"கருப்பன் வரான்.. வழிமறிக்காதே" 58 பந்துகளில் சதம் விளாசிய விராட் கோலி.. தெறிக்கும் ஆர்சிபி மீம்ஸ்!
பெங்களூர்: கேகேஆர் அணிக்கு எதிரான போட்டியில் 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ஆர்சிபி அணி வெற்றி பெற்றதோடு, புள்ளிப் பட்டியலிலும் முதலிடத்திற்கு முன்னேறி இருக்கிறது. இதனை வைத்து சோசியல் மீடியாவில் ஆர்சிபி ரசிகர்கள் மீம்ஸ் உருவாக்கி உற்சாகத்தை வெளிப்படுத்தி வருகின்றனர். இதுதொடர்பாக விரிவாக பார்க்கலாம்.
கருப்பு ட்ரெய்லரில் சூர்யா, "கொஞ்சம் நாள் விலகி இருந்தேன்.. அதற்காக நான் யாருன்னு கூட மறந்து போய்ட்டீங்களா" என்று பேசுவார்.. அதில் வரும் சூர்யாவாக விராட் கோலியை மாற்றி, கடந்த 2 போட்டிகளாக டக் அவுட்டாகி விட்டேன்.. அதற்காக நான் யாருனு கூட மறந்துருவீங்களா என்று சதம் அடித்துவிட்டு கேட்பதாக உருவாக்கப்பட்டுள்ள மீம் கருப்பன் வரான் வழி மறிக்காதே ரகம்.

புதுப்பேட்டை படத்தில் எழும்பூர் ஏரியாவை குமார் வசம் ஒப்படைத்த பின், தனுஷ் பின்னால் அவரின் நண்பர்கள் திரண்டு நிற்பார்கள். அதில் வரும் தனுஷாக விராட் கோலியையும், அவரின் நண்பர்களாக ஆர்சிபி அணியையும் மாற்றி உருவாக்கப்பட்டுள்ள மீம் எங்க ஏரியா.. உள்ள வராத ரகம்.

குசேலன் படத்தில் பசுபதியை சந்திக்கும் ரஜினிகாந்த், "என்னுடைய நண்பன் பாலு" என்பார். நேற்றைய ஆட்டத்தில் மணீஷ் பாண்டே பிடித்த டைவிங் கேட்ச் களத்தில் நின்றிருந்த விராட் கோலியை பிரமிக்க வைத்தது. இதனால் மணீஷ் பாண்டேவை பிடித்து விராட் கோலி பாராட்டி என்னுடைய இந்திய யு19 அணியின் நண்பன் என்று சொல்வதாக உருவாக்கப்பட்டுள்ள மீம் எமோஷனல் மொமண்ட்.

விக்ரம் படத்தின் கடைசியில் வரும் ரோலக்ஸ் சூர்யா, "ஸ்க்ராட்ச்ல இருந்து ஸ்டார்ட் பன்றேன்.. இட்ஸ் ஆல் ரைட்.." என்று கெத்தாக சொல்வார். அதுபோல் கடந்த 2 போட்டிகளாக டக் அவுட்டாகி ஏமாற்றம் அளித்த விராட் கோலி, ஸ்க்ராட்ல இருந்து ஸ்டார்ட் பண்றேன் என்று சொல்லி சதம் விளாசியதாக உருவாக்கப்பட்டுள்ள மீம் கெத்து மொமண்ட்.

யூடியூப் பிரபலம் ஒருவர் ஆயுத பூஜையின் போது கேமராவுக்கு சூடம் ஏற்றி கொண்டாடுவார். அதுபோல் விராட் கோலி சதம் விளாசியதை அவரது ரசிகர்கள் சூடம் ஏற்றி விராட் கோலிக்கு ஆரத்தி எடுத்து திருஷ்டி பூசி கொண்டாடுவதாக உருவாக்கப்பட்டுள்ள மீம் எங்க கிங் ஃபார்முக்கு வந்துட்டாரு ரகம்.

-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications