"என்ன நல்லதம்பி.. மாற்றம் எப்படி இருக்கு" ரோகித், கோலியால் விரக்தி.. ரசிகர்களின் தரமான மீம்ஸ்!
மும்பை: இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றியை பெற்றுள்ளது. இந்திய அணியின் பவுலிங் மற்றும் பேட்டிங் இரண்டும் சிறப்பாக இருந்தது. இதனை வைத்து சோசியல் மீடியாவில் ரசிகர்கள் உருவாக்கியுள்ள தரமான மீம்ஸை பார்க்கலாம்.
பருத்திவீரன் படத்தில் கஞ்சா கருப்பு ஒரு காட்சியில், "களத்துல வேணா நீங்களா இருக்கலாம்.. ஆனால் ஆட்டத்துல எப்பவும் நாங்க தாண்டி" என்பார். அதில் வரும் கஞ்சா கருப்பாக இந்திய அணியையும், கார்த்தியாக இங்கிலாந்து அணியையும் மாற்றி, டி20ல வேணா நீங்களா இருக்கலாம்.. ஆனா ஒருநாள் கிரிக்கெட்ல எப்பவுமே நாங்க தாண்டி என்று சொல்வதாக உருவாக்கப்பட்டுள்ள மீம் அதாம்ல வர்கீஸ் ரகம்.

மஹான் படத்தில் தனது உயிரைக் காப்பாற்றும் விக்ரமை, நம்மை காக்க வந்த கடவுள்டா என்று பாபி சிம்ஹா சொல்வார். அதில் வரும் விக்ரமாக ஜோ ரூட்டையும், பாபி சிம்ஹாவாக இங்கிலாந்து அணியையும் மாற்றி, இங்கிலாந்து அணியை ஆபத்தில் இருந்து காக்கும் கடவுள்டா என்று சொல்வதாக உருவாக்கப்பட்டுள்ள மீம் ஐயா கருப்பணே வாரும்மய்யா ரகம்.

ரன் படத்தில் விவேக்கிடம் அவரின் அப்பா, "காக்காவை அப்படியெல்லாம் சொல்ல கூடாதுப்பா" என்பார். அதில் வரும் விவேக்காக ரோகித் சர்மா, விராட் கோலியையும், விவேக் அப்பாவாக இந்திய ரசிகர்களையும் மாற்றி, "இப்படியெல்லாம் சாதாரண அவுட் ஆக கூடாதுப்பா" என்று சொல்வதாக உருவாக்கப்பட்டுள்ள தம்பி உனக்கு அவ்வளவுதான் லிமிட்டு ரகம்.

பாஸ் என்கிற பாஸ்கரன் படத்தில், என்ன நல்லதம்பி.. சவால் நியாபகம் இருக்குல்ல.. என் பையன் பாஸ் பண்ண வைக்கிற என்பார். அது போல் ரசிகர்கள் ரோகித் சர்மா, கோலி வந்தால் கம்பேக் கொடுக்கிறோம் என்று ஆவேசம் காட்டி வந்தனர். அவர்களும் சொதப்பிய நிலையில், "என்ன நல்லதம்பி.. மாற்றம் எப்படி இருக்கு" என்று கேட்பதாக உருவாக்கப்பட்டுள்ள மீம் ஆள விடுங்கடா கொய்யால ரகம்.













Click it and Unblock the Notifications