Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

காவ்யா மாறன் செய்த சம்பவம்.. "இனி மூவருக்கும் நீதி கேட்கணும் போலயே,," தரமான சிஎஸ்கே மீம்ஸ்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: 2026ஆம் ஆண்டுக்கான ஐபிஎல் தொடர் மினி ஏலம் அபுதாபியில் நடந்து முடிந்துள்ளது. இந்த மினி ஏலத்தில் அரங்கேறிய சம்பவங்களை கொண்டு சோசியல் மீடியாவில் ரசிகர்கள் மீம்ஸை தெறிக்கப்பட்டு வருகின்றனர். அதில் இருந்து ஜாலியான மீம்ஸை இதில் பார்க்கலாம்.

memes csk ipl auction 2026

படிக்காதவன் படத்தில் பெண் பார்க்கும் செல்லும் தனுஷிடம் அவரின் அண்ணி, "ராக்கி இவளுக்கு சாப்பிட வாங்கி கொடுப்பதற்காகவே நீ வேலைக்கு போகணும் போலவே" என்பார். இதனை கேட்டு தனுஷ் திருதிருவென முழிப்பார்.

அதனை அப்படியே சிஎஸ்கே ரசிகர்களுக்கு மாற்றி, ருதுராஜ் கெய்க்வாட், சஞ்சு சாம்சன் மற்றும் சர்ஃபராஸ் கான் ஆகிய மூவரையும் காட்டி, "இனிமே மூன்று பேருக்கும் சேர்த்து பிசிசிஐயிடம் நீதி கேட்கணும் போலயே" என்று சொல்வதாக உருவாக்கப்பட்டுள்ள மீம் சோதனை மேல் சோதனை ரகம்.

memes csk ipl auction 2026

திமிரு படத்தில் வடிவேலுவை சிங்கமுத்து, இனி கூல் டிரிங்ஸ் குடிக்கும் போதெல்லாம் அந்த நியாபகம் தான்டா வரும் என்று புலம்பிக் கொண்டே அடிப்பார். இதனை அப்படியே காவ்யா மாறன் கார்த்திக் சர்மாவின் விலையை ரூ.14.20 கோடியாக ஏற்றிவிட்டார். இதன்பின் கடைசியில் அவர் நக்கலாக சிரித்தார்.

இதனை பார்த்த சிஎஸ்கே ரசிகர்கள், இனி ஐதராபாத் அணியை பார்க்கும் போதெல்லாம் அந்த நக்கல் சிரிப்பு தான்டா நியாபகம் வரும் என்று புலம்பும் வகையில் உருவாக்கப்பட்டுள்ள மீம் இருக்கிற பிரச்சனைல இந்த பிரச்சனை வேற ரகம்.

memes csk ipl auction 2026

பள்ளிக்கூடம் படத்தில் பழைய சட்டையை எடுத்து பார்க்கும் தங்கர் பச்சன், "அருமையா இருக்கேடா.. நானே வச்சுக்கிறேன்டா" என்பார். அதுபோல் சிஎஸ்கே அணிக்காக ஆடிய ரச்சின் ரவீந்திரா, பதிரானா, ராகுல் திரிப்பாட்டி ஆகிய மூவரையும் கேகேஆர் அணி வாங்கிவிட்டு, "அருமையான வீரர்களா இருக்காங்களேடா.. நானே வாங்கிக்கிறேன்டா" என்று சொல்வதாக உருவாக்கப்பட்டுள்ள மீம் மாட்டிக்கிட்டடா பம்பரக்கட்ட மண்டையா ரகம்.

memes csk ipl auction 2026

நானும் ரவுடிதான் படத்தில் விஜய் சேதுபதி, "ரூ.10 லட்சத்தை அப்படியே அள்ளிப்போட்டு கொண்டு வந்தேன் சார்" என்பார். அதுபோல் லக்னோ அணி 9 வேகப்பந்துவீச்சாளர்ளை அள்ளிப் போட்டு கொண்டு வந்தது போல் சொல்வதாக உருவாக்கப்பட்டுள்ள மீம் சிஎஸ்கே ரசிகர்களின் வயிற்றெரிச்சலை கிளப்பாதீங்கடா ரகம்.

memes csk ipl auction 2026

ரெண்டு படத்தில் வடிவேலுவுக்கு வைத்தியம் பார்த்ததற்கு மருத்துவர் பணம் கேட்க, உடனே வடிவேலு, "அந்த ஆட்டோக்கார தம்பி எங்க" என்று தேடுவார். அதுபோல் கேகேஆர் அணிக்காக ரூ.18 கோடியில் வாங்கப்பட்ட பதிரானா, இந்த டீம்ல விக்கெட் கீப்பர் தம்பி யாரு.. என்று தேடுவதாகவும், ஆட்டோக்கார தம்பியாக டிம் செய்ஃபர்ட் மற்றும் ஃபின் ஆலன் தூங்குவதாகவும் உருவாக்கப்பட்டுள்ள மீம் சிக்குனது நீங்கதான்டா ரகம்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+