இஞ்சி டீ, கிரீன் டீ கேள்விப்பட்டிருக்கேன்.. அதென்னங்க பெஸ்டீ?
சென்னை : 90ஸ் கிட்ஸ்களை வைத்து வழக்கம்போல் நகைச்சுவையான மீம்ஸ்களைப் பகிர்ந்து இணையத்தைக் கலகலக்க வைத்து வருகின்றனர் நம் குறும்புக்கார நெட்டிசன்கள்.
இந்த சீசன், அந்த சீசன் என்றில்லை.. எப்போதுமே சிலவற்றிற்கு மவுசு இருக்கும். அப்படி மீம்ஸ்களில் எப்போதும் அதிகம் கொண்டாடப்படுவது 90ஸ் கிட்ஸ்களைப் பற்றிய மீம்ஸ்கள்தான். அதிலும், குழந்தைப் பருவத்தில் அவர்கள் செய்தவைகளை வைத்தும், 2கே கிட்ஸ்களை வைத்தும் ஒப்பீடு செய்து கலாய்ப்பதென்றால், அது மீமர்களுக்கு கை வந்த கலை.

இப்போதும் அப்படித்தான், "இஞ்சி டீ, கிரீன் டீ கேள்விப்பட்டிருக்கேன்.. அதென்னங்க பெஸ்டீ.. அப்டினா என்னன்னுகூட தெரியாதுங்க!" என்றும், "நீ நல்லா இருக்கணும்னு தான் உன்னை இப்டி அடிச்சு வளர்க்குறோம்" என்றும், தாங்கள் சின்ன வயதில் அடி வாங்கிய கதையில் இருந்து, இப்போது வரை குழந்தை மனமாகவே இருப்பது வரை எல்லாவற்றையும் 90ஸ் கிட்ஸ்களின் மைண்ட் வாய்ஸாகவே மீம்ஸ்களாக்கி இருப்பது ரசிக்கும்படி உள்ளது.
இதோ அப்படியாக சமூகவலைதளப் பக்கங்களில் நம் கண்ணில் பட்ட சில நகைச்சுவையான மீம்ஸ்களின் தொகுப்பு உங்களுக்காக...




















Click it and Unblock the Notifications