எல்லாரையும் துரத்திவிட்டுட்டு கடைசி வரைக்கும் காயத்திரியும் ஆர்த்தியும் தான் இருக்குங்க போல!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: பிக்பாஸ் நிகழ்ச்சியை விமர்சித்து நெட்டிசன்கள் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர். விஜய் டிவியில் பிக்பாஸ் நிகழ்ச்சி தொடங்கி 2 நாட்கள் தான் ஆகிறது.

ஆனால் சமூகவலைதளங்களில் அதுகுறித்து பேசாத நபர்களே இல்லை என்று சொல்லும் அளவுக்கு பிரபலமாகிவிட்டது. தன்னை கட்டிப்பிடிக்க ஆளில்லை என ஜல்லிக்கட்டு புகழ் ஜூலி, நடிகர் ஸ்ரீயிடம் கூறுவதை ஒளிப்பரப்பி பற்றவைத்தனர்.

அவ்வளவுதான் நிகழ்ச்சி நன்றாக சூடுபிடித்துள்ளது. இதனை நெட்டிசன்களும் வலைதளவாசிகளும் கண்டமேனிக்கு விமர்சித்து வருகின்றனர்.

பரிதாபங்கள் வேனும்..

அடுத்து பிக்பாஸ் பரிதாபங்கள் வேணும்... என்கிறார் இந்த நெட்டிசன்

அரசியலுக்கு வருவாரா?

பிக்பாஸ் தலைவராக இருக்கும் சினேகன் அரசியலுக்கு வருவாரா என்று தொலைக்காட்சிகள் இன்னும் விவாதங்களை தொடங்கவில்லையா.? என கேட்கிறார் இந்த வலைஞர்..

100 நாள் விவசாயம்..

இப்படி 15 பிரபலங்களை விட்டு 100 நாள் விவசாயம் பண்ண சொல்லி.. யாரு அதிக மகசூல் எடுக்குறாங்களோ அவங்க வின் ன்னு பிக்பாஸ் நடத்தலாம் !!! என்கிறார் இந்த நெட்டிசன்..

இரண்டு நாள் தான் ஆகுது..

அடேய் பிக் இரண்டு நாள் தான் ஆகுது... இந்ந கலாய் கலாய்க்குறானுக... என்கிறார் இந்த நெட்டிசன்..

விவசாயி வீட்டுக்கு அனுப்பி..

15 பிரபலங்களை சொகுசு வீட்ல அடைச்சி வீடியோ போடுறதுக்கு பதிலா, அதோ 100 நாள் விவசாயி வீட்டுக்கு அனுப்பி வீடியோ போடுங்க பார்க்கலாம்... என்கிறார் இந்த நெட்டிசன்..

எல்லாரையும் துரத்திவிட்டுட்டு..

அந்த பிக்பாக்ஸ் வீட்டுல எல்லாரையும் துரத்திவிட்டுட்டு கடைசி வரைக்கும் காயத்திரியும் ஆர்த்தியும் தான் இருக்குங்க போல என்கிறார் இந்த நெட்டிசன்..

அதைக்கூட காட்டுவாங்களோ

விட்டா கக்கூஸ் போறதைக்கூட காட்டுவாங்களோ? என கேட்கிறார் இந்த நெட்டிசன்

ரத்தம் வரலைன்னா சரி

பிக்பாஸ் மாதிரி இல்லை... வேற ஏதோ மாதிரி இருக்கு.. ரத்தம் வரலைன்னா சரி.. என்கிறார் இந்த வலைஞர்..

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Netizens criticizing BigBoss program on Vijay tv. public says everything drama. And some are says Actress Aarthi and Gayathri Rahuram will trace out all.
Please Wait while comments are loading...