'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்!
சென்னை: தமிழ்நாடு அரசியல் விவசாயிகளுக்கான பயிர் கடன் தள்ளுபடி, அதிமுக எம்எல்ஏ-க்கள் அடுத்தடுத்து ராஜினாமா, எடப்பாடி பழனிசாமி மற்றும் சிவி சண்முகம் இடையிலான பேச்சுவார்த்தை என்று பரபரப்பாக மாறி இருக்கிறது. இதனை வைத்து சோசியல் மீடியாவில் உருவாக்கப்பட்டுள்ள அரசியல் மீம்ஸை பார்க்கலாம்.

படிக்காதவன் படத்தில் வில்லனை பார்த்து பீதி அடையும் விவேக், திடீரென சூசூ போய்விடுவார். அப்போது தனுஷிடம் விவேக், "பயத்துல சூசூ போய்ட்டேன்.. அதனை மேட்ச் செய்ய தண்ணீரை ஊற்றிக் கொண்டேன்" என்பார். ஆனாலும் பீதியுடன் அமர்ந்திருப்பார். அதில் விவேக்காக காங்கிரஸ் கட்சியினரை மாற்றி, "அதிமுகவுல இருந்து ஒவ்வொருத்தனா ரிசைன் பண்ணிட்டு தவெகல சேர்ந்துட்டு இருக்கானுங்க.. போறபோக்க பார்த்தா நம்ம ஆதரவு இவனுங்களுக்கு தேவைப்படாது போல" என்று பீதி அடைவதாக உருவாக்கப்பட்டுள்ள மீம் மாட்டிக்கிட்டீங்க பங்கு.

ஒரு படத்தில் இஸ்திரி போடும் வடிவேலுவிடம் காலில் விழுந்து அல்வா சீனு வேலையை வாங்குவார். அப்போது நீங்க நல்ல நிம்மதியா தூங்குங்க தெய்வமே.. மத்ததை நான் பார்த்துக்கிறேன் என்பார். அதில் வரும் வடிவேலுவாக விஜய்யையும், அல்வா சீனுவாக ஆதவ் அர்ஜுனாவையும் மாற்றி, நீ ஆலோசனை கூட்டத்துல உட்கார்ந்து உம் மட்டும் கொட்டு என் தெய்வமே.. மத்தத நான் பார்த்துக்கிறேன் என்பதாக உருவாக்கப்பட்டுள்ள மீம் போய் உன் ஓனரை வரச் சொல்லுங்கடா ரகம்.

அண்மையில் அமைச்சர் ரமேஷ் ஒரு கடையில் ஆய்வு செய்த போது, இந்த முறுக்கு இன்றுதான் சுடப்பட்டது என்பதற்கான் ஆதாரம் என்ன என்று கேட்டு அதிர்ச்சி கொடுத்தார். அதற்கு பதில் அளிக்கும் விதமாக தளபதி சத்தியமாக முறுக்கு சுட்ட தேதி 25 மே 2026.. இதற்கான எக்ஸ்பைரி தேதி அடுத்த 30 நாட்கள் என்று சொல்வதாக உருவாக்கப்பட்டுள்ள மீம் எங்களுக்காகவே வருவீங்களாடா ரகம்.

ஒரு படத்தில் இளநீர் கடை போட்டிருக்கும் கவுண்டமணியிடம் இளநீரை திருடும் செந்திலும், வடிவேலுவும் தனிக் கடையை போடுவார்கள். அதில் வரும் கவுண்டமணியாக எடப்பாடி பழனிசாமியையும், செந்திலாக லீமா ரோஸையும், வடிவேலுவாக ஆதவ் அர்ஜுனாவையும் மாற்றி, மாமியார் லீமா ரோஸின் ஆசியுடன் அதிமுக எம்எல்ஏ-க்களை விலைக்கு வாங்கும் லாட்டரி என்று சொல்வதாக உருவாக்கப்பட்டுள்ள மீம் பதனி பதனி ரகம்.












Click it and Unblock the Notifications