்கள்.
-
"பாகிஸ்தானுக்கு தண்ணீர் கொடுக்க முடியாது.." சர்வதேச அரங்கில் லெப்ட் அண்ட் ரைட் வாங்கிய இந்தியா! -
2 கேஸ் சிலிண்டர் இருக்கா? கேஸ் கனெக்ஷனில் செய்ய வேண்டிய ஒரு மாற்றம்.. இல்லாவிட்டால் ரத்தாக வாய்ப்பு -
மோடியின் பணமதிப்பிழப்பால் மாடியிலிருந்து விழுந்து செத்தாரா பாகிஸ்தானின் ஜாவேத் கானானி? துரந்தர் 2! -
விசிக + காங்கிரஸ்.. திமுகவையும் விட்டு வைக்காத இ.கம்யூனிஸ்ட்.. எந்தெந்த தொகுதிகளை கேட்குது பாருங்க! -
தேனியில் 25 சவரன் அடமான தங்க நகையை மீட்க போன பால் வியாபாரி.. கொத்தனார் வேற.. மக்களுக்கு பெரிய பாடம் -
Velmurugan: அதிமுகவின் "3+10" மெகா ஆஃபரால் திக்குமுக்காடிய வேல்முருகன்? திமுகவுக்கு தவாக கெடு! -
தங்கம்.. 15 ஆண்டுகளில் இல்லாத மிகப்பெரிய சரிவு! 2011 செப்டம்பர் 'கிளைமாக்ஸ்' மீண்டும் நடக்கிறதா? -
அதிமுகவை அசிங்கப்படுத்திய பாஜக.. ஆண்ட கட்சிக்கு இவ்வளவு தான் சீட்டா? வயிற்றெரிச்சலில் ர.ரத்தங்கள்! -
என்ன விஜய் இதெல்லாம்? சேலத்தில் மானத்தை வாங்கிய தவெகவினர்.. அப்பட்டமான விதிமீறல்! -
விஜய்க்கு அமித்ஷா மகன் அனுப்பிய மெசேஜ்.. கமலாலயத்துக்கு பனையூர் க்ரீன் சிக்னல்.. தவெக பாஜக அஜென்டா -
சனிக்கிழமை காலையில் இடியை இறக்கிய மத்திய அரசு.. அதிரடியாக உயர்ந்த பெட்ரோல் விலை! ஒரே ஒரு ஆறுதல்! -
திமுகவிடம் பணியக்கூடாது.. உதயசூரியன் வேண்டாம்.. கமலிடம் சொன்ன நிர்வாகிகள்!












Click it and Unblock the Notifications